mercredi 17 avril 2013

வெளிநாடுகளில் உள்ள 200 தமிழர்களின் சொத்துக்களை விடுதலைப்புலிகள் கையகப்படுத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கில் காணி அலுவலகங்களில் இருந்த அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளில் ஆவணங்களை அழித்து விட்டு, அந்த காணிகளை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த சொத்துக்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

   எந்த உரிமையும் இல்லாத புலிகளின் குடும்பங்கள் அந்த காணிகளுக்கு உரிமை கோரி வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதேவேளை வெளிநாடுகளில் உள்ள 200 தமிழர்களின் சொத்துக்களை விடுதலைப்புலிகள் கையகப்படுத்தியிருந்தனர். அண்மையில் வட பகுதிக்கு சென்ற வெளிநாட்டில் உள்ள ஒருவர், தமது காணி புலிகளுக்கு ஆதரவு வழங்கிய குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. 

   அதேவேளை கொழும்பில் கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான யாழ்ப்பாணத்தில் உள்ள பரம்பரை வீடும் புலிகளினால் கைப்பற்றப்பட்டதாக உறவினர்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

சேவை நேற்று முதல் ஆரம்பம் இலங்கைக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ்

British-Airwaysபிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான தனது விமான சேவையை நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. பிரிட்டிஷ் கெஸ்டிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த பிரிட்டிஷ் எயர்வேஸ்ஸின் அயன்பொய்ட் 777-200 என்ற விமானம் நேற்று நண்பகல் 12.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று வந்திறங்கிய இந்த விமானத்தில் மேற்படி விமான நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிடி விலியம்ஸ், பிரித்தானியாவின் பத்து முன்னணி ஊடகவியலாளர்களும் பயணிகளுடன் வருகை தந்ததாக சிவில் விமான போக்கு வரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். இவ்விமான நிறுவனம் வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் அதாவது திங்கள், வியாழன், சனி ஆகிய மூன்று தினங்களிலும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு சேவை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வட, தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய ஐந்து கண்டங்களிலுள்ள நாடுகளுக்கிடையில் விமான சேவையை நடத்தும் ஒரே நிறுவ னம் இதுவே என்றும் அவர் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இலங்கைக்கு விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதனால் எமது ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறினார். பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் 1998 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடும் நிலநடுக்கம்- 40 பேர் பலி?,


இரானின் தென்கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே இலகுவில் செல்ல முடியாத, சனநெருக்கடி மிக்க சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
பலியாகியிருப்போரின் எண்ணிக்கை குறித்து குழப்பம் காணப்படுகிறது.
எவரும் இதில் உயிரிழக்கவில்லை என்று மாகாண ஆளுநரை ஆதாரம் காட்டி செய்திகள் கூறுகின்றன.
ஆனால், 40 பேர் வரை கொல்லப்பட்டதாக அரசாங்க தொலைக்கட்சி கூறியுள்ளது.
எல்லையில் தமது பக்கமாக 13 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரமும், தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ள அந்த பகுதிக்கு 20 தேடுதல் மற்றும் மீடுபுக் குழுக்களை தாம் அனுப்பியுள்ளதாக இரானிய செம்பிறைச் சங்கம் கூறியுள்ளது.
அந்தப் பகுதியில் பெரும்பாலும் மண் வீடுகளே இருக்கும் நிலையில் அவை இடிந்து விழும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே இதுதான் மிகவும் பெரியது என்று தலைநகர் டெஹ்ரானிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
எனினும் அங்குள்ள புஷேர் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தை கட்டிய ரஷ்ய நிறுவனம், அதற்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பல மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கிழக்கே இந்தியா வரை உணரப்பட்டுள்ளது.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பல கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.
டில்லி தவிர ஜெய்பூர், சண்டிகர், அகமதாபாத் போன்ற நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 மில்லியன் ரூபா வருமானம்


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 12 மணித்தியாலங்களில் ஐந்து மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 7 மணி வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
குறித்த 12 மணித்தியால காலப்பகுதியில் 18,300 வாகனங்கள் குறித்த அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

dimanche 14 avril 2013

தமிழர் புத்தாண்டு - தையா? சித்திரையா?



ஆதியிலிருந்து தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபு கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியது. இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.

இன்று உலகில் தமிழ் இன மக்கள் வாழ்கின்ற நாடுகள் 72. இவர்களின் தொகை ஏறத்தாழப் பதின்மூன்று கோடி. ஆனால் தமிழர்கள் புத்தாண்டு தினத்தை எப்படி கொண்டாடுகிறோம்? தை மாதம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினம் என்று ஒரு சாரரும், சித்திரை கொண்டாட்டம் தான் பழக்கத்தில் இருந்தது என்றும் விவாதம் தொடருகின்றன.

சித்திரையில் தமிழர் புத்தாண்டு தினத்தை ஏற்பவர்கள் ஆரியர்கள் வகைப்படுத்திய 60 ஆண்டுகளையும், அதன் புராண கதைகளையும் ஆராய வேண்டுகிறோம்.

தமிழ்மொழியில் கூட பெயரற்ற மாதத்தை சார்ந்து அதுவே தமிழர்களின் புத்தாண்டு தினம் என்றால் இதைவிட பெரிய அறியாமை இருக்க முடியுமா?

60 ஆண்டுகளின் பெயர்கள் எதுவும் தமிழ் இல்லை. அனைத்தும் சமஸ்கிருதம். இதில் 60 ஆண்டுகளை மூன்று பிரிவுக்குள் கொண்டு வருகிறார்கள் ஆரியர்கள். உத்தம வருஷங்கள் - மத்திம வருஷங்கள் - அதம வருஷங்கள்.

1. உத்தம வருஷங்கள்:

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய

2. மத்திம வருஷங்கள்:

சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ

3. அதம வருஷங்கள்:

பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய

பிரபவ மாதத்தில் தொடங்கி அஷய மாதத்தில் முடியும் 60 பெயர்களுக்கான புராணக் கதையையும் என்னவென்று பாருங்கள்.

அறுபதினாயிரம் பெண்களுடன் கிருஷ்ண பகவான் இருப்பதைக் கண்ட நாரதர் கிருஷ்ணனிடம், "60.000 பெண்களை வைத்திருக்கிறாயே. இதில் ஒரு பெண்ணை எனக்கு தரக்கூடாதா?" என்று கேட்கிறார்.

கிருஷ்ண பகவான், "நான் இல்லாத வீட்டில் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக் கொள்" என்று கூறுகிறார்.

நாரதரும் ஒவ்வொரு வீடாக சென்று பார்க்கிறார். 60.000 பெண்கள் வீட்டிலும் கிருஷ்ணன் இருக்கிறார்.

என்ன செய்வது? நாரதருக்கு மோகம் கொள்ள பெண் இல்லை. மீண்டும் கிருஷ்ண பகவானிடமே வருகிறார் நாரதர். "எங்கு நோக்கியும் தனியான பெண்ணை காணவில்லை என்று கூறிவிட்டு, கிருஷ்ணனிடம் நான் பெண்ணாக மாறி உங்களோடு உறவு கொள்ள விரும்புகிறேன்" என்று விருப்பத்தை நாரதர் தெரிவிக்கிறார்.

அதற்கு இணங்கிய கிருஷ்ணன், "நாரதா யமுனை நதியில் குளித்தால் நீ பெண்ணாக மாறுவாய். பின் உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்" என்கிறார்.

நாரதரும் யமுனையில் குளிக்க, அழகிய பெண்ணாக மாறுகிறார். நாரதரின் அழகில் மயங்கிய கிருஷ்ணன் உறவு கொள்கிறார். தொடர்ந்து 60 வருடங்களாக உடல்உறவு கொள்ள 60 பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

கிருஷ்ணனுக்கும், நாரதருக்கும் ஏற்பட்ட ஓரினச்சேர்க்கை உறவில் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்கள் தான் ´பிரபவ´ மாதத்தில் தொடங்கி அஷய மாதத்தில் முடிகின்றன.

*[இந்த புராண கதையை அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392 ஆம் பக்கத்தில் காணலாம்]

கதையின் ஆபாசத்தை பாருங்கள். இந்த ஆபாசத்திற்கு பிறந்த மாதங்களின் பெயர்களை பாருங்கள். ஆரியனின் உளறலுக்கும், தமிழனுக்கும் என்ன தொடர்பு?

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆண்டுகளை எண்களால் கணக்கிடுகின்றனர். ஆரியனோ கலவியிலும், புரளியிலும் வருடங்களை கணக்கிடுகிறான்.

இந்தக் கணக்கில் நமது வயதை கூட கணக்கிட முடியாதே? முட்டாள் புலம்பலில் அறிவுத்தனத்தை தேட முடியுமா?

இதே கேள்வியை பெரியார் எழுப்பினார். புலவர் மறைமலை அடிகளார் எழுப்பினார்.

தமிழர்கள் அரசியல், பொருளியல், சமுதாயவியல், மொழியியல், கல்வி, கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தொழில், வாணிகம், சமயம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கென்று காலங்கள் இருந்தன. நேரத்தை நாழிகையில் தொடங்கி பருவ காலங்களை 6 வகைக்குள் உட்படுத்தி இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி - என்று வகைப்படுத்தி உழவுத் தொழிலில் பருவ காலத்திற்கேற்ப தானியங்களை பயிர் செய்த தமிழனம் இந்து அடையாளத்தை ஏற்கும் முன் இயற்கையை வணங்கி பூஜித்து தை திருநாளில் தமிழர் பண்டிகையாக கொண்டாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்க, ஆரியர்கள் தமிழர்களின் அனைத்து பண்பாட்டு தளங்களிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி தமிழினத்தின் அடையாளத்திற்கான குறியீடுகளை அழித்தொழித்தது.

தமிழர்களுக்கு இது அவமானமில்லையா?

பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள்; பொங்கல் நன்னாள்

தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டு முறை என்பது தை மாதத்தை முதல் மாதமாகவும், மார்கழியை இறுதி மாதமாகவும் வழக்கில் உள்ள கிழமைகளையும் கொண்டது.

புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் திருவள்ளுவர் காலம் கி.மு.31. எனவே, திருவள்ளுவர் அண்டு கண்டுபிடிக்க ஆங்கில ஆண்டுடன் 31ஐ கூட்டல் வேண்டும். 1892+21ஸ்ரீ202

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.

தமிழ் நாட்டில் தமிழ் இனத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் புலவர்கள் முதலிய அனைவரும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.

ஆனால், ஆரியம் இன்னமும் விடுவதாயில்லை. சித்திரை தான் தமிழர்களின் புத்தாண்டு என்கிறது.

சரி, ஆரியத்தின் வழிக்கே வருவோம்....

தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட வேண்டுமென்றால் ஆரிய ஆபாசக்கதைகளை கூட ஒதுக்கி விடுவோம். 60 ஆண்டுகளுக்கு ஆரிய மொழியில் பெயர்களை வைத்து அதை தமிழன் ஏற்க வேண்டுமென்றால் என்ன காரணம்?

சித்திரை புத்தாண்டை ஏற்கும் தமிழர்கள் சிந்தித்தால் போதும்.
ஆரியர்களின் சூழ்ச்சி புரியும்.

உலக ஆயுத வர்த்தகம் மரக்கறி வியாபாரம் போல யாரும் விற்கலாம் வாங்கலாம் என்ற சூழல்


DollerWopen
உலகில் குண்டூசி விற்கக்கூட சட்ட ஒழுங்கொன்று இருக்கும். ஆனால் உயிரையே கொல்லக்கூடிய ஆயுதம் விற்பதற்கு எந்த ஒழுங்கும் இல்லை. அவரவர்களுக்கு தேவையானபடி, தேவையானவர்களுக்கு ஆயுதங்களை விற்கிறார்கள்; வாங்குகிறார்கள். கேட்கயாரும் இல்லை. எந்த சட்டமும் இல்லை.சுருக்கமாக சொல்வதென்றால் உலக ஆயுத வர்த்தகம் மரக்கறி வியாபாரம் போல யாரும் விற்கலாம் வாங்கலாம் என்ற சூழல் இருந்து வருகிறது. ஆனால் உலக வர்த்தகத்தில் அதிக பணப் புழக்கம் கொண்ட வர்த்தகமாக ஆயுதவிற்பனை இருந்து வருகிறது. உலக ஆயுத வர்த்தகத்தின் பெறுமதி 70 பில்லியன் டொலர் என கணிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் தொடரும் சிவில் யுத்தம் தொடக்கம் மெக்சிகோவின் போதைக் கடத்தல்வரை ஆயுதம் தேவைப்படுகிறது.
இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன. எல்லாம் மனித உரிமை, சமாதானம் பேசும் நாடுகள்தான் ஆயுத விற்பனையில் முன்னணியில் இருப்பதுதான் சுவாரஸ்யமான உண்மை. உலக ஆயுதவர்த்தகத்தில் பாதிக்கும் அதிகமான பங்கை வகிப்பது அமெரிக்காதான். அமெரிக்காவின் பொருளாதாரமே இந்த ஆயுத வர்த்தகத்தில்தான் தங்கியிருக்கிறது. அடுத்தது ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இறங்குவரிசையில் இருக்கின்றன.
இந்த ஆறு நாடுகளின் நடவடிக்கையை பார்த்தாலே உலகின் செயற்பாடுகளை வரையறுத்து விடலாம். இதிலே இருக்கும் ஜேர்மனைத் தவிர்ந்த அடுத்த 5 நாடுகளும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் என்பதை எந்த வகையில் தொடர்புபடுத்துவது என்று புரியவில்லை.ஒன்றும் தேவையில்லை. சின்னப்பிள்ளைக்கும் தெரிந்த பொருளாதார தத்துவத்தை சொன்னாலே இந்த முரண்பட்ட கதாபாத்திரங்களின் சாயங்களை வெளுத்துவிடலாம். அதாவது ஒரு உற்பத்தியை மேற்கொள்வததென்றால் அதற்கான சந்தை தேவை அல்லது சந்தயை உருவாக்க வேண்டும். இது ஆயுத உற்பத்திக்கும் பொருந்தும்.
இப்போது ஐ.நாவில் புதிய நாடகம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. அதாவது உலக ஆயுதவர்த்தகத்தை ஒழுங்கு படுத்துவதற்கு சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட இந்த தீர்மானத்திற்கு 154 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இதிலே அமெரிக்காவும் அடங்குகிறது. எதிராக வாக்களித்த நாடுகள் வட கொரியா, ஈரான் மற்றும் சிரியா ஆகிய மூன்றும் மாத்திரம் தான். சீனா, ரஷ்யா, இந்தியா உட் பட 23 நாடுகள் ஆளைவிட்டால் போதும் என வாக்கெடுப்பிலே பங்கேற்கவில்லை.
பக்கம் பக்கமாக எழுதப்பட்ட இந்த உடன்படிக்கையை சுருக்கமாக சொல்வதென்றால் ஆயுதப் பரிமாற்றங்கள் மூலம் ஆயுதங்கள் மனித உரிமை மீறல்கள், தீவிரவாதம், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அல்லது மனிதாபிமான சட்டங்களை மீறும் செயல்களுக்கு பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது என்பதை அனைத்து அரசுகளும் உறுதிசெய்யும் கடப்பாட்டை பெற்றிருக்கும். அதேபோன்று மனித உரிமையை மீறும் அல்லது போர் குற்றங்களில் ஈடுபடும் நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பதையும் அரசுகள் நிறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேம்போக்காக பார்த்தாலே இது உப்பு சப்பில்லாத ஓர் உடன்படிக்கை என புரிகிறது. இந்த உடன்படிக்கையையே அமெரிக்கா போன்ற நாடுகள் பெரிய இழுத்தடிப்புக்கு பின்னர்தான் ஏற்றிருக்கிறது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் அதைக் கூட ஏற்கவில்லை.கடந்த பல ஆண்டுகளாக மனித உரிமை அமைப்புகள் இந்த உடன்படிக்கையை கொண்டுவர போராடி இருந்தது வேறு கதை. சரி, ஈரான், வடகொரியா, சிரியா ஏன் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. ஈரான் சொன்னது இந்த ஒப்பந்தம் குறைபாடுகள் மற்றும் ஓட்டைகளை கொண்டது என்று. அதேபோன்று வடகொரியா இது ஒரு சமநிலை அற்ற ஒப்பந்தம் என்று நிராகரித்தது.
சிரியாவும் தன்பக்க நியாயத்தை சொன்னது. அதாவது தீவிரவாத ஆயுதக் குழுக்கள் மற்றும் அரசு என்ற நிறுவனம் இல்லாத குழுக்களுக்கு ஆயுதம் செல்வதை இந்த ஒப்பந்தம் தடுக்க வில்லை என்றது. எல்லாம் தனது உள்நாட்டு யுத்தத்தை வைத்து சிரியா சொன்ன காரணம் தான் இது. ஆனால் சுவாரஸ்யம் என்னவென்றால் அமெரிக்கா இந்த ஆயுத வர்த்தக உடன்படிக்கையை வரவேற்று அகராதியை புரட்டி சொற்களை சேர்த்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அமெரிக்க அரசியல் சட்டத்தில் ஆயுதம் வைத்திருப்பதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை இருக்கிறது. அதேபோன்று அமெரிக்காவின் ஆயுத விற்பனை நிறுவனங்களின் அமைப்பான தேசிய ரைபிள் சம்மேளனம் உடன்படிக்கையை நிராகரித்துவிட்டது.
இந்த உடன்படிக்கையின் கீழ் போர் டாங்கிகள், கவச போர் வாகனங்கள், பீரங்கி அமைப்புகள், போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகொப்டர்கள், ஏவுகணைகள், சிறிய ரக ஆயுதங்கள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.சரி ஒன்றும் இல்லாத இடத்தில் ஏதாவது இருப்பதே லாபம் என்ற கருத்துடன் ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த ஆயுத உடன்படிக்கை உண்மையிலேயே அமுலுக்கு வருமா அல்லது அமுல் படுத்துவதற்கு ஒவ்வொரு நாட்டையும் கட்டுப்படுத்த முடியுமா என்று கேட்பவர்களுக்கு உலக அரசியல் இன்னும் புரிய வில்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும்.
அதாவது ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் எந்த விடயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் எந்த நாட்டுக்கும் இல்லை. இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தமும் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான். ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஒப்பந்தம் உலக நாடுகளின் கையொப்பத்திற்கு விடப்படவிருக்கிறது. எதிர்வரும் ஜுன் 03ஆம் திகதி விரும்பிய நாடுகள் கையொப்பம் இடலாம் என ஐ.நா அறிவிக்கும். எவருக்கும் கழுத்தை பிடித்து கையொப்பம் இடச்செய்ய முடியாது. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட ஒரு சில நாடுகள் உள்நாட்டிலும் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யவேண்டி ஏற்படலாம்.
எனினும் உலக நாடுகளின் கைச்சாத்திற்காக ஐ.நா ஜூன் 3ஆம் திகதி தொடக்கம் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். இந்த காலத்திற்குள் 50 நாடுகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டாலே அது அமுலுக்கு வரும்.
குறைந்தது 50 நாடுகள் கைச்சாத்திடாத பட்சத்தில் இந்த ஒப்பந்தம் ஆரம்பத்திலேயே அம்போவாகிவிடும்.ஒப்பந்தம் அழுலுக்கு வந்தாலும் அதில் கைச்சாத்திட்டவர்கள் மாத்திரம்தான் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை கடைப்பிடிக்க கடப்பாடு பெற்றிருக்கும். ஏனைய நாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இவ்வாறான ஒப்பந்தம் இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
இவ்வாறுதான் 1999ஆம் ஆண்டு கண்ணிவெடியை தடைசெய்யும் ஒப்பந்தமும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த வாக்கெடுப்பு அதிக நாடுகளின் வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. ஒப்பந்தத்திற்கும் விடப்பட்டது. ஒப்பந்தத்தில் குறைந்தது 160 நாடுகள் கைச்சாத்திட்டன. ஆனால் ஆட்டிப்படைக்கும் நாடுகளான அமெரிக்க, ரஷ்யா, சீனாவுடன் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. இன்றுவரை இந்த ஒப்பந்தம் செல்லக்காசாகத்தான் இருக்கின்றது. உலகில் கண்ணிவெடியில் அன்றாடம் பலரும் சிக்கி பலிகாயாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 12 பில்லியன் துப்பாக்கி ரவைகள் உற்பத்தியாகின்றன. இவைபூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் இரண்டு தடவை கொலை செய்வதற்கு போதுமானது. ஒவ்வொரு நிமிடத்திலும் உலகில் ஆயுத வன்முறையால் சராசரியாக ஒருவர் கொல்லப்படுகிறார். அதேபோன்று உலகில் சுமார் ஒரு பில்லியன் துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன. இதிலே கால்பங்கு அமெரிக்காவில் உள்ளன.
உலகின் 60 வீதமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வன்முறைகளுக்கு துப்பாக்கிகள் அல்லது ஏனைய இலகு ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலே முக்கால் பங்கு ஆயுதங்களை உலகுக்கு விநியோகிப்பது ஐ.நா பாதுகாப்பு சபையில் இருக்கும் நிரந்தர அங்கத்துவ நாடுகளாகும். அதிலும் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிலிருந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சுமார் 100 நாடுகளின் 1000க்கும் அதிகமான நிறுவனங்கள் சிறியரக ஆயுதங்களை உற்பத்திசெய்து வருகின்றன. ஆனால் முன்னணியில் இருக்கும் 10 ஆயுத உற்பத்தி நிறுவனங்களிலும் 7 நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே இருக்கின்றன.
அதேபோன்று அதிக ஆயுதசொந்தக்காரர்களை கொண்ட நாடும் அமெரிக்காதான். அங்கு சராசரியாக 100 பேருக்கு 88 பேரிடம் ஆயுதம் இருக்கும். என்றாலும் ஆயுத வன்முறையால் அதிகம் பேர் கொல்லப்படுவது அமெரிக்காவிலல்ல. ஹொன்டுராஸ், எல் சல்வடோர் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில்தான் இந்த துப்பாக்கிக் கலாசாரத்தால் அதிக உயிர்கள் பலியாக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால் இந்த ஆயுதக் கலாசாரம் முழு உலகத்தையுமே அபாயகரமாக மாற்றி இருக்கின்றது. தொடர்ந்தும் மாற்றி வருகின்றது. இந்த சூழலில் நுளம்பு கடித்ததைப் போல்தான். ஐ.நாவின் ஒப்பந்தங்களும் அதன் உடன்படிக்கைகளும் இருக்கின்றன.

மக்களின் உரிமைகளை முடக்கியுள்ளது அரசாங்கம்:சஜித் பிரேமதாச!


அரசாங்கம் மக்களின் உரிமைகளை முடக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் மத்திய வங்கியின் வெளியிட்ட ஆண்டறிக்கையில் 6.4வீத பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பொருளாதார வளர்ச்சியின் நலன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர்களுக்கான எரிபொருள் மாணியம், விவசாயிகளுக்கான ஓய்வூதியம், உர மானியக் கொடுப்பனவு,சமுர்த்தி திட்ட பயனர்களுக்கான கட்டாய சேமிப்பு போன்றவற்றை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு


விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களை அனுப்பி ஆய்வு செய்வதுடன் சில சமயங்களில் தாமும் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர்.
இவ்வாறே செவ்வாய்க்கு தற்போது விண்வெளி ஓடங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவை செல்வதற்கு மாதக்கணக்கில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
எனவே இப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக தற்போது பூமியிலிருந்து வெறும் 30 நாட்கள் பயணத்தின் பின்னர் செவ்வாயை சென்றடையக் கூடிய அதிநவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்பானது செவ்வாயில் ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் விரிவுபட்ட ஆய்வினை மேற்கொள்ளவும் உதவும் என்று 

எரிக்கப்பட்டதா?இரண்டு கோடிக்காக உதயன்

இன்று காலை யாழ் உதயன் பத்திரிகை அலுவலகம் இனம் தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டதாக அதன் நிர்வாகம் கூறுகின்றது. இதேநேரம் இந்த எரிப்பின் ஊடாக 2 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேமானந்தன் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி சமன் சிகேரா இன்று தெரிவித்துள்ளார்.

இனம்தெரியாத நபர்கள் எனும் அதேநேரம் இரண்டு கோடி எனக் கூறுவது பலத்த சந்தேகத்தை கிளப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பெறுமதி எந்த வகையிலும் 2 கோடியை நெருங்காது எனத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள் நஷ்ட ஈட்டினை பெறுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நாடகமாக இருக்க முடியுமா என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். 

tna எம்.பியை 4ஆம் மாடிக்கு அழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனுக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது  அவர் இதனைத் தெரிவித்தார். இணையத்தளமொன்றில் செய்தி வெளியிடப்பட்டது தொடர்பாக குற்றவியல் சட்டகோவையின் பிரகாரம் கோப்பாய் பொலிஸாரின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான்காம் மாடிக்கு கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த அழைப்பு விடுப்பதற்கான அறிக்கை நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் தனது கையில் கிடைத்ததனாலும் வாகன சாரதி இல்லாமையினாலும் விசாரணைக்கு செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார். விசாரணைக்கு செல்வதற்கான மாற்று திகதி எடுத்து தருமாறு கோப்பாய் பொலிஸாரிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

samedi 13 avril 2013

புதிய ஆய்வு ;மனிதர்கள் மட்டுமல்ல அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தது


மனிதர்கள் மட்டுமல்ல அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தது என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எத்தியோப்பிய காடுகளில் வசிக்கும் பபூன் ரக குரங்கிற்கு நெருங்கிய பிரிவான கெலடா ரக குரங்கு இனத்திற்கு சொந்தமான, சிக்கலான குரல்கள் மனிதர்களின் ஆதிமொழியை ஒத்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கெலடா குரங்குகள் எழுப்பும் ஒலிகள் வித்தியாசமானவை மட்டுமல்ல, சிக்கலானவையும் கூட. கிப்பன்ஸ், சிம்பன்சி உள்ளிட்ட பெரும்பான்மை குரங்குகள் வெறும் அடிப்படை ஒலிகளை மட்டுமே எழுப்பவல்லவை. இது பரிணாமவியல் அறிஞர்களுக்கு பல நாட்களாக புரியாத புதிராகவே இருந்தது.
அதாவது, பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு மிக நெருங்கிவரும் குரங்கினம், மனிதர்களின் வாய்மொழி ஒலிகளைப் பொறுத்தவரை மிகவும் விலகி இருப்பது ஏன் என்கிற கேள்விக்கு விஞ்ஞானிகளால் இதுவரை விடைகாண முடியவில்லை.
ஆனால் தற்போது தங்களின் இந்த நெடுநாள் கேள்விக்கு விடை காண்பதில் கெலடா குரங்குகளின் ஒலிகள் உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இந்த கெலடா குரங்குகளின் வித்தியாசமான ஒலிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, மனிதர்களின் வாய்மொழி ஒலிகளின் பொதுவான ஒலிவடிவங்களோடு, இந்த கெலடா குரங்குகளின் வாய்மொழி ஒலி அலைகள் மிகவும் ஒத்துப்போவதை இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும் மனிதர்கள் பேசும்போது தாடையும், உதடும் நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து இயங்குவதைப்போலவே, இந்த கெலடா குரங்குகள் ஒலியெழுப்பும்போது, அவற்றின் தாடைகளும், உதடுகளும், நாக்கும் ஒரே நேரத்தில் சேர்ந்து செயற்படுவதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள்.
தங்களின் ஆய்வின் அடுத்த கட்டமாக, கெலடா குரங்குகளின் ஒலிகளுக்கு குறிப்பாக அர்த்தம் ஏதும் இருக்கிறதா என்பதை ஆராயவிருக்கிறார்கள்.
மனிதர்கள் குழுக்களாக வாழும்போது ஒருவர் மற்றவருடன் நெருக்கமாவதற்கு தங்களின் பேச்சைப் பயன்படுத்துவதைப் போலவே, பெருங்கூட்டமாக வாழும் இந்த கெலடா வகை குரங்குகளும் தங்களுக்குள் ஒன்றோடொன்று நெருக்கமாவதற்கு தமது வாயொலிகளை பயன்படுத்துவதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்

பாசிசத்தின் கொடூர முகத்தையும் மீண்டுமொருமுறை உலகிற்கு பறை சாற்றியது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி;திரு சந்திரகாந்தன்


San--3Sanraganthan--1ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இவ்வெருகல் ஆற்றங்கரையோரம் நிகழ்த்தப்பட்ட மிகப்பாரிய சகோதரப் படுகொலையை நினைவு கூருவதற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தை வலியுறுத்தியும், மேலாதிக்கத்திற்கு தொடர்ந்தும் கட்டுப்படமுடியாது எனவும் கூறி இம்மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்று கொண்ட எம் போராளிகளினை மிக மூர்க்கமான தாக்குதலுக்கு ஆணியிடப்பட்டு, அதனால் நயவஞ்சகமாக எமது ஆண் பெண் போராளிகள் 160 பேர் இவ் வெருகல் ஆற்றங்கரையோரத்தில் விதைக்கப்பட்டபாசிசவாதமும், மேலாதிக்கமும் இணைந்து கிழக்கு மண் மீது நிகழ்த்திய அப்படையெடுப்பு, மேலாதிக்கத்தின் மாற்றான் தாய் மனப்பாங்கையும், பாசிசத்தின் கொடூர முகத்தையும் மீண்டுமொருமுறை உலகிற்கு பறை சாற்றியது.
SanraganthanSanraganthan--22004ம் ஆண்டு இதே தினத்தில் கொல்லப்பட்ட எம் 160 வீர மறவர்களும் எவர்களின் இலட்சியத்தை சுமந்து கிழக்கு மண்ணின் விடுதலைக்காகவும், அதன் தனித்துவத்திற்காகவும், பாசிசவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக போராடி உயிர் நீத்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த 260 வீர மறவர்களும், இம்மண்ணின் தனித்துவத்திற்குமாய், தலைமைத்துவத்திற்குமாய் குரல் கொடுத்த ராஜன் சத்தியமூர்த்தி, கிங்சிலி இராசநாயகம் போன்றவர்களும், புத்தி ஜீவிகள், சமூக நலன் விரம்பிகள், பொது மக்கள் என சுமார் 600 பேர் தம்முயிர்களை தியாகம் செய்துள்ளனர்.
இவர்களின் இத்தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தாமல் தொடர்ந்தும் பேணி பாதுகாக்கும் உயரிய பொறுப்பை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் அதன் தொண்டர்களும் நிறைவேற்றுவார்கள் என நான் உறுதி கூறுகின்Nறுன். எம் மீதும் எம் மக்கள் மீதும் சகோதர படுகொலையும் படையெடுப்பும் நிகழ்த்தப்பட்டபோது எமக்காகவோ, எமது ஜனநாயக இயக்கங்களுக்காகவோ யாரும் குரல் கொடுக்கவில்லை.
எம் மீதான சகோதர படுகொலைகளை தடுத்து நிறுத்தவோ, கிழக்கு மாகாண தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளவோ தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று மார்தட்டும் எவரும் முன்வரவில்லை. குறைந்தபட்சம் பாசிசம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இக்காலபகுதியிலாவது பாசிசம் எம் மீது நிகழ்த்திய கொடூரங்களை தண்டிக்க எக் கட்சிகளும் தலைவர்களும் முன்வராமை ஒரு இறுக்கமான மனப்பதிவையே காட்டுகின்றது. இருந்தபோதும் எத் தடைகள் வந்தாலும், எச் சவால்கள் வந்தாலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கிழக்கு மாகாண தனித்துவத்திற்கும் தலைமையை காப்பதிலும் தொடர்ந்தும் அற்பணிப்புடன் செயற்படும். அத்துடன் தியாகம் நிறைந்த உன்னதமான இந்நாளில் நாம் கீழ்வரும் விடயங்களை வலியுறுத்தி உரியவர்கள் அதனை செயற்படுத்த வேண்டுகின்றோம்.
தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான தேவைப்பாடு, யுத்தத்திற்கு பின்னரான ஜனநாயக, மனித உரிமை செயற்பாடுகளிலும் எம் மக்களின் முழுமையான எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்கின்ற நியாயமான ஆதங்கம் எமக்கும் மக்களுக்கும் இருக்கின்றபோதிலும் இதில் அரசாங்கம் கணிசமான தூரம் பயணித்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. விரைவில் எம்மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க அதிகார பகிர்விலும், ஜனநாயக, மனித உரிமை மேம்பாட்டிலும் பூரணமான நம்பிக்கையை எம்மக்களிடம் ஏற்படுத்துவதில் இவ் அரசாங்கம் வெற்றிபெறும் என்று நாம் நம்புகின்றோம். இது மக்களின் அரசாங்கம் ஒன்றின் கடமை என்பதையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகின்றோம்.
வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இன்றைய சூழலில் எம் மக்களின் அபிலாசைகளும் பிரச்சினைகளும் தேசிய எல்லைகளை கடந்து சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது, பிராந்திய அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாகவும் சர்வதேச அரங்குகளில் விவாதிக்கப்படுகின்ற முக்கிய விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. ஒற்றை மைய உலக ஒழுங்கில் எமது பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்டிருப்பது மேலாதிக்கவாதிகளுக்கும், பிற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் களமமைத்து கொடுக்கலாம் என்ற ஐயம் நிலவுகின்ற போதிலும் நாம் இன்னும் வலுமிக்க உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக எமது மக்களின் அரசியல், அதிகார அபிலாசைகளை தீர்ப்பதற்கான காலம் கைநழுவிச் செல்லவில்லை என்று உறுதியாக நம்புகின்றோம்.
கடந்த கால அரசியல், ஆயுத போராட்டங்களின் சில தவறுகளும், பேரினநாத அரச செயற்பாடுகளும்;, உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக எமது மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பங்களை நழுவச் செய்திருந்தன. ஆனால் ஆயுத போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன்றைய சூழலில் எம் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அதிகாரத்திற்கான தேவைப்பாடுகளையும் இதய சுத்தியுடன் வழங்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும் அவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது எம் மக்கள் சார்பான முற்போக்கு சிந்தனையாளர்கள், அரசியல் கட்சிகளும் தமக்குள்ளான பாரபட்சம், வேறுபாடுகளை கடந்து மக்கள் நலனுக்காக குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகள் எனும் இலக்கிலாவது ஒரே கருத்தில் செயற்படுவதும் அம்முயற்சிகளுக்கு ஆதரவு தருவதும் அவசியமாகும்.
சமீப காலமாக எமது நாட்டில் இடம்பெறுகின்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கும், இன நல்லிணக்கத்திற்கும் சவால் விடுகிறன்ற, அவற்றுக்கு அச்சுறுத்தலாக வளர்கின்ற அனைத்துவித செயற்பாடுகளையும், அமைப்புகளையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். கடந்த பல தசாப்தங்களுக்கு மேலாக இன ரீதியான வன்மத்தினால் பாதிக்கப்பட் மக்களின் பொறுப்புமிக்க பிரதிநிதிகள் என்ற வகையில் கடந்தகால கரும்பக்கங்கள் எந்த ரூபத்திலும் எந்த சமுகத்தின் மீதும் பிரயோகிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. குறுகிய அரசியல் சித்தாந்தங்களும் மதவாத சிந்தனைகளும் எமது நாட்டின் எழுச்சியினையும் ஒருமைப்பாட்டையும், வளர்ச்சினையும் சிதைத்துவிடும.; அத்துடன் மேலாதிக்கவாதிகளுக்கும், நவீன காலணித்துவவாதிகளுக்கும் இது வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே பொறுப்புமிக்க எம் ஆட்சியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இன நல்லிணக்கத்திற்கும் சவாலான எவ் விடையத்தையும் அனுமதிக்கக்கூடாது என எமது கட்சி இந்த தியாகம் நிறைந்த எம் மறவர்களை நினைவுகூரும் இந்நாளில் வேண்டிநிற்கின்றது.
இயற்கை விதிகளின்படியும், நவீனத்துவ கோட்பாடுகளின்படியும் இவ் உலகமும், இதன் செயற்பாடுகளும் அமைகின்றன. இங்கு ஆண்டானும் இல்லை அடிமையும் இல்லை, உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை, நிற, இன, மத, மொழி பேதங்கள் அற்ற நாகரீக உலகத்தில் வாழ்கின்றோம். எம் சந்ததிகளுக்கு மற்றவர்களின் உரிமையையும், அபிலாசைகளையும் மதித்து நடக்க வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டும். சிறுபான்மை இன மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அதிகாரத்திற்கான தேவைப்பாடுகளையும் உணர்கின்ற, அவற்றை ஏற்றுக்கொண்டு முழு மனதுடன் வழங்கக்கூடிய தலைமைகள்தான இந்நாட்டின் எதிர்கால சந்ததிக்கு சிறந்த வழிகாட்டிகளாக, ஆசான்களாக வரலாற்றில் நிலைத்திருக்க முடியும்.
அவ்வகையில் ஆறு தசாப்த காலமாக தமது அரசியல் அபிலாசைகளுக்காக போராடி வந்திருக்கின்ற ஒரு சமுகத்தின் அரசியல் ஏக்கங்களை புரிந்துகொண்டு வன்முறையற்ற சுபீற்சமான ஒரு தேசத்தை கட்டியெழுப்ப அம்மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பு கொடுத்து அதன் நியாயத்தன்மைகளை ஏற்றுக்கொண்டு செயற்படுவது பண்புமிக்க தலைவர்களின் கடமையாகும், பல் சமுக கட்டமைப்புக்களையும் கலாச்சாரத்தையும் கொண்ட இத்தேசத்தின் பிற சமுகங்களின் உரிமைகளை மதிப்பது விட்டுக்கொடுப்பும் எம் தேசத்தை பெருமையடையச் செய்யும் அதனை நேக்கியே எமது நாட்டின் தலைமை செயற்பட வேண்டும் என வேண்டுகின்றோம்.

சர்வதேசத்தில் உள்ள புலிகளையும், முன்னாள் போராளிகளையும், தமிழ் மக்களையும் அழிக்க கூட்டமைப்பு சதி செய்கிறதா?

இறுதிக்கட்ட போரின் போது தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகளின் தலைமையையும், புலிகள் போராளிகளையும் பொறுப்பு எடுக்க தவறியதன் மூலம் இறுதிக்கட்டத்தில் ஏராளமான தமிழ் மக்களும், புலிப்போராளிகளும், விடுதலைப்புலிகளின் தலைமையும், தமிழரின் போராட்டமும் அழிந்து போவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதித்திட்டம் தான் காரணமாக இருந்தது என்று நாம் பல தடவைகள்சுட்டிக்காட்டியிருந்தோம். 

தற்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதுடன், தமிழ் மக்களை மீளமுடியாத நிரந்தர அழிவுக்குள் இட்டுசென்றுவிடப்போகிறது என்பதே எமது பெருங்கவலையாக உள்ளது. 

22 பாராளுமன்ற உறுப்பினர் பலம் இருந்தபோது கூட தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் அழிவுச்சமரில் இருந்து மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு வீரமரணம், தமிழ்த்தேசியம் என்ற சொல்லாடல்களை பயன்படுத்தி தப்பித்துக்கொண்டது. 

நாம் முன்பும் கூறினோம், தொடர்ந்தும் கூறி வருகிறோம். ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்காது. இது தமிழ் மக்களின் அவலத்தை காரணம் காட்டி நடைபெறும் சர்வதேச அரசியல் வியாபாரம் இதனை தந்திரமாக கையாளத்தவறினால் பூமராங் போல இது தமிழ் மக்களையே திருப்பித்தாக்கும் என்றோம். அரசாங்கத்தை நோக்கி வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டும் முன்னாள் புலிகளையும், யுத்த வலயத்திலிருந்து மீண்டுவந்த மக்களையும் ஏன் ஒவ்வொரு தமிழனையும் பாதிக்கும் என்று கூறி வைத்தோம். ஆனால் இப்போது நடப்பது என்ன? புனர்வாழ்வு பெறாத சகல போராளிகளையும் இனங்காணும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. கிளிநொச்சியில் உள்ள மக்கள் இதனால் பீதியடைந்துள்ளார்கள். 

இப்படி ஒன்று நடைபெற்றால் சர்வதேசம் தலையிடும் என்றும், அரசாங்கத்தின் மீது சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கும் என்றும் நாடகம் ஆடக்கூடும். கூட்டமைப்பினராகிய உங்களை நோக்கி நான் கூறுகிறேன் உங்களினதும், சர்வதேசத்தினதும் அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு எமது மக்கள் பலிக்கடாவாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். 

ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு பக்கத்தில் ஒரு அலுவலகம் இருக்கிறது. அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தில் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான பிரிகேடியர் சகி என்பவர் பணிப்பாளராக இருக்கிறார். 'வெரைட்டி ரிசர்ச் பிரைவேற் லிமிடெட்' என்பது அந்த நிறுவனத்தின் பெயராகும். அரசியல் தொடர்பான ஆலோசனைகளை பணத்திற்கு விற்பனை செய்யும் மேற்படி முகவர் நிறுவனத்துடன் தமிழ்த்; தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கும், கள்ளத்தொடர்புகளுக்கும் என்ன காரணம் என்று போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம். இராணுவப்புலனாய்வு அமைப்புடன் தொடர்புடைய நிறுவனத்தில் நீங்கள் தொடர்பு வைத்து ஆலோசனை பெறுவது எதற்காக? தமிழ் மக்களை காப்பாற்றவா? அல்லது, தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து உங்கள் பதவிக்கதிரைகளை காப்பாற்றிக்கொள்ளவா? 

இனியும் இரட்டை வேடம் போட்டு தமிழ் மக்களை ஏமாற்றினால் உங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே உங்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவோம். 


நன்றி
இவ்வண்ணம் 
உண்மையுள்ள,
வி.சகாதேவன்
தலைவர் 
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.tna

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்நாட்டு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதன் மூலமே அவர்கள் செய்த தவறுகளை உணர்ந்துள்ளார்கள் என்பதை உணர முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்த்துள்ளார் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது மெளனம் சாதித்ததுடன், இந்திய வீட்டுத் திட்டத்திலிருந்துஒரு வீட்டையேனும் முஸ்லிம்களுக்கு தரவிரும்பாத சம்பந்தன் முஸ்லிம்கள் பற்றி பேசுவது கேலிக்குரிய விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நான்கு திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில் முஸ்லிம்களை கொலை செய்தவர்கள், விரட்டியடித்தவர்கள் முஸ்லிம்கள் பற்றி பேசஅருகதையற்றவர்கள். எனவே சம்பந்தனின் பேச்சுக்கு ஒரு தடவையல்ல சகல தடவைகளிலும் குறுக்கீடு செய்வேன் என்றார்.

வடபகுதி மக்களுக்காக சம்பந்தன் எதனையும் செய்யவில்லை. மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 226 பில்லியன் ரூபாவை யாழ் அபிவிருத்தி பணிகளுக்காக செலவு செய்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையில் முஸ்லிம்கள் பற்றி பேசிய போது நான் மற்றும் காதர் ஆகியோர் எதிர்த்ததாக தமிழ் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

நாம் எதிர்த்தோம் என்றால் அதற்கு காரணம் உள்ளது. புலிகள் காத்தான்குடி பள்ளி வாசலில் முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது சம்பந்தன் ஐயா எதுவும் பேசவில்லை. இந்தியாவின் 56 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் முஸ்லிம்களுக்கும் வீடு கொடுங்கள் என்று ஆரம்பத்தில் சுபியான் மொளலவி கேட்ட போது சம்பந்தன் ஐயா விரும்பவில்லை. அங்கே சுபியான் மெளலவி யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றி பிரச்சினைகளுக்கு குரல் எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்.

இந்திய எம்.பிக்களின் இலங்கை விஜயமானது ஜயலலிதா அம்மாவுக்கும், கருணாநிதிக்கும் கன்னத்தில் அறைந்தது போன்ற செயற்பாடாகும். இந்திய எம்.பிக்கள் குழு பாராளுமன்றத்திற்கு வருகைதந்தார்கள். அதேபோன்று ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை பார்வையிட யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்.

பிரபாகரன் படுகொலை செய்யப்படும் வரை ஜெயலலிதா துப்பாக்கி குண்டுகள் துழைக்காத கவசஉடை அணிந்திருந்தார். தற்போது தனி நாடு குறித்து பேசுகின்றார். இது ஆடு நனையிது என்று ஓநாய் அழுவுது போன்றதாகும். மத்திய விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் கிழக்கு முஸ்லிம்கள் சந்தோசமடைகின்றனர், விரும்புகின்றனர். ஏனெனில் வருடாந்தம் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற செல்லும் போது இலகுவாக செல்ல முடியும்.என்று குறிப்பிட்டார்.

jeudi 11 avril 2013

உண்மை நிலைமையை நேரில் வந்து பார்க்குமாறு இலங்கையின் நடிகர், நடிகைகள் சத்தியாகிரகம்...


தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களைக் கண்டித்தும் இலங்கையின் உண்மை நிலைமையை நேரில் வந்து பார்க்குமாறும் வலியுறுத்தி இலங்கையின் நடிகர், நடிகைகள் இன்று சத்தியாகிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். தமிழகத்தில், இலங்கைக்கு எதிராக தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் அண்மையில் முன்னெடுத்த போராட்டத்தைப் போன்றே இன்று இந்த சத்தியாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு – குஷான் பதிராஜ)



விரட்டியடிக்க ஜெயலலிதா தீவிரம் தமிழகத்திலிருந்து புலிகளை ;விக்கிலீக்ஸ்

புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க ஜெயலலிதா தீவிரம் காட்டியதாக  USA கூறியது  விக்கிலீக்ஸ்
 தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க, முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டியதாக அமெரிக்கா குறிப்பி;ட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, புலிகளை ஒடுக்குவதற்கு முயற்சித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலி ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்களை சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதற்குக் கூட ஜெயலலிதா அஞ்சவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை அமெரிக்கத் தூதுரக அதிகாரிகள் இரும்புப் பெண என வர்ணித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதராக் முதல்வர் கருணாநிதி செயற்பட்டதாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த க்ருணாநிதி, 1989ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

13ஆவது திருத்தத்தை அமூல்படுத்தவும் வலியுறுத்தல்


கொழும்புக்கு சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவிடம் பிரதமர் மன்மோகன் கடிதம் ஒன்றை வழங்கியதாக தெரியவருகின்றது. அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கடிதத்தை நாடாளுமன்ற குழு கையளித்ததாகவும் அந்த கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கொடுப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊடாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.
13ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சபைத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்தாகவும் இந்திய செய்தியாளர்களை மேற்கோள்காட்டி கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை புதுடில்லிக்கு வருமாறு அந்த கடிதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன
இதேவேளை இந்திய நாடாளுமன்ற குழுவின் பயணம் பற்றிய செய்திகள், தகவல்கள் இலங்கை அரசாங்கத்தினால் மூடிமறைக்கப்படுவதாகவும் கொழும்பில் சிங்கள ஆங்கில ஊடகங்களும் இந்திய நாடாளுமன்ற குழுவினர் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

விசாரணை நடத்தலாம்”இந்தியாமீது இலங்கை

- இந்திய முன்னாள் ராணுவ அதிகாரி ஹரிஹரன்
விடுதலைப்புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சியளித்தது குறித்து சர்வதேச நாடுகள் விசாரிக்கவேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அப்படியான விசாரணையை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷேவே நடத்தலாம் என்று கூறுகிறார் இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் இலங்கையின் இறுதிப்போரின் போது நடந்த போர் குற்றங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரும் சர்வதேச நாடுகள், அப்படியானதொரு விசாரணையை, இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியளித்த காலத்திலிருந்து துவங்கவேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோதாபயவின் இந்த கோரிக்கையானது, இலங்கைக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அரசு மீது அதிகரித்துவரும் அழுத்தங்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஹரிஹரன். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மட்டுமல்லாமல், இலங்கையின் வேறுபல தமிழ்ப் போராளி குழுக்களுக்கும்கூட 1980களில் இந்திய அரசு பயிற்சியளித்ததாக தெரிவித்த ஹரிஹரன், அந்த பிரச்சனையெல்லாம் 1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். ஆனால் இப்போது சர்வதேச சமூகமும், ஐநா மன்றமும் கோருவது 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவேண்டும் என்று தானே தவிர, 25 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துபோன விவகாரங்களை அல்ல என்று கூறிய ஹரிஹரன், அவற்றை விசாரிக்க வேண்டும் என்று உண்மையிலேயே கோத்தாபய ராஜபக்ஷே விரும்பினால் ஐநாவிடம் அதற்கான கோரிக்கையை முறையாக வைக்கலாம் என்றும், ஒருவேளை ஐநாவோ சர்வதேச நாடுகளோ இதை விசாரிக்க மறுத்தால், இலங்கை அரசாங்கமே அப்படியானதொரு விசாரணையை நடத்தலாம் என்றும் தெரிவித்தார்.

mercredi 10 avril 2013

மதவாதத்தை வைத்து அரசியள் செய்ய தயாராகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைமைக்கு கண்வைத்து நிற்கும் மாவை சேனாதிராஜா யாழ் முஸ்லிம் தலைமைகளை சில தினங்களுக்கு முன்னர் யாழ் நாவாந்துறை பெரிய பள்ளிவாயலில் சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியுள்ளார். இச்சந்திப்பில் யாழ் முஸ்லிம்கள் சார்பில் பள்ளிவாயல் மௌலவி , மஹ்ருப் மொகமட், அஜ்மால், இர்பாண், நஞாட், நிக்காஸ், நிலாம் லாபீர் , தாகிர் என்போருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சிவிகே. சிவஞானமும் கலந்து கொண்டுள்ளனர். 

இச்சந்திப்பின்போது, வடக்கில் த.தே.கூ முஸ்லிம்களுடன் இணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுது பற்றி பேசப்பட்டுள்ளது. முஸ்லிம் தரப்பினர் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு இணங்கினால் மாகாண சபையைக் கைப்பற்றியவுடன் கிளி முல்லைத்தீவு பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு மேலதிக காணிகளை வழங்குவதற்கு தாங்கள் தயார் என்பதுடன் முஸ்லிம்களுக்கு மாகாண சபையில் சரி அரைவாசி அமைச்சுக்களையும் தரமுடியும் என மாவை சேனாதிராஜா உறுதிவழங்கினார் என பள்ளிவாயல் வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது. 

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதேசங்களில் முஸ்லிம்களின் விகிதாசாரத்தை பெருக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் 17000 முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு றிசாட் பதுயுத்தீன் பல்வேறு சூட்சுமங்களை மேற்கொள்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்று வருவதும் யாவரும் அறிந்த விடயம். 

றிசார்ட் பதுயுதீனின் மேற்படி திட்டமிட்ட நில அபகரிப்பு , முஸ்லிம்களின் விகிதாசாரத்தினை வடக்கு பகுதியில் அதிகரித்தல், வடகிழக்கின் முக்கிய நகர்ப்பகுதிகளை கைப்பற்றல், அப்பிரதேசங்களுக்கான வர்த்தகங்களை முஸ்லிம் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் என்ற முயற்சிகளை தடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இணைந்திருக்கின்ற தமிழ் தரப்பினர் முயன்று வருகின்றனர். 

இதன் பொருட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் அங்குள்ள பெண்கள் அமைப்புக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டிருந்தனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது. 

நுpலைமைகள் இவ்வாறு இருக்கின்றபோது ஆசனங்களைக் கைப்பற்றிக்கொள்வதற்காக மாவை முஸ்லிம் தரப்புடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளமை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 



கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம்களை கூட்டாட்சிக்கு வருமாறு மண்டாடியும் அவர்கள் உதறித்தள்ளிய துரோகத்தை மறத்து மீண்டும் ஒருமுறை வட மாகாண மக்களை ஏமாற்ற இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த தருணத்தில் முஸ்லிம் தரப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சி அமைக்க வாருங்கள் அதிலுள்ள அனைத்து அமைச்சுக்களையுமே உங்களுக்கு தருகின்றோம் என்று என்று எமது தலைவர் அழைத்தபோதும் அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகியிருக்கின்ற ஜனா எனப்படுகின்ற கருணாகரன் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு தமிழர் தரப்புடன் முஸ்லிம்கள் இணைந்து கொள்ளமாட்டார்கள் என்பதும் அவர்கள் ஆழும் தரப்புடன் இணைந்தே தமது தேவைகளை பூர்த்தி செய்வர் என்பதும் நன்கு தெரிந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர் என்பது மட்டும் உண்மை.

அவ்வாறுதான் முஸ்லிம்கள் தமிழர் தரப்புடன் இணைவதாயின் அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய சலுகைகள் மற்றும் அதிகாரங்களுக்கு அதிகாமாக கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தகப்பட்டாலே அது சாந்தியமாகும். அவ்வாறாயின் த.தே.கூ தமது அதிகாரங்கள் மற்றும் கதிரைகளை தக்கவைத்துக்கொள்வதற்காக தமிழரின் சகலவற்றையும் முஸ்லிம்களுக்கு தாரைவார்க்க தயாராகின்றது என்ற உண்மையை மக்கள் உணரவேண்டும். 

இந்தியா வெகுவிரைவில் துண்டு துண்டாகப் பிரியும்;சூரியப் பெரும

மன்மோகன் சிங் என்ற தவளையின் ஆட்சியே இன்று இந்தியாவில் உள்ளது!வெகுவிரைவில் துண்டு துண்டாகப் பிரியும்
 இந்தியாவில் இன்று இருப்பது மன்மோகன் சிங் என்ற தவளையின் தலைமையிலான பலவீனமுற்ற ஆட்சியாகும். வெகுவிரைவில் இந்தியா துண்டு துண்டாகப் பிரியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி. ஜே.ஆர். சூரியப் பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெகுவிரைவில் சீனா பலமுள்ள நாடாக பொருளாதாரத்தில் முதலிடத்திற்கு உயரும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உற்பத்தி வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சூரியப் பெரும எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற பல தலைவர்கள் காணப்பட்ட இந்தியா இன்று பலவீனமடைந்துள்ளது. எதிர்காலத்தில் துண்டு துண்டாகப் பிரியும் ஆபத்தையும் அந்நாடு எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் இன்று மன்மோகன் சிங் என்ற தவளையின் தலைமையிலான அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. பலவீனமடைந்த ராஜ்ஜியமாக மாறி வருகிறது. ஆனால் சீனா படிப்படியாக உயர்ந்து இன்று உலகின் பலமுள்ள நாடாக பொருளாதாரத்தில் முதன்மை நாடாக மாறுவது வெகு தூரத்தில் இல்லை.
அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் மிக விரைவில் வீழ்ச்சி காணும்.
ஆசியா தலை நிமிரும் காலம் நெருங்கிவந்துவிட்டது. அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது. அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வெள்ளையர்கள் தயாரில்லை. எனவேதான் இரண்டாவது தடவையாகவும் ஒபாமாவை ஜனாதிபதியாக்கினார்கள்.
அமெரிக்காவின் ''திதியை'' நடத்தும் பொறுப்பை அமெரிக்கர்கள், வெள்ளையர்கள், கறுப்பான ஒபாமாவிடம் கையளித்துள்ளனர்.
ஐ.நாவுக்கோ, அமெரிக்காவுக்கோ நாம் பயமில்லை. இவர்களை காலால் உதைத்து வாய்க்காலில் தள்ளிவிட்டு ஆசியாவை கட்டியெழுப்பும் தலைமை எமக்குக் கிடைத்துள்ளது என்றும் சூரியப் பெரும எம்.பி. தெரிவித்தார்.

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு கிடையாது;தயான்

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு கிடையாது என முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற போதிலும் ஏனைய இன மத சமூகங்களின் நம்பிக்கைகள் ஒடுக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒரு பகுதியினர் அல்லது சில அமைப்புக்கள் சிங்கள பௌத்த கடும்போக்குவாதத்தை நிலைநாட்ட முயற்சித்தால் அது பாதக நிலைமைகளையும், பிரிவினைவாதத்த தூண்டக் கூடிய வகையிலும் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகல இன சமூகங்களினதும் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுப்பதன் மூலம் முரண்பாடுகளை களைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனின் சிறுபான்மை கடும்போக்குவாதமும், சிங்கள சிவில் சமூகத்தின் சில தரப்பினரின் பெரும்பான்மை கடும்போக்குவாதமுமே யுத்தம் ஏற்படக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் ஊடகவியலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறைகளை நாம் பின்பற்றத் தவறியமையே நாடு இன்று எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகளுக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை நாம் கருத்திற் கொள்ளத் தவறிவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில தரப்பினர் நாட்டின் மீது அழுத்தங்களை செலுத்த அனுமதி அளித்தால் அது கடின போராட்டத்தின் மூலம் ஈட்டிய யுத்த வெற்றியை அர்த்தமற்றதாக்கும என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக வரலாற்றில் பல்வேறு உதாரணங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் சரியான கொள்கைகள் வகுக்கப்படாவிட்டால் கடும்போக்குவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கின் ஆட்சி முறைமை குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் தெரிவத்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்றமை உண்மை என்ற போதிலும், யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாமை பிரச்சினைக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளியை பிரிவிணையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக, பொருளதார, அரசியல் மற்றும் ஜனநாயக ரீதியான தீர்வுத் திட்டங்களை உரிய முறையில் முன்வைப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

நீலிக்கண்ணீர் வடிக்கிறது முஸ்லிம்கள் புலிகளால் துரத்தப்பட்டபோது மௌனம் காத்த தமிழ் கூட்டமைப்பு

இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இனங்களிடையே முறுகலை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பது குறித்து அரசாங்கம் அவதானமாக இருப்பதாக பிரதமர் தி.மு. ஜயரட்ன கூறினார்.

வடக்கில் இருந்து 80 ஆயிரம் முஸ்லிம்கள் புலிகளினால் துரத்தப்பட்டபோது மெளனம் காத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று முஸ்லிம்கள் குறித்து நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும் முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைத்த கவனயீர்ப்புப் பிரேரணைக்குப் பதிலளித்த அவர், சத்தியத்துடன் அசத்தியத்தை கலக் காதே என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவ்வாறு மெய்யுடன் பொய்யைக் கலப்பது மதத் தலைவர்களை அவமதிப்பதாகும்.

இலங்கையில் முஸ்லிம்கள் நீண்டகால மாக தமக்கே உரிய, மரபு, கலாசாரங்கள் மற்றும் தனித்துவத்துடன் வாழ்கின்றனர். அவர்கள் மருத்துவம், விஞ்ஞானம், கல்வி, சட்டம் என பல்வேறு துறைகளுக்கு பங்களித்து வருகின்றனர். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நீண்டகாலமாக நெருங்கிய உறவு காணப்படுகிறது.

நாட்டில் அநேக மத ஸ்தலங்கள் உள்ளன. சிலர் பிரபலமடைவதற்காக இனங்களிடையே பிரச்சினை ஏற்படுத்த முயல்கின்றனர். சில சிறு குழுக்கள் நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றன. ஒருபோதும் இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்த இடமளிக்க முடியாது.

1990 இல் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட 80 ஆயிரம் முஸ்லிம்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் குறித்து தமிழ் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. எல். ரி.ரி.ஈ. யின் தனி ஈழம் குறித்து பேசினாலும் தமிழ், தலைவர்கள் முஸ்லிம் மக்களின் பிரச்சினை குறித்து பேசவில்லை. இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியை குழப்ப தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது. இன்று முஸ்லிம்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. முதலில் அவர்கள் வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற உதவ வேண்டும்.

நாட்டில் இனவாதத்தை தூண்டி தமது தேவைகளை நிறைவற்றிக் கொள்ள சில தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சி குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி யுள்ளது. இனங்களுக்கிடையில் நல் லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடைய தரப்புகளுடன் பேசி புரிந்துணர்வை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இன நல்லுறவுக்கு எதிரான முயற்சிகள் தொடர்பிலும் அவதானமாக உள்ளோர்.

இலங்கையில் வாழும் 8 வீதமான முஸ்லிம்கள் குறித்து மட்டுமன்றி உலக முஸ்லிம்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்துகிறார். பலஸ்தீன மக்களின் உரிமைகள் பற்றி அவர் குரல்கொடுத்தார்.

இங்கு உள்ள முஸ்லிம் களுக்கு அநீதி செய்வதாக கூறுவதை ஏற்க முடியுமா நாட்டில் சிறுசிறு சம்ப வங்கள் நடைபெற்றாலும் அதனை இனவாதப் பிரச்சினை என்று கூறிவிட முடியாது. முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உள்ளது. ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் முஸ்லிம் நாடுகள் எமக்கு உதவின.

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தி வருகிறோம். பொது பல சேனாவையும் உலமா சபையையும் அழைத்து பாதுகாப்பு செயலாளர் பேச்சு நடத்தினார். பெபிலியான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் துரித நடவடிக்கை எடுத்தனர். இந்தப் பிரச்சினையினூடாக இனங்களிடையே குழப்பம் பரவாமல் முன்மாதிரியாக பேச்சு மூலம் தீர்க்கப் பட்டது.

முஸ்லிம்களுக்கு புலிகள் அநீதி, தாக்குதல்கள், மேற்கொள்கையில் அமைதி காத்த தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு இன்று முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படுவதாக கூறுகிறது. துரத்தப்பட்ட 80 ஆயிரம் முஸ்லிம்களையும் மீள குடியேற்ற கூட்டமைப்பு உதவவேண்டும்.

தென் இந்தியாவில் தனிநாடு கோரி, போராட்டம் நடத்தப்படுகிறது. ரஷ்யாவைப் போன்று இந்தியாவையும் துண்டாடவே சர்வதேச நாடுகள் இலங்கை விடயங்களில் தலையிடுகிறது. இந்தியா தனியான ராஜ்யமாக இருப்பதையே நாம் விரும்கிறோம்.

mardi 9 avril 2013

பிரான்ஸ் நாட்டுக்கான புதிய இலங்கைக் தூதுவராக பேராசிரியர் கருணாரத்ன


பிரான்ஸ் நாட்டுக்கான புதிய இலங்கைக் தூதுவராக பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஸ்பெய்ன், போர்த்துக்கல் நாடுகளின் தூதுவராகவும் அவர் செயற்படவுள்ளதுடன் யுனெஸ்கோவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநியாகவும் ஹங்கவத்த நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கான நியமனப்பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹங்கவத்தவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ள ஹங்கவத்த லாஸ் வெகாஸிலுள்ள நெவடா பல்கலைக்கழகத்தில் குற்றவியல் நீதித்துறையில் பேராசிரியராகவும் உள்ளார்.
மேலும் இலங்கை உள்நாட்டுப் போரின் 2002 முதல் 2009 மே மாதம் இறுதிக் கட்டம் வரையான காலப்பகுதி தொடர்பாக ஆராயும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான  ஆணைக்குழுவில் ஹங்கவத்த உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி, முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் பற்றிக் கவலைப்பட்டதுண்டா? இன்னும் ஏன் அகதி முகாம்?


refugees in tamilnaduஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி, முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் பற்றிக் கவலைப்பட்டதுண்டா? குறைந்தபட்சம் ஏதாவது ஒரு அகதி முகாமுக்கு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் போனதுண்டா? போக மாட்டார்கள். காரணம், இலங்கை அகதிகள் வங்கதேச அகதிகள்போல இவர்களுக்கு வாக்கு வங்கிகளாகப் பயன்பட மாட்டார்கள். அவர்களால் இவர்களுக்கு அரசியல் ஆதாயமும் கிடையாது.
தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியா சென்ற சில மாதங்களிலேயே தங்களுக்குக் குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால் வாழ்வு தேடித் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், இங்கே படித்துப் பட்டம் பெற்றாலும் கூட, இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வேலையும் கிடைப்பதில்லை, தனியார் அலுவலகங்களிலும் வேலை கிடைப்பதில்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 132 முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகளின் வாழ்க்கைச் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த அகதிகளுக்கு, மிகச் சிறிய அளவில் நிதியுதவியும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியனவும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமா? தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இலங்கை அகதிகள் முகாம்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதும், சந்தேகத்துடன் பார்க்கப்படுவதுமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இலங்கை அகதிகளை, தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொண்ட தமிழக அரசியல் கட்சிகள், அவர்களது வாழ்வாதாரம் குறித்துப் பெரிதும் பேசியதில்லை என்பதும் நிலைமை மோசமானதற்கு இன்னொரு காரணம். மேலும், அகதிகளை வைத்து வருவாய்த்துறை அலுவலர்கள் கொழித்தனர் என்பது மற்றுமொரு கசப்பான உண்மை. இவர்களுக்கான நிதியுதவியில் கையாடல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் எத்தனை இலங்கை அகதிகள் இருக்கிறார்கள், முகாமைவிட்டு வெளியேறித் திரும்பாதவர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரம்கூட முறையாக இல்லாத நிலையில்தான் வருவாய்த்துறை இருக்கிறது. ஒவ்வொரு அகதியும் முகாமில் உள்ள பதிவேட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் அவர் எங்கே சென்றிருந்தார் என்பதற்குச் சரியான விளக்கம் சொல்ல வேண்டும். இரண்டு நாள்களுக்கு மேலாக முகாமில் இல்லாமல் போனால் அவர் பெயர் நீக்கப்பட வேண்டும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். முகாமுக்குத் திரும்பாதவர் இலங்கை சென்றாரா, அல்லது வேறு மாநிலத்துக்குச் சென்றாரா, அல்லது வருவாய்த் துறைக்கு பல பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, குடும்ப அட்டை பெற்று இந்தியக் குடிமகன் போலவே மாறிவிட்டாரா என்பதைக் கண்டறிய வேண்டும்.
ஆனால், வருவாய்த் துறையும் காவல்துறையின் 'கியூ' பிரிவும் இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரியவில்லை. ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகளை நடுக்கடலில் இருந்து அழைத்து வந்து, இருபத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக, இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல், நாகையில் ஒரு மண்டபத்திலேயே தங்க வைத்திருக்கும் அரசு அதிகாரிகளின் நோக்கம் என்ன? இவர்களில் பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் 75 பேரை மட்டுமே நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர். மற்றவர்களை ஏன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரவில்லை?
காரணம், இவர்கள் தங்கள் முகாம்களைவிட்டு வெளியேறி பல நாள்களாகியும், இவர்களது பெயர் இன்னும் நீக்கப்படாமல் இருக்கக்கூடும். ஆகவே அதை சரி செய்வதற்காக நடவடிக்கையைத் தாமதப்படுத்துகிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இவர்களில் பலர் அகதிகள் அல்ல, இந்தியர்கள்தான் என்பதாகக்கூட இருக்கலாம். இலங்கை அகதிகள்' என்ற போர்வையில் ஆஸ்ரேலியாவிலும், கனடாவிலும் தஞ்சம் அடைந்து பிறகு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முற்பட்டவர்களும் சரி, இந்தியாவில் சொந்தங்களும், சொத்துகளும் உள்ளவர்களாய், முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர்களும் சரி, தொழில்செய்து வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஏழை இலங்கை அகதிகள் மட்டும் சிறைக்கைதிகள் போல வாழும் நிலைமை எந்த வகையிலும் நியாயமற்றது.
அவர்களுக்கான நிதியுதவி, கல்வி, தொழில் ஆகியவற்றுக்கு இந்திய அரசு முன்னுரிமை தந்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்க வேண்டும். அல்லது முகாம்களைக் கலைத்துவிட்டு, முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும் வாழ்ந்துகொண்டிருக்கிற - பதிவு செய்திருக்கும் - இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தர வேண்டும். அதன்பிறகு மற்ற இந்தியர்களைப் போல தம் உழைப்பாலும் திறமையாலும் அவர்கள் வாழ்க்கை நடத்த நாம் வழிவகுக்க வேண்டும். வங்கதேச அகதிகளும், இலங்கை அகதிகளும் தொடர்ந்து இந்தியாவுக்குள் வந்து கொண்டே இருக்கிறார்கள். வங்கதேச அகதிகளில் பலர் அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக மாறி, இந்தியர்களிலிருந்து பிரித்தறிய முடியாதபடி கலந்துவிடுகின்றனர்.
இந்தியாவில் பணம் கொடுத்தால் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது சிரமம் அல்ல என்பதால், அந்த வாக்கு வங்கியை அசாம் மாநில அரசியல்வாதிகள் தக்க வைத்துக்கொண்டுள்ளனர். அதெல்லாம் போகட்டும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி, முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் பற்றிக் கவலைப்பட்டதுண்டா? குறைந்தபட்சம் ஏதாவது ஒரு அகதி முகாமுக்கு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் போனதுண்டா? போக மாட்டார்கள். காரணம், இலங்கை அகதிகள் வங்கதேச அகதிகள்போல இவர்களுக்கு வாக்கு வங்கிகளாகப் பயன்பட மாட்டார்கள். அவர்களால் இவர்களுக்கு அரசியல் ஆதாயமும் கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களில் விருப்பமுள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி விட்டு, இங்கேயே வாழ விரும்புகிறவர்களுக்கு, இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாத நிலையில், இந்தியக் குடியுரிமையேகூட அளித்துவிட நாம் பரிசீலிக்க வேண்டும்.

இனியும் தமிழகத்தில் அகதிகள் முகாம்கள் தேவையில்லை!

lundi 8 avril 2013

சம உரிமை வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை : ப.சிதம்பரம்

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி, சென்னையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘’இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை. காங்கிரஸ் கட்சி தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியில் இலங்கை தமிழர் பிரச்சினையில் முன்பு என்ன சொன்னார்கள் என்பது சட்டசபை அவை குறிப்பிலேயே உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து, குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நாங்கள் சந்தித்தபோது 2 கோரிக்கைகளை வைத்தார். அதாவது, ஐ.நா.வில் கொண்டுவரும் தீர்மானம் வலுவாக இருக்க வேண்டும் என்றும், இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், இதை டெல்லியில் சென்று கட்சி தலைமைக்கு சொல்வதற்குள்ளேயே ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். ஐ.நா. தீர்மானத்தில் கொண்டுவரப்பட வேண்டிய திருத்தங்களை இந்திய தூதரிடம் கொடுத்து ஐ.நா.வுக்கு அனுப்பினோம். 

இதைபோல், நாடாளுமன்றத்திலும் தீர்மானம் கொண்டுவர அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதில், தமிழக கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் தான் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஆதரிக்கவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு எந்த அளவுக்கு செய்ய முடியுமோ அதை காங்கிரஸ் செய்யும். தமிழகத்தில் காங்கிரசை தனிமைப்படுத்த முடியாது’’என்று தெரிவித்தார்.