வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று
கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர்
எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு
மைல்கல் செங்கை ஆழியன்
என அறியப்படும் க.குணராசா இன்று தனது 75 வது வயதில் காலமானார். சிறிது
காலமாக சுகயீனமுற்று இருந்த அவர், யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் உள்ள
அவரது இல்லத்தில் இன்று மதியம் காலமானார்.
1941 இல் பிறந்த செங்கை ஆழியான், மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு மற்றும் பதிப்புத்துறை எனப் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டி
பறந்த க. குணராசாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும்.
இவ்படைப்புகளில் வாடகைக்காற்று
திரைப்படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது அத்துடன் ஈழநாடு பத்திரிகையில்
வெளிவந்த கிடுகு வேலி அனைவராலும் விரும்ப்பட்ட படைப்பாகும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில்
கல்விகற்ற இவர் பட்டபடிப்பினை பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்றார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவும், யாழ்பல்களைக்கழகப் பதிவாளராகவும்
கடமையாற்றினர் என்பது குரிப்பிடத்தக்கது.அரச இலக்கிய விருது செயலகத்தில்.
நிகழ்வில் சாகித்திய ரத்னா விருது பெற்ற செங்கை ஆழியான் 75 வது வயதில் 28/02/2016 காலமானார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire