நல்லாட்சியில் கட்சி பேதங்களையும் தொழிற்சங்க பேதங்களையும் மறந்து மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிருத்தி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நானுஒயா, டெஸ்போட் மேல்பிரிவு, கிழ்பிரிவு, கிலோஷா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற 61 வீடுகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம்,
காணிகளை பகிர்ந்தளிப்பதன் முலம் சொந்த காணிகளில் பொதுமக்கள் முறையான பயனை பெற முடியாத நிலமை ஏற்படும் எனவே 50 வீதமான காணிகளை பெருந்தோட்ட மக்களுக்கும் மிகுதியை நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமென பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்து இருந்தார்.
ஆனால் பெருந்தோட்டங்களை முழுமையாக மக்களுக்கே பகிர்ந்தளிக்கும் வகையிலான திட்டத்திற்கு தாம் முழுமையாக ஆதரவு வழங்கபோவதாக, குறிப்பிட்டார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire