லாகூரில் உள்ள பூங்காவில் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடிவிட்டு பொழுதுபோக்க வந்திருந்த மக்கள் மீது தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 72 பேர் உயிரிழந்தனர்.முன்னதாக, அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் நடைபெறும் அணு பாதுகாப்பு மாநாடு 2016-ல் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், போகும் வழியில் இங்கிலாந்துக்கு சென்று அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூனை இன்று (திங்கட்கிழமை) சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுபோல் நவாஸ் ஷெரிப் இன்று இங்கிலாந்துக்கு செல்ல மாட்டார் என பாகிஸ்தான் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தரப்பில் இன்று காலை தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பின் அமெரிக்கா பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 31-ம் தேதி நடைபெறும் நான்காவது அணு பாதுகாப்பு மாநாட்டில் அவர் கலந்து கொள்ள மாட்டார். லாகூர் தாக்குதல் குறித்து நவாஸ் ஷெரீப் உரையாற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த தகவலை பாகிஸ்தான் ரேடியோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. முன்னதாக இந்த அணு சக்தி மாநாட்டி நவாஸ் ஷெரீப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire