வெளிநாடுகளில்
குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்
இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை குடிவரவு குடியகல்வு
திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது,
செயற்படுத்தப்பட வேண்டிய புதிய சட்டத்திருத்தங்களை உருவாக்கப்பட்டுள்ளன என
திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். இரட்டை
குடியுரிமை வழங்கப்படும் போது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு
ஏற்படாத வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்
கூறியுள்ளார்.
இரட்டை குடியுரிமை என்ற போர்வையில் வடக்கில் காணி உரிமைகளை பெற்றுக்கொள்ள வர முயற்சிக்கும் வடபகுதிகளை சேர்ந்த இலங்கையர்களும் இருப்பதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்குலக நாடகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இரட்டை குடியுரிமையை பெறுவதற்காக காத்திருப்பதாக தெரியவருகிறது.

Aucun commentaire:
Enregistrer un commentaire