.jpg)
நான்கு திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில் முஸ்லிம்களை கொலை செய்தவர்கள், விரட்டியடித்தவர்கள் முஸ்லிம்கள் பற்றி பேசஅருகதையற்றவர்கள். எனவே சம்பந்தனின் பேச்சுக்கு ஒரு தடவையல்ல சகல தடவைகளிலும் குறுக்கீடு செய்வேன் என்றார்.
வடபகுதி மக்களுக்காக சம்பந்தன் எதனையும் செய்யவில்லை. மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 226 பில்லியன் ரூபாவை யாழ் அபிவிருத்தி பணிகளுக்காக செலவு செய்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையில் முஸ்லிம்கள் பற்றி பேசிய போது நான் மற்றும் காதர் ஆகியோர் எதிர்த்ததாக தமிழ் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
நாம் எதிர்த்தோம் என்றால் அதற்கு காரணம் உள்ளது. புலிகள் காத்தான்குடி பள்ளி வாசலில் முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது சம்பந்தன் ஐயா எதுவும் பேசவில்லை. இந்தியாவின் 56 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் முஸ்லிம்களுக்கும் வீடு கொடுங்கள் என்று ஆரம்பத்தில் சுபியான் மொளலவி கேட்ட போது சம்பந்தன் ஐயா விரும்பவில்லை. அங்கே சுபியான் மெளலவி யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றி பிரச்சினைகளுக்கு குரல் எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்.
இந்திய எம்.பிக்களின் இலங்கை விஜயமானது ஜயலலிதா அம்மாவுக்கும், கருணாநிதிக்கும் கன்னத்தில் அறைந்தது போன்ற செயற்பாடாகும். இந்திய எம்.பிக்கள் குழு பாராளுமன்றத்திற்கு வருகைதந்தார்கள். அதேபோன்று ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை பார்வையிட யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்.
பிரபாகரன் படுகொலை செய்யப்படும் வரை ஜெயலலிதா துப்பாக்கி குண்டுகள் துழைக்காத கவசஉடை அணிந்திருந்தார். தற்போது தனி நாடு குறித்து பேசுகின்றார். இது ஆடு நனையிது என்று ஓநாய் அழுவுது போன்றதாகும். மத்திய விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் கிழக்கு முஸ்லிம்கள் சந்தோசமடைகின்றனர், விரும்புகின்றனர். ஏனெனில் வருடாந்தம் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற செல்லும் போது இலகுவாக செல்ல முடியும்.என்று குறிப்பிட்டார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire