பாலியல் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படையாகப் பேசும் இந்தியப் பெண்கள்!- டாக்டர்.பிரகாஷ் கோத்தாரி பிரபல பாலியல் ஆலோசகர் மற்றும் மருத்துவர்.
‘ஆசியாவின் மிகச்சிறந்த பாலியல் நிபுணர்’ என, ஆசிய பாலியல் ஆய்வாளர்கள்
சங்கம் இவருக்கு விருது வழங்கியுள்ளது. உலக பாலியல் ஆய்வாளர்கள் சங்கத்தின்
‘மேன் ஆப் தி இயர்’ விருதையும் பெற்றுள்ளார். இந்தியாவின் பெருமைக்குரிய
விருதான ‘பத்மஶ்ரீ’ விருதையும் பெற்றுள்ளார். அண்மையில் இவர், ஆங்கில
இதழில் பகிர்ந்துகொண்ட சில செய்திகள் இந்தியப் பெண்களின் பாலியல்
விருப்பங்களையும், அவர்களின் பாலுறவு வாழ்க்கைமுறையையும் சிறிது
வெளிச்சமிடுகிறது. இனி, டாக்டரின் வார்த்தைகள்.
‘‘மனிதருக்கு எந்த விஷயங்களைவிடவும் அதிகக் கேள்விகளையும், சந்தேகங்களையும் கொண்டது செக்ஸ். எனது 45 ஆண்டுகால அனுபவத்தில் மிக மிக அபத்தமான கேள்விகளுக்கும், வினோதமான சந்தேகங்களுக்கும் பதிலளித்துள்ளேன். அதுபோல, இத்தனை வருடங்களில் இருபாலருக்குள் ஏற்பட்டிருக்கும் பாலியல் சமநிலையையும் கவனித்தே வருகிறேன். பெண்கள், தங்களின் கூட்டை உடைத்து இன்றைய நிலைக்கு வந்திருப்பது மகத்தானது. கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தியச் சமூகத்துக்குள் இருந்து இப்படியான வெளிப்பாடுகள் கண்டு அதிசயித்தேன். அவர்கள் தங்களின் தேவைகளையும், உடல் சுகங்களையும் முன்னிறுத்தி பேசத் தொடங்கியுள்ளனர்.
45 ஆண்டுகளுக்குமுன், மும்பை எட்வர்ட் மெமோரியல் ஹாஸ்பிடலில் நான் பாலியல் மருத்துவராக வேலைசெய்யத் தொடங்கியபோதில் ஒரு பெண் வருவதே அபூர்வம். அப்படியே வந்தாலும் 10 கேள்விகளில் ஒரு கேள்விக்கு ஆம்-இல்லை என பதில் சொல்லுவார். அதிலும் பெரும்பாலும் அது கணவனை பார்த்துப் பார்த்தே பதில் சொல்லுவார்கள். சமயங்களில் அது, வார்த்தையாகக் கூட இல்லாமல் வெறும் தலையசைப்பாக இருக்கும். அப்படியே, இந்தக் காட்சியை கட் செய்து 2016க்குள் வந்தால் அண்மையில் ஒரு பெண், அவராகவே தன் கணவனை அழைத்து வந்திருந்தாள். தன் கணவன் மிகச் சீக்கிரமே உச்சநிலையை அடைந்துவிடுவதாகவும், என் ஆலோசனைக்கும், வைத்தியத்துக்கும் தன் கணவன் ஒத்துழைக்காவிடில் உடனடியாக மணவிலக்கு கோரப்போவதாகத் தெரிவித்தார். திருமண உறவுகளில் பாலியலின் பங்கு எந்தளவு உயர்ந்துள்ளது என உணர்த்தும் சம்பவம் அது. தொடர்ந்து வெளிவரும் மணவிலக்குத் தொடர்பான சர்வே-க்களைப் பார்த்தாலே அவற்றில் பெரும்பாலானவை பாலுறவு காரணத்தால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல, பல்வேறு பாலுறவு நிலைகளையும் பெண்கள் வெளிப்படையாக தங்கள் பார்ட்னரிடம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். பத்தாண்டுகளுக்குமுன் பிரபலமாக இருந்த பொஸிசன்கள் இன்று அவுட்டேட் என நினைக்கின்றனர். லிவ் டூகெதர் வாழ்வாக இருந்தாலும், இந்திய நவயுகப் பெண்களின் மனநிலை ஒரு நேரத்தில் ஒரு பார்ட்னருடன் மட்டுமே வாழ விரும்புகிறது. இருப்பினும், காமம் என்று வந்துவிட்டால் அது ஒரு அறைக்குள் விரிந்திடும் கட்டற்ற பெருவெளி என்ற புரிதலுடன் உள்ளனர்.
அலுவலகத்திலோ, வீட்டு வேலையிலோ உழன்றுவரும் பெண்கள், போலியான உச்சநிலையை ஆண்களுக்கு உணர்த்துகிறார்கள் (Fake Orgasam). காரணம், அவர்களுக்காக காத்திருக்கும் வேலைகள், ஓய்வுகேட்கும் உடல் என, பல காரணங்கள் உண்டு. கணவனோ, பார்ட்னரோ மனம் நோகக்கூடாது என்ற எண்ணம் இருப்பதால் உறவுக்கு உடன்பட்டு, அதை விரைவில் முடிக்க ஃபேக்கில் ஈடுபடுகிறார்கள். ஆனால், 30 ஆண்டுகளுக்குமுன் இந்தியப் பெண்களுக்கு இப்படியான ஒன்றை செய்யக்கூடத் தெரியாது. இதுபற்றி முழுப்புரிதல் இப்போது அவர்களுக்கு இருக்கிறது. என்னிடம் ஆலோசனைகேட்டு மின்னஞ்சலில் வந்த ஒரு கேள்வியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அது இந்தியப் பெண்களின் பாலியல் விழிப்புணர்வு குறித்து புதிய பார்வையைக் கொடுக்கும். “டாக்டர் எனக்கு 28 வயதாகிறது. கர்ப்பமாய் இருக்கிறேன். தற்போது, எந்தவகையான பொஸிசன்கள் சரியானவையாக இருக்கும்?” என்ற கேள்விக்கு, ‘‘ஆரம்பகால கர்ப்பம் என்றால் இயல்பானவழியிலும், நாளாகிவிட்டால் வயிற்றுக்குத் தொல்லையில்லாமலும்’’ எனப் பதிலளித்தேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நவநாகரிகப் பெண்ணாகவும் இருந்தாலும் “அய்யோ, நான் கர்ப்பமாக உள்ளேன், இருந்தும் உறவு வைத்துக்கொண்டேன், ஏதும் பிரச்சினை வருமா?’’ என்று பயந்துபோய் வருவார்கள். அப்படி ஒருமுறை அறிவார்ந்த தளங்களில் முக்கியமானவராகக் கருதப்படும் நாவலாசிரியையே வந்தார். ஆனால், இந்தக் கேள்வியிலேயே அனைத்தையும் முடித்துவிட்டார் பாருங்கள். ‘எனக்கு கர்ப்பத்தின்போது உறவு வைத்துக்கொள்வதால் ஒரு பிரச்சினையும் இல்லை எனத் தெரியும்’ என்ற புரிதலோடு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
வேறோரு சர்வே முடிவில், இந்தியாவின் செக்ஸ் சாதனங்கள் மார்க்கெட் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. இதில் ஆண்கள் அதிகம் வாங்குபவர்களாக இருந்தாலும், பெண்கள் அதிகம் செலவுசெய்பவர்களாக உள்ளனர். உச்சகட்டத்தை காலம் தாழ்த்தும் ஜெல்களே அதிகம் ஆண்கள் வாங்குவதாகவும், பெண்கள் கவர்ச்சிகர உள்ளாடைகளை அதிகம் வாங்குவதாகவும் தெரிவிக்கிறது. 2000த்தின் தொடக்கத்தில் இப்படி ஒன்றை யோசிக்கவே முடியாது. செக்ஸ் சாதனங்களின் மார்க்கெட் என்பது ஆண்களின் சந்தையாகவே இருந்தது. தற்போது பொருளாதாரரீதியாய் அது பெண்களை நம்பியுள்ளது.
அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியப் பெண்கள் 30 சதவிகிதப்பேர் போர்ன் படங்களையும், வயதுவந்தோருக்கான இணையதளங்களையும் பார்ப்பதாகத் தெரியவந்துள்ளது. இது, முழுக்க முழுக்க உண்மை. இன்னும்சொல்வதானால், இந்தப் பட்டியல் இன்னும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. அதைப்பார்த்து ‘த்ரீசம்’ போன்ற முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வக்கிளர்ச்சியும் நிறையப் பேருக்கு உருவாகிறது. என்னிடமே அதுபற்றி ஆலோசனைக்கு வந்தனர். ஆனால், அது பரிந்துரைக்கக்கூடியதல்ல எனத் தெரிவித்துவிட்டேன். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய பெண்களிடத்தில் பாலியல் அறிவின் வளர்ச்சி வேகம் சற்று அதிகம்தான்” என்கிறார் டாக்டர்.பிரகாஷ் கோத்தாரி.

Aucun commentaire:
Enregistrer un commentaire