யாழ்ப்பாணம் குருநகரில்
அமைந்துள்ள மாடிவீட்டுத் திட்டத்தை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து
வைக்கப்படவுள்ளன. வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் இந்தப்
பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும். 7.7 கோடி ரூபா செலவில் புனரமைப்புப்
பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 10 இலட்சம் வீடமைப்புத் திட்டத்தின் கீழ்
குருநகர் மாடி வீடுகளையும் புனரமைப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐந்து மாடிகளைக் கொண்ட இந்த மாடிவீட்டுத் திட்டத்தில் 150 வீடுகள் உள்ளன.
ஒரு வீடு 435 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. 1986ஆம் ஆண்டு இந்த வீட்டுத்
திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. எனினும், யுத்தம் காரணமாக இவ்வீடுகள்
பாதிப்படைந்தன. இந்த நிலையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படும் புனரமைப்புப்
பணிகள் 9 மாதங்களில் பூர்த்தியடையுமென அமைச்சு அறிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire