தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனுக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இணையத்தளமொன்றில் செய்தி வெளியிடப்பட்டது தொடர்பாக குற்றவியல் சட்டகோவையின் பிரகாரம் கோப்பாய் பொலிஸாரின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான்காம் மாடிக்கு கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த அழைப்பு விடுப்பதற்கான அறிக்கை நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் தனது கையில் கிடைத்ததனாலும் வாகன சாரதி இல்லாமையினாலும் விசாரணைக்கு செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார். விசாரணைக்கு செல்வதற்கான மாற்று திகதி எடுத்து தருமாறு கோப்பாய் பொலிஸாரிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire