முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் ஏழை, எளிய மக்கள்,
தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் சென்னையில் மலிவு விலை உணவகங்களை சென்னை
மாநகராட்சி அமைத்து உள்ளது. இந்த மலிவு விலை உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு
இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம்
விற்கப்படுகிறது.
சாந்தோமில் மலிவு விலை உணவகத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் திகதி திறந்து வைத்தார். இந்த மலிவு விலை உணவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டது. குறைந்த விலையில் தரமான உணவு கிடைப்பதால் மக்கள் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிடுகின்றனர். மாநகராட்சி சார்பில் 3 கட்டங்களாக இது வரை 73 உணவகங்களை திறந்து செயல்பட்டு வருகிறது. இந்த மலிவு விலை உணவகத்துக்கு ´அம்மா உணவகம்´ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2400-க்கும் மேற்பட்ட சுயஉதவி குழு பெண்கள் இங்கு உணவு தயாரிக்கிறார்கள். 100 கிராம் எடையில் இட்லியும், 350 கிராம் எடையில் தயிர் சாதமும், சாம்பார் சாதமும் தயாரித்து வழங்கப்படுகிறது. இது வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இட்லி விற்பனையாகி உள்ளது. 5 லட்சம் பேர் சாம்பார் சாதமும், 3 லட்சம் பேர் தயிர் சாதத்தையும் வாங்கி ருசித்து உள்ளனர். சாம்பார் சாதம் மிகவும் நன்றாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் கூறினார்கள்.
எதிர்பார்த்ததை விட பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் வார்டுக்கு ஒன்று வீதம் 200 வார்டுகளிலும் அம்மா உணவகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி தற்போது உள்ள இடங்கள் தவிர மேலும் 127 இடங்களில் `அம்மா உணவகத்தை´ அமைக்க இடங்களை தேர்வு செய்து உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் 127 மலிவு விலை உணவகங்களை நாளை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Aucun commentaire:
Enregistrer un commentaire