காணிகள் தொடர்பான மோசடிகள் இடம்பெறுவதற்கு பழைய சட்டங்களும் காரணமாகின்றன ;மஹிந்த ராஜபக்ஷ
காணிகள் தொடர்பான பழைமை யான சட்ட திட்டங்கள் இல்லாதொழிக்கப் பட்டு
காலத்துக்கு பொரு த்தமான சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் கள் காணியமைச்சர் மற்றும்
துறை சார்ந்த அதிகாரி களுக்கு பணிப்புரை விடுத்தார். தற்போது நடைமுறை
யிலுள்ள காணிச் சட்டங்கள் மற்றும் சரத்துக்களில் திருத்தங்களை
மேற்கொள்ளுமாறு கேட் டுக் கொண்ட ஜனாதிபதி, விரைவாக இதற்கான நடவடிக்கைகளை
எடுப்பதுடன் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்
கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அத்துடன் பல்வேறு காரணங்களுக்காக
மக்களிடமிருந்து பெறப்பட்ட காணி களுக்கான நட்டஈடு வழங்கும் செயற் பாடுகளை
விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும்
அதிகாரிகளை கேட் டுக் கொண்டார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire