சென்னையில் சினிமா நட்சத்திரங்களினால்
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் குறித்து அறிக்கை
சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
தென் இந்தியாவின் புகழ் பூத்த சினிமா
நட்சத்திரங்களாக போற்றப்படும் ரஜனிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய்,
அஜித், போன்ற முன்னணி நட்சத்திரங்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை
நடத்தியிருந்தனர்.இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த
ஏழு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
இந்த போராட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றை
சமர்ப்பிக்குமாறு இந்தியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயத்திற்கு,
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம
தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய
அரசாங்கத்துடன் மட்டுமே தொடர்புகளைப் பேணும் எனவும், தமிழகத்தில் நடைபெற்று
வரும் ஒவ்வொரு போராட்டத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire