சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் யான் நகரத்தை மையமாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் லுஸ்கான் நகரம் கடும் பேரழிவை சந்தித்துள்ளது. அங்குள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இடிந்து தரைமட்டமாகின. வீடுகளை இழந்தவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினர் வழங்கி வருகின்றனர்.
கட்டட இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கியிருக்கிறார்களா? என்பதை அறிய மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்பு பணிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, லுஸ்கான் நகரத்திற்குள் வாகனங்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire