dimanche 28 février 2016

உள்ளேயுருக்கும் பிள்ளையானுக்கு இருக்கும் துணிச்சல் வெளியேயிருக்கும் தமிழ் தலைமைகளுக்கு இல்லை ஏன்

உள்ளேயுருக்கும் பிள்ளையானுக்கு இருக்கும் துணிச்சல் வெளியேயிருக்கும் தமிழ் தலைமைகளுக்கு இல்லை-                  
புதிய அரசியல் யாப்பில் தமிழருக்கு அதிகாரம் தரவேணும்,முஸ்லிமுக்கு அதிகாரம் தரவேணும் சமஸ்டி அது இது என்று யாரும் கேட்கலாம்.               
அது சிங்களவருக்கு இலங்கையை வைத்துக்கொண்டு சிறுசிறு துண்டுகளை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்பதுதான்.நீண்டகாலமாக இது சிங்களவருக்கும் புளிச்சுப்போன கதைதான் இது ஒருவகையில் இலங்கை தொடர்ந்தும் சிங்களவர்க்கு உரியதுதான் என்பதை மறுவளமாக , ஒப்புகொள்வதுதான்.                                                                                        
ஆனால் இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் உரியநாடல்ல அது எல்லோருக்கும் உரியது அதை ஒரு மத சார்பற்ற நாடாக மாற்றுங்கள் என்று துணிச்சலாக பிள்ளையானின் கட்சி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.                        
எந்த ஒரு தமிழ் கட்சியும் கேட்க துணியாத இந்த கோரிக்கையை விடுக்க அதுவும் உள்ளேயிருந்து கொண்டு இதற்கு ஒரு அசாத்திய துணிவு வேணும்தான்.                                                                                                                                            சமஸ்டி மாநிலம் என்று நாட்டை பிரித்து அதிகாரத்தை பகிர முடியாமைக்கு அரசாங்கம் ஆயிரம் சாட்டுக்களை சொல்லலாம். ஆனால் பிள்ளயானின் இந்த கோரிக்கையை இந்த நவீன உலகில் ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு நீண்ட காலத்துக்கு தட்டிகழிக்க முடியாது. அதற்கு முன் கை, எடுத்திருக்கின்றது பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி. 

Aucun commentaire:

Enregistrer un commentaire