வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறுமென நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கடந்த வருடமே மேற்கொள்ளப்பட்டதுதான். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு முன்னாள் புலிகளிடையே போட்டி நிலவுவதாக அறியக்கிடைக்கின்றது. புலிகளின் முன்னாள் ஆயுதக்கடத்தல் மன்னனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதனுக்கும், புலிகளின் முன்னாள் ஊடக ஒருங்கிணைப்பாளரான தயா மாஸ்ரர் எனப்படுகின்ற வேலாயுதம் தயாநிதி என்பவருக்குமிடையே யார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடுவது என்ற விடயத்தில் போட்டி நிலவுகின்றதாம்.
வட மாகாண சபை ஒன்று அமையுமானால் நான் தான் அதில் முதலமைச்சர் என்று வீணைக்கட்சியின் தலைவர் டக்ளஸ் பன்நெடுங்காலமாக கூறிவருனகின்றார் என்பதும் மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நானே என முதலமைச்சர் என சுரேஸ் பிறேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, வித்தியாதரன் என பட்டியல் நீண்டுசெல்வதும் யாவரும் அறிந்தது.
Aucun commentaire:
Enregistrer un commentaire