காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்
தொடர்பாளர் குஷ்பூ டெல்லியில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மற்றும்
துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது, குஷ்பூவின் இந்த டெல்லி பயணம் குறித்த
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி
சார்பாக போட்டியிட விரும்புபவர்களை தேர்வு செய்வது குறித்து கட்சி
மேலிடத்துடன் கலந்து பேசி முடிவெடிப்பதற்காக வந்தாக தெரிவித்தார்.
இந்த தேர்தலில் பேட்டியிட விரும்புபவர்கள்
மெரிட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், உட்கட்சிப்
பூசல் இதில் இருக்காது எனறும் தெரிவித்தார்.
மேலும், விஜகாந்த் சட்டமன்ற தேர்தலில்
தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது எங்களுக்கு ஷாக்காக இல்லை
என்றும், அது அவரது விருப்பம் என்றும், இதனால் காங்கிரஸ் கட்சிக்கோ திமுக
கூட்டணிக்கோ எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire