அர்ஜென்டினா அதிபர் மாரிசியோ மாக்ரி பராக் ஒபாமாவிற்கு வருகையை கவுரவிக்கும் பொருட்டு இரவு விருந்து அளித்தார். அதில் அந்நாட்டின் தேசிய நடனமான டாங்கோ நடனத்தை கலைஞர் இருவர் ஆடினர்.
எதிர்பாராத விதமாக பெண் நடன கலைஞர் ஒபாமாவை அழைத்து தன்னுடன் ஆட வைத்தார். ஒபாமா ஆடத்தொடங்கியதும் மிட்செல் தனது இருக்கையில் இருந்து எழுந்து அங்கிருந்த ஆண் நடன கலைஞருடன் சேரந்து ஆடத் தொடங்கினார்.
அர்ஜென்டினா அதிபர் வழங்கிய இந்த விருந்தில் நூற்றுக்கணக்கான முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது மனைவி மிட்செலுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக அர்ஜென்டினாவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire