மாணவிகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய மகளிர், குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.
ஹரியாணா மாநிலம், சூரஜ்குண்டில் உள்ள மானவ் ரச்னா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
ஆபத்தான சமயங்களில் போலீஸாரின் உதவியை நாடும் வகையில், பெண்களின் செல்லிடப்பேசியில் அவசரகால பட்டனை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் மேனகா காந்தி.
இந்தப் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான தற்காப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு யோசனைகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிகள், சர்வதேச மகளிர் தினமான, வரும் 8-ஆம் தேதி நிறைவு பெறுகின்றன

Aucun commentaire:
Enregistrer un commentaire