ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு திருநங்கை தனதும் தன்னை சார்ந்த
திருநங்கைகளின் வலியையும்,வாழ்க்கைப் போராட்டங்களையும் மிக துணிவோடு
வெளிப்படுத்தியிருக்கிறார். திருநங்கைகளின் வலிகளைகளையும் அவர்களின்
இருத்தலுக்கான போராட்டங்களையும்,மனவுளைச்சலையும் தன்னை போன்ற இன்னொரு
திருநங்கையே புரிந்துக்கொள்ள முடியும் என அடிக்கடி இவர்
சுட்டிக்காட்டுவதில் நியாயமிருக்கிறது. ஏனெனில் இவர்களுக்கான
அங்கீகாரத்தையும், அடைக்கலத்தையும் இவர்களை தவிர வேறெவரும் இவர்களுக்கு
இலகுவில் கொடுத்துவிட முன் வரப்போவதில்லை.
இலக்கிய தளத்தில் இந்நூல் பேசப்படுவதற்கான காரணம் தன்னுணர்வுகளோடு தமக்கான
உரிமைகளை வென்று விட குரல் கொடுத்திருப்பது ஈழநிலா என்ற திருநங்கை என்பதால்
தான். மூன்றாம் பாலினத்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்,சமூக பார்வையில்
அவர்களின் நிலைப்பாடு,உணர்வுகளோடு மல்லுக்கட்டும் அவர்களது
தவிப்பு,ஏக்கம்,காதல் என அத்தனை விடயங்களையும் அணுகி அலசியிருக்கிறார்
ஈழநிலா.
அத்தோடு தென்னிந்திய சினிமாக்களில் இவர்களை கொச்சைப்படுத்தும் மனநிலை மாற
வேண்டுமென்பது அனைத்து திருநங்கைகளின் சார்பாக இவர் வைக்கும்
கோரிக்கையாகவும் இருக்கிறது. இலக்கிய ஆர்வலர்கள் "மூன்றாம்பாலின் முகம்"
என்ற இந்த ஆய்வுக்கட்டுரை நூலை நிச்சயம் வாசிக்க வேண்டும்.இது பேசப்படாத
பொருள்.நிச்சயம் பேச வேண்டிய விடயம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire