ஆதியிலிருந்து தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபு கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியது. இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.
இன்று உலகில் தமிழ் இன மக்கள் வாழ்கின்ற நாடுகள் 72. இவர்களின் தொகை ஏறத்தாழப் பதின்மூன்று கோடி. ஆனால் தமிழர்கள் புத்தாண்டு தினத்தை எப்படி கொண்டாடுகிறோம்? தை மாதம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினம் என்று ஒரு சாரரும், சித்திரை கொண்டாட்டம் தான் பழக்கத்தில் இருந்தது என்றும் விவாதம் தொடருகின்றன.
சித்திரையில் தமிழர் புத்தாண்டு தினத்தை ஏற்பவர்கள் ஆரியர்கள் வகைப்படுத்திய 60 ஆண்டுகளையும், அதன் புராண கதைகளையும் ஆராய வேண்டுகிறோம்.
தமிழ்மொழியில் கூட பெயரற்ற மாதத்தை சார்ந்து அதுவே தமிழர்களின் புத்தாண்டு தினம் என்றால் இதைவிட பெரிய அறியாமை இருக்க முடியுமா?
60 ஆண்டுகளின் பெயர்கள் எதுவும் தமிழ் இல்லை. அனைத்தும் சமஸ்கிருதம். இதில் 60 ஆண்டுகளை மூன்று பிரிவுக்குள் கொண்டு வருகிறார்கள் ஆரியர்கள். உத்தம வருஷங்கள் - மத்திம வருஷங்கள் - அதம வருஷங்கள்.
1. உத்தம வருஷங்கள்:
பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய
2. மத்திம வருஷங்கள்:
சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ
3. அதம வருஷங்கள்:
பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய
பிரபவ மாதத்தில் தொடங்கி அஷய மாதத்தில் முடியும் 60 பெயர்களுக்கான புராணக் கதையையும் என்னவென்று பாருங்கள்.
அறுபதினாயிரம் பெண்களுடன் கிருஷ்ண பகவான் இருப்பதைக் கண்ட நாரதர் கிருஷ்ணனிடம், "60.000 பெண்களை வைத்திருக்கிறாயே. இதில் ஒரு பெண்ணை எனக்கு தரக்கூடாதா?" என்று கேட்கிறார்.
கிருஷ்ண பகவான், "நான் இல்லாத வீட்டில் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக் கொள்" என்று கூறுகிறார்.
நாரதரும் ஒவ்வொரு வீடாக சென்று பார்க்கிறார். 60.000 பெண்கள் வீட்டிலும் கிருஷ்ணன் இருக்கிறார்.
என்ன செய்வது? நாரதருக்கு மோகம் கொள்ள பெண் இல்லை. மீண்டும் கிருஷ்ண பகவானிடமே வருகிறார் நாரதர். "எங்கு நோக்கியும் தனியான பெண்ணை காணவில்லை என்று கூறிவிட்டு, கிருஷ்ணனிடம் நான் பெண்ணாக மாறி உங்களோடு உறவு கொள்ள விரும்புகிறேன்" என்று விருப்பத்தை நாரதர் தெரிவிக்கிறார்.
அதற்கு இணங்கிய கிருஷ்ணன், "நாரதா யமுனை நதியில் குளித்தால் நீ பெண்ணாக மாறுவாய். பின் உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்" என்கிறார்.
நாரதரும் யமுனையில் குளிக்க, அழகிய பெண்ணாக மாறுகிறார். நாரதரின் அழகில் மயங்கிய கிருஷ்ணன் உறவு கொள்கிறார். தொடர்ந்து 60 வருடங்களாக உடல்உறவு கொள்ள 60 பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
கிருஷ்ணனுக்கும், நாரதருக்கும் ஏற்பட்ட ஓரினச்சேர்க்கை உறவில் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்கள் தான் ´பிரபவ´ மாதத்தில் தொடங்கி அஷய மாதத்தில் முடிகின்றன.
*[இந்த புராண கதையை அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392 ஆம் பக்கத்தில் காணலாம்]
கதையின் ஆபாசத்தை பாருங்கள். இந்த ஆபாசத்திற்கு பிறந்த மாதங்களின் பெயர்களை பாருங்கள். ஆரியனின் உளறலுக்கும், தமிழனுக்கும் என்ன தொடர்பு?
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆண்டுகளை எண்களால் கணக்கிடுகின்றனர். ஆரியனோ கலவியிலும், புரளியிலும் வருடங்களை கணக்கிடுகிறான்.
இந்தக் கணக்கில் நமது வயதை கூட கணக்கிட முடியாதே? முட்டாள் புலம்பலில் அறிவுத்தனத்தை தேட முடியுமா?
இதே கேள்வியை பெரியார் எழுப்பினார். புலவர் மறைமலை அடிகளார் எழுப்பினார்.
தமிழர்கள் அரசியல், பொருளியல், சமுதாயவியல், மொழியியல், கல்வி, கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தொழில், வாணிகம், சமயம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கென்று காலங்கள் இருந்தன. நேரத்தை நாழிகையில் தொடங்கி பருவ காலங்களை 6 வகைக்குள் உட்படுத்தி இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி - என்று வகைப்படுத்தி உழவுத் தொழிலில் பருவ காலத்திற்கேற்ப தானியங்களை பயிர் செய்த தமிழனம் இந்து அடையாளத்தை ஏற்கும் முன் இயற்கையை வணங்கி பூஜித்து தை திருநாளில் தமிழர் பண்டிகையாக கொண்டாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்க, ஆரியர்கள் தமிழர்களின் அனைத்து பண்பாட்டு தளங்களிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி தமிழினத்தின் அடையாளத்திற்கான குறியீடுகளை அழித்தொழித்தது.
தமிழர்களுக்கு இது அவமானமில்லையா?
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள்; பொங்கல் நன்னாள்
தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டு முறை என்பது தை மாதத்தை முதல் மாதமாகவும், மார்கழியை இறுதி மாதமாகவும் வழக்கில் உள்ள கிழமைகளையும் கொண்டது.
புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் திருவள்ளுவர் காலம் கி.மு.31. எனவே, திருவள்ளுவர் அண்டு கண்டுபிடிக்க ஆங்கில ஆண்டுடன் 31ஐ கூட்டல் வேண்டும். 1892+21ஸ்ரீ202
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.
தமிழ் நாட்டில் தமிழ் இனத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் புலவர்கள் முதலிய அனைவரும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.
ஆனால், ஆரியம் இன்னமும் விடுவதாயில்லை. சித்திரை தான் தமிழர்களின் புத்தாண்டு என்கிறது.
சரி, ஆரியத்தின் வழிக்கே வருவோம்....
தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட வேண்டுமென்றால் ஆரிய ஆபாசக்கதைகளை கூட ஒதுக்கி விடுவோம். 60 ஆண்டுகளுக்கு ஆரிய மொழியில் பெயர்களை வைத்து அதை தமிழன் ஏற்க வேண்டுமென்றால் என்ன காரணம்?
சித்திரை புத்தாண்டை ஏற்கும் தமிழர்கள் சிந்தித்தால் போதும்.
ஆரியர்களின் சூழ்ச்சி புரியும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire