இன்று காலை யாழ் உதயன் பத்திரிகை அலுவலகம் இனம் தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டதாக அதன் நிர்வாகம் கூறுகின்றது. இதேநேரம் இந்த எரிப்பின் ஊடாக 2 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேமானந்தன் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி சமன் சிகேரா இன்று தெரிவித்துள்ளார்.
இனம்தெரியாத நபர்கள் எனும் அதேநேரம் இரண்டு கோடி எனக் கூறுவது பலத்த சந்தேகத்தை கிளப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பெறுமதி எந்த வகையிலும் 2 கோடியை நெருங்காது எனத் தெரிவிக்கும் ஆய்வாளர்கள் நஷ்ட ஈட்டினை பெறுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நாடகமாக இருக்க முடியுமா என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire