
மாக்சிசம்,தேசியம்,பெண்ணியம்,பின்நவீனத்துவம் என்றெல்லாம் இலக்கிய
சந்திப்பு வாதப்பிரதிவாதங்களை கடந்து வந்திருக்கின்றது.மனிதஉரிமை
மீறல்களுக்கு எதிராக பாரபட்சமற்ற கண்டனங்களை இச்சந்திப்பு
முன்வைத்துவந்திருக்கின்றது.பத்திரிகையாளர்களின்,எழுத்தாளர்களின்,இலக்கியவாதிகளின்,சமுக
அரசியல் செயல்பட்டார்களின், மீதெல்லாம் அச்சுறுத்தல்களும்,கொலைவெறிகளும்
கட்டவிழ்த்துவிடப்பட்ட ஈழத்து போர்சூழலில் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும்
கருத்துரிமைக்காகவும் இலக்கிய சந்திப்பு உரத்து குரல்கொடுத்து
வந்திருக்கின்றது.சாமானிய மக்கள் மீது சாவுகளை திணிக்கும் யுத்தம்
எப்போதும் வெறுக்கப்பட வேண்டியது, நிறுத்தப்பட வேண்டியது என்பதே இலக்கிய
சந்திப்பின் ஓயாத குரலாக ஒலித்து வந்திருக்கிறது.இலங்கையில் இடம்பெற்ற
முஸ்லிம்கள் மீதான இனசுத்திகரிப்புக்கு எதிராக தமிழ் சமூகத்தின்
குரல்களெல்லாம் மவுனமாக்கப்பட்ட வேளைகளில் தமிழ் மக்களின் மனசாட்சியாக
இலக்கிய சந்திப்பு தனது கடுமையான எதிர்ப்பு குரலை பதிவு செய்திருக்கின்றது
Aucun commentaire:
Enregistrer un commentaire