ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரின் பல பகுதிகளை அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அடிக்கடி வெளிநாடுகளை சேர்ந்தவர்களை கடத்திவரும் தீவிரவாதிகள் உரிய பிணைத்தொகையை பெற்றுகொண்டு பின்னர் விடுதலை செய்கின்றனர். இந்த நிலையில்,கடந்த மார்ச் 4-ந்தேதி, ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரில் அமைந்த அன்னை தெரசா என்ற முதியோர் தொண்டு நிறுவன இல்லத்தில் புகுந்த தீவிரவாதிகள், பாதிரியார் உழுன்னல்லிலை கடத்தினர்.
பாதிரியாரை மீட்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்து இருந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதியான புனித வெள்ளி என்று சிலுவையில் அறையப்பட்டு பாதிரியார் உழுன்னல் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த வாரம் ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் உழுனலில் புனித வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையைப்பட்டு கொடூரமான சிறையில், கொலை செய்யப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிரியார் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்து இருந்த நிலையில், பாதிரியார் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire