போலியான இந்திய கடவுச்சீட்டுடன்
பிரான்சில் தங்கி இருந்த இலங்கையர் ஒருவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
நந்தகுமார் ராஜரட்ணம் என்ற 24 வயதுடைய அவர், கடந்த 28ஆம் திகதி சுற்றுலா
வீசாவுடன் இந்தியா சென்று, அங்கிருந்து டுபாய் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளார்.
எனினும் அவரது கடவுச் சீட்டு போலியானது என்பதை அறிந்த பிரான்ஸ் அதிகாரிகள்
அவரை நேற்று நாடுகடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இந்திய
குடிவரவுத்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பை சேர்ந்த ஒருவரே தமக்கு இந்த கடவுச்
சீட்டை பெற்றுக் கொடுத்திருப்பதாக அவர் விசாரணைகளின் போது
தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire