அணுவாயுதங்களை முற்றாக இல்லாதொழிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. மனிதத்தை நிலைநாட்டக் கூடிய ஓரே வழி அணுவாயுதங்களை இல்லாதொழித்தலாகும் என ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்ற நிலைமை அணுவாயுத ஒழிப்பையே வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உலக்திலிருந்து அணுவாயுதங்களை ஒழிப்பதே மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். அணுவாயுதக் களைவு தொடர்பில் சர்வதேச சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமெனவும், அனைத்து தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது எனவும் ரவினாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். |
mercredi 24 avril 2013
அணுவாயுதங்களை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் மனிதத்தை நிலைநாட்ட ;ரவிநாத்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire