நாட்டின் உள்ளூர் சந்தையில் கிடைக்கும் பாஸ்மதி அரிசி, மூல வகையை சேர்ந்ததல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இறக்குமதியாகும் பாஸ்மதி அரிசியின் தரத்தை நிர்ணயம் செய்வதற்கு விசேட கருவிகள் இலங்கை சுங்கத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"மூல வகையான பாஸ்மதி அரிசி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் குறித்த இடங்களில் மட்டும் காணப்படும் காலநிலையில் மட்டுமே வளரக்கூடியது. இலங்கை விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஒரு வகை பாஸ்மதி அரிசியை உருவாக்கியிருப்பினும் அதன் தரம் மூல வகையுடன் ஒப்பிடக்கூடியதல்ல" என அவர் தெரிவித்தார்.
மூல வகை பாஸ்மதி அரிசி இலங்கைக்கு இறக்குமதியாகுவதுமில்லை. நாடாளுமன்ற உணவகத்திலும் உண்மையான பாஸ்மதி அரிசி சோறு வழங்கப்படுவதுமில்லை. பாஸ்மதி அரிசி நறுமண வகையை சேர்ந்தது என அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசனின் கேள்விக்கு பதலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire