lundi 31 mars 2014

பழிக்குப் பழி புனிதர்கள் என்று யாருமில்லை!

Human_Rightsஎமது மக்களின் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் ஜெனிவாவில் கொண்டுபோய்க் கட்டி வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், ஜெனிவாவைப் பயன்படுத்தி மெல்ல மெல்ல நம்மை உலகின் எந்த முகாமுக்குள் சேர்த்து விட்டிருக்கிறார்கள் என்பதை அறிய சற்று திகைப்பாக இருக்கிறது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரே ரணை மீதான வாக்கெடுப்பில், அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் ஒரு தரப்பாகவும் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள் மறுதரப்பாகவும் பிரிந்து நின்றதைக் காணக் கூடியதாக இருந்தது. இதில், இலங்கைத் தமிழர்களாகிய நம்மை எந்த முகாமுக் குள் கொண்டுபோய் சொருகி விட்டிருக்கிறார்கள் நம் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்கள் என்பதும் அதன் எதிர்கால அபா யமும் இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும். முதலில், இலங்கையில் இருந்து கொண்டிருக்கக்கூடிய – இங்கேயே வாழ வேண்டிய தமிழர்கள், இலங்கை என்ற நாட் டிற்கு எதிரானவர்கள் என்ற செய்தியை, அவர்களுக்குத் தெரி யாமலே ஏனைய சமூகங்களுக்கும் உலகுக்கும் நிறுவி முடித்தார்கள்.
இங்கு நடந்த போரை இவ்வளவு பெரிதாக வளர்த்து அழிவு களுடன் நடத்தி முடித்ததில் இரு தரப்புக்குமே பங்குண்டு என்பதைத்தான் நடுநிலையாகக் கருத்துத் தெரிவிக்கும் எவரும் சொல்வார்கள். அப்பாவி உயிர்களின் அழிப்பு என்று வந்துவிட்டால், நடுநிலையாளர் பார்வையில், நமக்கு உவக்காத பல உண்மைகளைக் கேட்டு ஜீரணித்துக்கொள்ள வேண்டி வரும்.
இதன் பொருள் அரசின் அடக்குமுறையையும் சொந்த மக்கள் மீதான தாக்குதல்களையும் குறைத்து மதிப்பிடுவதோ அதைக் காப்பாற்ற முற்படுவதோ அல்ல. சர்வதேச விசாரணை என்று வந்துவிட்டால், அதன் நியாயத் தன்மையை நிலை நாட்ட இருதரப்பு மனிதவிரோதச் செயல்களும்தான் ஆராயப்படும். அப்போது யார் யார் தண்டிக்கப்பட்டாலும், தமிழர்களாகிய நம்மைப் புனிதர்களாக நினைத்துக்கொண்டு இப்போதுபோல் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பதெல்லாம் அதன்பிறகு செல்லாக் காசாகி விடும்; வெளிப்படையாகவே பிறர் சிரிப்புக்கும் இடமாகிவிடும்.
அந்தவகையில், மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை அம்மையார் வலியுறுத்தும் இருதரப்பு மீறல்களும் பற்றிய விசாரணை என்பது ஒரு பார்வையில் நல்ல பலனைத் தரவும் கூடும். அதாவது, வடக்கில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களுக்கு அரசாங்கமும் தெற்கில் பஸ், ரயில் குண்டுத் தாக்குதல் களுக்கு தமிழ்த் தரப்பும் குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிக்கும் நிலை வருவது, நல்லிணக்கம் இங்கு ஏற்படுவதற்கு வாசலாக அமையும்.
அப்போதாவது, பழிக்குப் பழி வாங்குவது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் வளர்த்து அரசியல் செய்ய முற்படுவோரின் அபத்தத்தைப் பலரும் புரிந்துகொள்ள வாய்க்கும். அவரவர் தரப்பு இழப்புகளுக்காக இரு தரப்பிலும் பழிவாங்கும் உணர்ச்சியை அல்லது வென்றோர் உணர்ச்சியை வளர்த்து வருபவர்கள், மீண்டும் போரை உருவாக்கி அதில் குளிர்காயும் அரசியலைச் செய்துகொண்டிருக்க விரும்புவோர்தான்.
நம்மைப் புனிதர்களாகவே கருதிக்கொண்டு, இதையெல்லாம் ஏதோ அரசுக்கு வக்காலத்து வாங்குவதாகவோ, அல்லது இந்தக் குற்றமிழைத்த அரசைத் தண்டிப்பதைத் தவிர தமிழர் களுக்கு வேறென்ன இலக்கு இருக்க முடியும் என்பதாகவோ பிதற்றிக் கொண்டிருந்தால், நமது மக்களுக்குத் தேவையான நல்ல மாற்றங்களை இங்கு ஒருபோதும் கொண்டுவர முடியா மல் போகும்.

கொழும்பு மாவட்டத்தில் ஹிருணிக்கா பிரேமச்சந்திர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.  இதன்படி அவர் 139034 விருப்பு வாக்குகளையும் உதய கம்மன்பில 115638 வாக்குகளையும் உபாலி கொடிகார 78222 வாக்குகளையும் ரெஜர் செனவிரத்ன 44011 வாக்குகளை பெற்ற அதேவேளை மல்ஷா குமாரதுங்க 43324 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.மரிக்கார் 67243 விருப்பு வாக்குகளையும் மஞ்சு ஶ்ரீ அரங்கல 45654 வாக்குகளையும் முஜீபர் ரஹூமன் 42126 வாக்குகளையும் நிரோஷன் பாதுக்க 33846 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் ஜேவிபியின் கீழ் போட்டியிட்ட கே.டீ.லால்காந்த 45460 விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

ஒபாமா மீது இன வெறி பெல்ஜியம் பத்திரிகை

ஒபாமாவை மனித குரங்கு ஆக சித்தரித்து பெல்ஜியம் பத்திரிகையில் காட்டூன் வரையப்பட்டது. தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் செயல்பாடுகளை கார்ட்டூன் படங்கள் மூலம் பத்திரிகைகள் விமர்சனம் செய்து வருகின்றன. அவை அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்க கூடாது என்ற கருத்து உள்ளது. ஆனால், பெல்ஜியத்தில் இருந்து வெளிவரும் உரு பத்திரிகை சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரது மனைவி மிச்செலி ஆகியோரின் முகத்தை மனித குரங்குபோன்று வரைந்து பிரசுரித்தது. அமெரிக்காவில் மரிஞ்சுனா என்ற போதை பொருள் விற்க ஒபாமா அனுமதி வழங்கியுள்ளார். அதை கேலி செய்யும் விதமாக இந்த கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.
மேலும் இதை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஒபாமாவுக்கு அனுப்பியதாக கேலி (ஜோக்) எழுதப்பட்டிருந்தது. இது வாசகர்கள் மனதை புண்படுத்தியது.
எனவே, டுவிட்டர் இணையதளத்தில் ஏராளமானவர்கள் அந்த பத்திரிகை மீது கண்டனம் தெரிவித்தனர். ஒபாமா மீது இன வெறியை தூண்டுவதாகவும் கூறியிருந்தனர். இதற்கிடையே அதிபர் ஒபாமா நாளை (1–ந்தேதி) பெல்ஜியம் வர இருக்கிறார்.
இந்த நிலையில் இக்கார்ட்டூன் பெல்ஜியம் அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அந்த பத்திரிகை தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது.
தங்களது கார்ட்டூன் இன வெறியை துண்டுவதற்காக வெளியிடப்படவில்லை கேலி செய்யும் விதத்தில் தான் இக்கார்ட்டூன் வரையப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

நாட்டை விட்டு விரட்ட வேண்டும் : ரேகர்

ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹிராலால் ரேகர், டோங்க் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, சோனியா, ராகுலை நாட்டை விட்டு இத்தாலிக்கு துரத்த வேண்டும் என்று பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிர்ச்சாரத்தின் போது பேசிய ரேகர், பிரதமராக மோடியே பதவியேற்க உள்ளார். சோனியாவையும், ராகுலையும் நாட்டை விட்டு, இத்தாலிக்கே விரட்டியடிக்க வேண்டும் என்று கடுமையாகப் பேசியுள்ளார்.
இதனால், பாஜக மூத்த தலைவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

dimanche 30 mars 2014

இந்தியா துரோகமிழைத்து விட்டது - சீக்கிய அமைப்பு கண்டனம்

சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து நம்பகமான,சுதந்திரமான அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானத்துக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியா ஆதரவளிக்காதது குறித்து சீக்கியர்களின் அமைப்பான அனைத்துலக தல் கால்சா (Dal Khalsa) கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்த அமைப்பின் தலைவர், சர்தார் ஹர்சரன்ஜித் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 

“இந்தியாவினது இந்த பிரதிபலிப்பை, சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரிகளினதும் மற்றும் ஏனைய சிறுபான்மை இனங்களினதும், மீதான தமது சொந்த மனிதஉரிமை மீறல்களின் பின்னணியில் நோக்க வேண்டும். 

இந்தியா தமிழர்களுக்கு துரோகமிழைத்து, மீண்டும் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை மேற்கு நாடுகள் ஆதரித்த போதிலும், ஐ.நா கோட்பாடுகளுக்கு முரணானது என்று கூறி இந்தியா வாக்களிப்பில் பங்கேற்காமல் விட்டுள்ளது. 

இந்தியாவினது அமைதி ஒன்றும் புதியதல்ல. 

சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அது எப்போதும் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளதுடன், பலமுறை அது குத்துக்கரணங்களையும் அடித்துள்ளது. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்காக, நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது அமைப்பின் விருப்பம். 

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்து எமது அமைப்பு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமண வாழ்க்கையை விரும்பாத பெண்கள்

காலி பிரதேசத்தில் மட்டும் 3,029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1,709 பேர் 50 வயதை தாண்டிய பெண்கள். 18 - 50 வயதுக்குட்பட்ட 1,328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள் என காலி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச என்ற அமைப்பு திருமணமாகத பெண்கள் என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. இத்தகவல் ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்துள்ள மேற்படி அமைப்பு, 'நாங்கள் ஒரு பிரதேசத்தில் மாத்திரமே தகவல்களை கேகரித்தோம். இலங்கையில் உள்ள ஏனைய பிரதேசங்களை எல்லாம் தகவல் சேகரிக்கும்போது இத்தொகை இலட்சத்தை தாண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. 'இந்த பெண்களில் அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் தொழில் செய்கின்றவர்கள், தொழில் செய்து ஓய்வுபெற்றவர்களும் அடங்குகின்றனர். ஆண்களை விட பெண்களின் சனத்தொகை அதிகரித்து காணப்படுகின்றது. இலங்கையில் உள்ள சகல அரச தனியார் நிறுவனங்களில் தொழில் செய்வோரில் பெண்களே அதிகமாகப் காணப்படுகின்றனர்' என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

jeudi 27 mars 2014

இலங்கையில் குறுஞ்செய்திகள் வாக்குக் கேட்டு வருகிறது


இலங்கையில் தென் மாகாண சபையின் முன்னாள் கல்வியமைச்சராகவிருந்த வேட்பாளருக்கு விருப்பு வாக்கு அளிக்குமாறு கேட்டு டயலொக் இணைப்புடைய தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் வந்த வண்ணமிருப்பதாக தென் மாகாணம் வாழ் மக்கள்  அறிவித்தனர்.

அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்தே இவ்வாறு குறுஞ்செய்திகள் வருவதாகவும் கூறப்படுகின்றது. 

யாழ்ப்பாணம் அதன் பாரம்பரிய பொரிச்ச கோழியை கைவிட்டு கே.எப்.சி - நோயல் நடேசன்

யாழ்ப்பாணத்தில் போர் தீவிரமடைந்த காரணத்தால் முன்னர் நாங்கள் KFC--in-Jaffna-3வாழ்ந்த எங்கள் பழைய யாழ்ப்பாணத்தை திரும்பவும் அடைவது தவிர்க்க முடியாதது என்பது எங்களுக்கு தெரியும். யுத்தம் நடந்த வருடங்களில்கூட மிக நுட்பமான முறையில் புதிய யாழ்ப்பாணம் ஒன்று உருவாகும் அடையாளங்கள் இருக்கத்தான் செய்தன. கடந்த 5 வருடங்களில் நான் யாழ்ப்பாணத்துக்கு 13 தடவைகள் சென்றுள்ளேன். ஆனால் கடந்த 2014 ஜனவரியில்     சென்றபோது யாழ்ப்பாணத்தில் நான் கண்ட சர்வதேச அடையாளங்களை விட சிறந்த முக்கியமான மாற்றங்கள் எதையும் முன்னர் கண்டதில்லை.
முதல்முறையாக யாழ்ப்பாணத்தின் இதயப் பகுதியில் சர்வதேச அடையாளங்களில் ஒன்றை நான் கண்டேன். அது கென்டக்கி பிரைட் சிக்கனின் தாடிவைத்த கேணலின் முகம் ஆகும். யாழ்ப்பாணம் அதன் பாரம்பரிய பொரிச்ச கோழியை கைவிட்டு கே.எப்.சி (KFC) க்குள் நுழைவது மாற்றத்துக்கான ஒரு மாபெரும் பாய்ச்சல் என்றே சொல்லலாம். எனக்கு அது எங்கள் மக்கள் வெற்றிலை போடும் பழக்கத்தை கைவிட்டு சுயிங்கம் மெல்லுவதைப் போல இருந்தது. எனக்கு அந்த மாற்றம் யாழ்ப்பாணம் கடந்தகால நிலப்பிரபுத்துவ ஆட்சியை உடைத்துக்கொண்டு கடைசியாக  21ம் நூற்றாண்டுக்குள் நுழைவதன் இறுதிச் சின்னமாகத் தோன்றியது.
காலநிலை மாற்றம் பற்றி பேசப்படுவதை ஸ்ரீலங்காவில் அனுபவப்படுவதைப் போல வேறு இடத்தில் ஒருவரால் உணர முடியாது. நாங்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கும் கிழக்கிலிருந்து மேற்குக்குமான சகல இடங்களுக்கும் பயணம் செய்தோம். அது புலன்களால் அறியக்கூடிய ஒரு மாற்றம் அதை உங்களால் காணவும் மற்றும் உணரவும் முடியும். வீதிகள் மட்டுமல்ல,ஆனால் அணுகும்முறை மற்றும் புதிய உற்சாகம் அங்குள்ள மக்களின் முகங்களில் தென்பட்டது.
ஒரு பிரகாசமான மாலைவேளையில் முக்கியமாக கொழும்பில் தமிழர்களின் மேலாதிக்கத்தின் கீழுள்ள புறநகரான வெள்ளவத்தையின் குறுகிய வீதி ஒன்றினுடாக எனது மனைவியடன் நடந்து செல்லுகையில் கிளிநொச்சியில் வசிக்கும் ஒரு இளம் விதவையின்  கைபேசி அழைப்பு ஒன்று வந்தது. கடந்த மூன்று வருடங்களாக அவளுக்கு நான் அனுசரணை வழங்கி வருகிறேன். நான் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் வழியில் அவளைச் சந்திக்க எண்ணியிருந்தேன். உள்ளுர் பாடசாலை ஒன்றில் அவள் தொண்டராசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பதால் கிளிநொச்சியில் வைத்து எங்களை சந்திக்க முடியாமல் இருப்பதையிட்டு வருத்தம் தெரிவிக்கவே அவள் எனக்கு கைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தாள். அவளது முன்னேற்றத்தை அறிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே ஏற்பட்டது, அவளைப்போன்ற போரில்; தங்கள் கணவனை இழந்த மற்றும் 12 விதவைகள் இதேபோல முன்னேறியிருப்பதை முன்னேற்றத்துக்கான பொதுவான ஒரு அடையாளமாக நான் கருதினேன். கடந்த மூன்று வருடங்களாக அவர்களுக்கு நான் உதவி செய்து வந்தேன்.
என்னுடன் பேசிய விதவையின் பெயர் லட்சுமி. அவளுக்கு 10 வயதுக்கு குறைந்த இரண்டு பிள்ளைகள் உள்ளனர். போர் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர் அரசாங்க உதவியுடன் மீண்டும் கட்டப்பட்ட ஒரு வீட்டில் வைத்து அவளைச் சந்தித்தேன், ஆனால் அந்த வீட்டுக்கு கதவுகள் எதுவும் இருக்கவில்லை. அதற்கு கதவுகள் பொருததுவதற்கு அவளிடம் பணம் எதுவும் இல்லை அல்லாமலும் எதிர்காலத்தில் கிடைக்ககூடிய நிதியுதவி எதையும் அவளால் எதிர்பார்க்கவும் முடியவில்லை. ஒரு உள்ளுர் நண்பரின் உந்துதலால் அவளது குடும்பத்துக்கு சில உதவிகளை ஏற்பாடுசெய்ய என்னால் இயலுமாக இருந்தது மற்றும் தற்பொது உள்ளுர் நிலமைகள் முன்னேற்றமடைந்துள்ளதை அறிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
2009 மார்ச்சில்  அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை சேர்ந்த உதவும் மனப்பாங்குள்ள 25 வெளிநாட்டு நண்பர்களுடன் நான் கொழும்புக்குச் சென்றிருந்தேன். யுத்தம் ஒரு உச்சக்கட்ட நிலைக்கு வந்திருந்த ஒரு நெருக்கடியான நேரம் அது. எங்களது முக்கிய இலக்கு எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களின் பாதுகாப்புக்காக மனிதக் கேடயங்களாக எல்.ரீ.ரீ.ஈ அழைத்துச் சென்றிருந்த தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் உதவி செய்விப்பது என்பதாகும். எங்களது தூது முயற்சி எல்.ரீ.ரீ.ஈ யின் பிடிவாதம் மற்றும் தடைகள் காரணமாக தோல்வியடைந்தாலும்கூட, அரசாங்கத்தின் சில முக்கிய அதிகாரிகளுடன் நாங்கள் இரண்டு நாட்களாக பேச்சு வார்த்தைகளை நடத்தினோம். அந்த நேர அரசியலில்; நாங்கள் தொடர்புபடவில்லை. யுத்தத்துக்கு பின்னான அரசாங்கத்தின் புனர்வாழ்வு முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வந்தோம், அதாவது  தொடர்ந்து அகதி முகாம்களுக்குச் செல்வது மற்றும் எங்கள் அவதானிப்புகளை முன்னேற்றம் ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பது போன்ற பணிகளில் நாங்கள் தொடர்புபட்டிருந்தோம்.
அங்கு பல முக்கியமான காரணிகளை பதிவு செய்ய வேண்டியிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யினால் மேற்கொள்ளப்பட்டு வந்த முப்பது வருட பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஒரு முடிவுக்கு கொண்டுவந்திருந்தார். நாங்கள் அவரை விரும்புகிறோமோ அல்லது இல்லையோ இந்தகடினமான உண்மையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஒரு போரின் முடிவு ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும் தருணம், அது புதிய சாத்தியங்களுக்கான வழியை திறந்து வைக்கிறது. இது ஒரு சாமான்ய சாதனை அல்ல. போரை நடத்துவதைப் போலவே போரை முடித்து வைப்பதும் கடினமானது. பிரபாகரனின் வீணான யுத்தத்துக்காக நிதி வழங்கிய தமிழ் புலம்பெயர்ந்தோர், வேறு மார்க்கங்களில் அதை தொடர்வதற்கு முடிவு செய்தார்கள். அவர்கள் யுத்தப்பாதையை வெளிநாட்டில் இருந்து தொடர்ந்தார்கள். பாதுகாப்பான கரைகளில் இருந்துகொண்டு போராட அவர்கள் முடிவு செய்தார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு நிதியுதவிகளை வழங்கிய பின்னர்,இரவோடிரவாக அவர்கள் மனித உரிமை பாதுகாவலர்களாக மாறிவிட்டார்கள். மற்ற எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தாலும் கூட இந்தப் போரில்தான் எங்கள் விடுதலை வீரர்கள் அதிகளவு தமிழர்களை கொன்றார்கள்.
பிரபாகரன் மற்றும் அவரது விடுதலை வீரர்களின் இந்த பயனற்ற யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள  துன்பங்கள்,மரணங்கள், மற்றும் அழிவுகளை கருத்தில் கொள்ளும்போது, அதை தொடர முயலும் புலம்பெயர்ந்தோரின் முயற்சிகள் எல்லாம் யுத்தத்தில் வீணடிக்கப்பட்டதை போல பயனற்ற முயற்சிகள் என்பதில் மாற்றம் எதுவும் இல்லை. நாங்கள் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் நாங்கள் வெற்றிகொண்டுள்ள சமாதானத்தை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும். அரசியல் எனும் மேகம் இந்தப் பிரச்சினைகளை மறைத்து விட்டதால் மோசமான கடந்த காலம் சுலபமாக எங்களால் மறக்கப்பட்டு விட்டது.
எல்.ரீ.ரீ.ஈ ஒரு சிறிய அமைப்பு அல்ல. இந்திய அமைதிப்படையினரை ஸ்ரீலங்காவை விட்டு பலவந்தமாக அனுப்பியபோது, உலகின் நான்காவத பெரிய இராணுவத்தை தாங்கள் தோற்கடித்து விட்டதாக அது மார்தட்டிக் கொண்டது. எல்.ரீ.ரீ.ஈயானது, தான், இராணுவம்,கடற்படை,மற்றும் வான்படை என்பனவற்றை கொண்ட ஒரு அரசாங்கம் என்று கூறி ஸ்ரீலங்கா அரசாங்கத்தை அச்சுறுத்தியது மட்டுமன்றி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியைக்கூட கொன்றது. ஆனால் இறுதியில் அவர்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். போரின் கடைசி நாட்களில் தங்களுக்கு தோல்வி தவிர்க்க முடியாதது என உணர்ந்த எல்.ரீ.ரீ.ஈ, ஒரு சர்வதேச கூப்பாட்டை எழுப்பும் நம்பிக்கையில் 400,000 தமிழ் பொதுமக்களின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டது. நிராயுதபாணியான பொதுமக்களின் பின்னால் மறைப்பு தேடுவது ஒரு வெட்கக்கேடான நடவடிக்கை, தங்களை வீரர்கள் என அழைத்துக் கொள்பவர்களுக்கு அது மதிப்பான ஒரு செயல் அல்ல. அது ஒரு அவமானகரமான செய்கை. விடுதலை வீரர்கள் சயனைட் வில்லைகளைக் கொடுத்து இளைஞர்களை மூளைச்சலவை செய்துவிட்டு தாங்கள் பொதுமக்கள் பின்னால் மறைப்பு தேடிக்கொண்டார்கள். தங்களிடமிருந்து தப்பியோடிய தமிழர்களை அவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். அதற்கு மேலதிகமாக தாங்கள் கைப்பற்றிய இராணுவ வீரர்கள் அனைவரையும் அவர்கள் கொன்றார்கள். ஸ்ரீலங்கா இராணுவம் எல்.ரீ.ரீ.ஈ யை தோற்கடித்தது மட்டுமன்றி அவர்கள் பிடித்து வைத்திருந்த மக்களையும் மீட்டார்கள்.இடம்பெயர்ந்த மக்களில் 95 விகிதமானவர்கள் மூன்று வருடத்துக்குள்ளேயே மீள் குடியேற்றப்பட்டதுடன் வட மாகாணத்தில் உட்கட்டமைப்பு வசதிகளும் மீளக் கட்டியெழுப்ப பட்டது. கிட்;டத்தட்ட 95 விகிதமான செயற்பாட்டிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப் பட்டார்கள்.
சில பகுதிகளில் இன்னமும் திருத்த வேலைகளைச் செய்வதற்கான தேவைகள் உள்ளன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், மற்றும் சமூகங்களிடையேயான நல்லிணக்க நடவடிக்கைளை அவை விரைவு படுத்தும். ஆனால் எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளார்கள். இதற்கான முழுப் பழியும் எல்.ரீ.ரீ.ஈ யினையே சாரும், கடந்த முப்பது வருடங்களில் அவர்கள் அரசியல் தலைவர்களை மட்டும் அழிக்கவில்லை. முக்கியமான சமூகத் தலைவர்களையும் கொன்றொழித்து விட்டார்கள்.
எங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு புதிய தலைமை,அவர் புதிய சFoodcity1மிக்ஞையான யாழ்ப்பாணத்தில் உள்ள கே.எப்.சி யினை படிப்பதன் மூலம் காலத்துக்கு ஏற்ப மாறுபவராக இருக்கவேண்டும். மோதல் அரசியலுக்கு திரும்புவது பழையபடி வளைந்து நெளிந்து திரும்பவும் எங்களை அரசியல் கொந்தளிப்புக்கே இட்டுச்செல்லும். எங்களுக்கு தேவை வடக்கு மற்றும் கிழக்கில்,  போரினால் கீறிக் கிழிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் தேடித்தரும் நடைமுறைக்கு ஏற்ற தலைமைத்துவமே. எங்கள் மக்கள் வாழ்நாள் முழுவதும் அரசியல் பட்டினி கிடக்க முடியாது. துயரத்தின் ஆழத்திலிருந்து எங்கள் தலைகளை உயர்த்துவதற்கு எங்களுக்கு பொருளாதாரம் தேவை. தற்போதைக்கு நாங்கள் அரசியலை சற்று ஒத்தி வைப்போம். அரசியலால் நாங்கள் இரத்தம் சிந்துவதற்கே நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம். பொருளாhரத்தின் மூலம் கடந்த 30 வருடங்களாக பயனற்ற அரசியல் காரணமாக நாங்கள் இழந்த யாவற்றையும் திரும்பப் பெற்று முன்னோக்கி நடைபோட முடியும்.
எங்கள் முன்னாலுள்ள தெரிவு மிகவும் சுலபமானது: அரசியலா அல்லது பொருளாதாரமா என்பதுதான் அது. நாங்கள் அரசியலை தேர்வு செய்தால் நாங்கள் இழந்த ஈழத்துக்கே நாங்கள் திரும்பிச் செல்வேண்டியிருக்கும். பொருளாதாரத்தை தேர்ந்தெடுத்தால், மே 2009ல் நாங்கள் இழந்த அனைத்iயும் எதிர்காலத்தில் திரும்ப பெறுவதற்கான ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கும். வரலாற்று உதாரணங்கள் இதை நியாயப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு ஜேர்மனியர்களின் விடயத்தை எடுத்துக்கொண்டால், போரில் தோல்வியடைந்த பின்னர் அவர்கள் ஹிட்லரின் பாசிச அரசியலுக்கு திரும்பியிருந்தால் இன்று இருப்பதைப்போல ஜேர்மனி இருந்திருக்குமா? ஏனெனில் ஜேர்மனியர்கள்  அவர்களது அரசியலை என்றென்றைக்குமாக குழி தோண்டி புதைத்து விட்டு, நடைமுறைக்கேற்றபடி பொருளாதாரத்தை தேர்ந்தெடுத்தபடியால் தோல்வியின் சாம்பல் மேடடிலிருந்து அவர்களால் உச்சிக்கு உயர முடிந்தது.
ஜேர்மனியர்களும் மற்றும் யப்பானியர்களும் பயனற்ற யுத்தங்களால் தாங்கள் இழந்த யாவற்றையும் திரும்பவும் வெற்றி கொண்டார்கள். நாங்கள் எங்கள் அரசியலை சரியான பாதைக்கு திருப்பினால் எங்களால் அவர்களைவிட அதிகம் செய்துகாட்ட முடியும்.              மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

mercredi 26 mars 2014

மன்னிக்கவும் மலேசியன் விமானம் பற்றி இதற்குமேல் இதை எளிதுபடுத்த நம்மால் முடியாது.

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தண்ணீரில் மூழ்கியது என எப்படி அடித்துச் சொல்கிறது மலேசியா? அதற்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. தொழில்நுட்பம்-பிளஸ்-ஊகம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது மலேசியாவின் முடிவு.

இப்போது நாம் கூறப்போகும் விஷயம், மலேசியாவுக்கு சில தினங்களுக்கு முன்னரே பிரிட்டிஷ் நிறுவனம் இன்மார்சாட்டினால் சொல்லப்பட்டு விட்டது. அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நாலைந்து நாட்களை கடத்திய மலேசியா, பின்னர், “விமானம் மூழ்கிவிட்டது” என்று மட்டும் அறிவித்தது.

அதை எப்படி கண்டுபிடித்தோம் என்று வாய்திறக்கவில்லை.

அதையடுத்து சீன அரசு ஆதாரம் கேட்டது, பயணிகளின் உறவினர்கள் கேட்டார்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவும், “மலேசியா என்ன வைத்திருக்கிறது என்பதை பார்க்கப் போகிறோம்” என்றது.

இதையடுத்து மலேசியா தாம் அதுவரை பொத்திக் காத்து வைத்திருந்த ரகசியத்தை அமெரிக்காவுக்கு காட்ட.. மீதியை ஊகித்திருப்பீர்களே.. ஆம், விஷயம் அமெரிக்காவில் லீக் ஆகிவிட்டது.

இவர்கள் பொத்தி வைத்திருந்த ரகசியம் இதோ இதுதான்:

மலேசிய விமானம் ரேடியோ தொடர்பை இழந்த பின்னரும், ‘பிங்கிங்’ தொடர்பை வைத்திருந்தது (இதுபற்றி நாம் விளக்கமாக எழுதியதை பார்க்கவும்).

இந்த பிங்கிங் என்பதை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், விமானமும், சாட்டலைட்டும் மணிக்கொரு தடவை கைகுலுக்கி கொள்ளும் நடைமுறை. அதாவது, மணிகொரு தடவை விமானம், ‘நான் இருக்கிறேன்’ என்று காட்டிக் கொள்ளும்.

மலேசிய விமானம் காணாமல் போன பின்னரும் சில மணி நேரத்துக்கு இந்த ‘பிங்கிங்’ நடந்திருக்கிறது. மணிக்கொரு தடவை அது பதிவாகியும் உள்ளது. அந்தப் பதிவுகளை ஆராய்ந்தபோது, அவற்றில் ஒரு ‘முற்றுப்பெறாத பிங்’ (partial ping) இருந்ததை கண்டிருக்கிறார்கள்.

இதன் அர்த்தம் அப்போது புரிந்து கொள்ளப்படவில்லை.

அதன்பின் விமானம் மாயமாகி வாரக்கணக்கில் மர்மம் நீடிக்கவே, இந்த ‘முற்றுப்பெறாத பிங்’ பற்றி சற்றே விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். அப்போதுதான், அது வெறும் ‘முற்றுப்பெறாத பிங்’ மட்டுமல்ல, ‘தோல்வியில் முடிந்த ஒரு லாக்-இன் முயற்சி’ (a failed login) என்பதை புரிந்து கொண்டார்கள்.

அதாவது, விமானத்தில் உள்ள சிஸ்டம், சாட்டலைட்டுடன் பிங் பண்ண முயன்று தோற்றது.

அதையடுத்து, அதுவரை பதிவாகிய பிங்குகள் அனைத்தையும் மீண்டும் செக் பண்ணியிருக்கிறார்கள். அவை சரியாக 1 மணி நேர இடைவெளியில் பிங் ஆகியுள்ளன. விமானம் ரேடியோ தொடர்பை இழந்தபின் அப்படி சரியாக 6 பிங்குகள் உள்ளன. இந்த அரைகுறை பிங், ஏழாவது.

அப்போது மற்றொரு விஷயத்தை கவனித்தனர். 6-வது பிங்குக்கும், இந்த 7-வது பிங்குக்கும் இடையே 1 மணி நேரம் இல்லை.

6-வது பிங் முடிந்து சரியாக 8 நிமிடத்தில் 7-வது அரைகுறை பிங் முயற்சி நடந்திருக்கிறது.

அதன் அர்த்தம் என்னவென்றால், 6-வது பிங் முடிந்து 8-வது நிமிடத்தில், விமானத்தின் சிஸ்டம் உருக்குலைந்திருக்கிறது. இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சிஸ்டம் ரீசெட் பண்ண தாமாகவே முயன்றிருக்கிறது (system to reset itself). ஆனால், ரீசெட் பண்ண முடியவில்லை. அதனால்தான் ‘தோல்வியில் முடிந்த ஒரு லாக்-இன் முயற்சி’ பதிவாகியது.

இதன்பின் எந்தவொரு பிங்கிங்கும் நடைபெறவில்லை!

இதனால், 6-வது பிங் முடிந்து சரியாக 8 நிமிடத்தில் விமானம் தண்ணீரில் மூழ்கியது என்ற ஊகத்துக்கு வந்துள்ளார்கள்.

ஏன் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும்? தரையில் வீழ்ந்திருக்க முடியாதா?

முடியாது. காரணம், இவர்களது கணிப்பின்படி, 6-வது பிங் இந்தியக் கடலின் தென்பகுதியில் இருந்து வந்துள்ளது. அதிலிருந்து 8 நிமிடங்களில் தரைக்கு போக முடியாது. எனவே தண்ணீரில் மூழ்கியது என முடிவு செய்தார்கள்.

இதுவரை நீங்கள் படித்தது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் மன்னிக்கவும், இதற்குமேல் இதை எளிதுபடுத்த நம்மால் முடியாது.

இவர்களது கணிப்பு, ஓரளவுக்கு ஊகத்தையும் சேர்த்துக் கொண்டதுதான் என்றாலும், தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் இதுதான் இருப்பதற்குள் உத்தமம்.

இந்திய கடலின் தென் பகுதியில் விமானம் மூழ்கியிருக்க சான்ஸ் உள்ளது.

இன்னும் எதற்காக பேச்சுவார்த்தை?எடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எவ்விதமான முன் நிபந்தனைகளும் விதிக்காவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என கடந்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. எனினும், மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு இன்றி பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைமைத்துவம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும், மாகாணசபை உறுப்பினர்களினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் முடியாவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு பெற்றுககொள்ள முடியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும், இதுவiரியல் தமக்கு தென் ஆபிரிக்க அதிகாரிகள் அழைப்பு விடு;க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் 7மில்லியன் பேர் உயிரிழப்பு காற்று மாசடைதல் காரணமாக

காற்று மாசுபாடுதான் உலகின் மிகப்பெரிய அழிவிற்கான அச்சுறுத்தல்: உலக சுகாதார அமைப்புகாற்று மாசடைதலே உலகின் சுகாதாரத்திற்கு ஒரே பெரிய அச்சுறுத்தல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2012 ஆண்டில் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலான மரணங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள ஏழை, நடுத்தர வருமான நாடுகளில் ஏற்பட்டுள்ளன. வீடுகளின் உட்புறச் சமையல் அறைகளில் சமையல் நெருப்புடன் வேலை செய்யவேண்டியிருக்கும் பெண்களும், அவர்களின் குழந்தைகளும் அளவிற்கு மீறி பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா போன்ற அதிவேகமாக தொழில் வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் இந்த வெளிப்புற காற்று மாசுபாடு ஒரு முக்கிய பிரச்சனை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வீடுகளில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களை காப்பாற்ற சுத்தமான, குறைந்த தொழில்நுட்ப மிகுந்த அடுப்புகள் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் வெளிப்புற காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் கொள்கைகளை அரசாங்கங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

என்ஜினீயராக வேலை பார்த்து வந்த பெண் தந்தையால் கொலை செய்யப்பட்ட பரிதாபம்

ஹைதராபாத்: ஜாதி விட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்த பெண் மென்பொறியாளர் தீப்தி என்பவரை கௌரவக் கொலை செய்தேன் என்று கொலையுண்ட பெண்ணின் தந்தை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். குண்டூரைச் சேர்ந்த ஹரிபாபு என்ற விவசாயினுடைய மகள் தீப்தி (26), தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த கிரண் குமார் என்பவரை கடந்த 2001ம் ஆண்டிலிருந்து காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தீப்தியின் பெற்றோர் எதிர்த்தனர்.

பெற்றோர்களின் கடும் எதிர்புகளுக்கிடையே தீப்தி-கிரண்குமார்ஜோடி கடந்த 21ம்தேதி ஐதராபாத்தில் உள்ள ஆர்யசமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனையறிந்த தீப்தியின் பெற்றோர் அவர்களது திருமணத்தை ஏற்றுகொண்டதாக நாடகமாடி தம்பதியரை வீட்டிற்கு அழைத்தனர். பின்னர் அங்கிருந்து தீப்தியை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற அவர்கள், அவரது கணவரையும் நண்பர்களையும் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருக்குமாறு கூறியுள்ளனர். நேற்று காலை கிரண் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எந்தவித பதிலும் இல்லை. இதனால் கிரண் தரப்பினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து, வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, தீப்தி கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் பெற்றோரை கைது செய்தனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கொலையுண்ட தீப்தியின் தந்தை, மகளின் கொலைக்கு தான் மட்டுமே காரணம் என்று கூறி கண்ணீர் விட்டார். தன் மனைவிக்கும் இக்கொலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.ஆனால் தந்தை ஒருவரால் மட்டுமே தீப்தியை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகமடைந்தகாவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

mardi 25 mars 2014

உகாண்டாவில் எதிர்பாராதவிதமாக படகு மூழ்கி 107 பேர் பலி

உகாண்டாவில் எதிர்பாராதவிதமாக படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில், 107 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் இருந்த காங்கோவை சேர்ந்த 250 அகதிகள் மீண்டும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அவர்கள் ஒரு பெரிய படகில் ஆலபர்ட் ஏரியில் வந்து கொண்டு இருந்தனர், அப்போது எதிர்பாரதவிதமாக படகு மூழ்கியதில் 107 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், இதுவரையிலும் 41 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை ராஜிவ் கொலை வழக்கு ஏழு குற்றவாளிகளை விடுவிக்க


இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் இவ்வாறு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளை விடுவிக்க, தன்னிச்சையாக தமிழக அரசு திட்டமிட்ட நடவடிக்கை ஏற்கமுடியாதது என்றும் அந்த பதில் மனுவில் கூறியுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு தொடர்பில் நடைபெற்ற விசாரணை, இந்த மாதம் கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, தமிழக அரசின் பதில் மனுவுக்கு மத்திய அரசு தரப்பின் பதிலை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். அதனால் அப்போது இந்த வழக்கை வரும் மார்ச் 26ம் தேதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தது. அதே சமயம் இது குறித்து குறிப்பிட்ட நீதிபதிகள், அரசின் பதில் மனுக்களை விட குற்ற விசாரணை முறைச் சட்ட விதிமுறைகளுக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்றனர்.
தமிழக அரசின் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா இந்த மாதம் கடந்த 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், அதில் குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 432-ன் கீழ் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், அதில் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த 7 பேரின் விடுதலை தொடர்பில் மத்திய அரசின் ஆலோசனை பெறுவதற்காக நோட்டீஸ் ஒன்று அனுப்பட்டதாகவும், ஆனால் மத்திய அரசு அதற்கு பதிலளிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளதாகவும், எனவே மத்திய அரசின் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத்தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பெப்ரவரி 18ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.
அதனை தொடர்ந்து பெப்ரவரி 19 ஆம் தேதியன்று இந்த மூன்று பேருடன் ஏற்கனவே ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்துவிடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையில் ராஜீவ் கொல்லப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்கள். இந்த மூன்று மனுக்களையும் ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் அதன் விசாரணைகள் மார்ச் 6ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை நாளை புதன்கிழமை (மார்ச் 26-ம் தேதி) இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

lundi 24 mars 2014

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு

162 பேர் படுகொலை: புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி ஆணைக்குழு!

மட்டகளப்பு குருக்கள்மடம் மற்றும் அம்பிளாந்துறை ஆகிய பகுதிகளில் வைத்து 12.07.1990 அன்று காத்தான்குடியைச் சேர்ந்த 162 பேர் கடத்தப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை நேற்று சனிக்கிழமை மாலை காணாமற் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆணைக்குழுவிடம் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே காணாமற் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இவ் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளது.
காணாமற் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் அதன் உறுப்பினர்களான காஞ்சனா வித்தியாரத்ன, திருமதி மனோ ராமநாதன் ஆகியோரும் குழுவின் சட்டத்தரணிகளும் அதிகாரிகளும் இந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதன்போது ஆணைக்குழுவினர் இந்த இடம் மற்றும் கடத்தப்பட்டவர்களின் விபரங்களையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கிடம் கேட்டறிந்து கொண்டனர்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புதிய தேசிய தலைவர் கோபி?

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபி(31) பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இவர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் காலக்கட்டத்தில்; இராணுவத்திடம் சரணடைந்து பூந்தோட்டம் முகாமிலிருந்து தப்பித்து வேலைவாய்ப்புக்காக கட்டார் சென்றுள்ளார்.அதன் பின்னர் ஐரோப்பியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டு தமிழ் புலிகள் புலம்பெயர் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் பெரும்நாயகம் சிவபரன் என்றழைக்கபடும் நெடியவனை நோர்வேயில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அவரிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பிய அவர், புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவரான சண்முகலிங்கம் சிவசங்கர் என்றழைக்கப்படும் ஜயகுமார் பாலேந்திரன் (வயது 50) (பொட்டு அம்மானின் கீழ் பயிற்சிபெற்றவர்) கிளிநொச்சி தர்மபுரத்தில் விதவை பெண்ணொருவரின் வீட்டில் இருக்கும் போது பொலிஸார் கைது செய்வதற்கு சென்றிருந்த வேளையில் நூலிழையில் தப்பிவிட்டார்.
அவரை கைது செய்வதற்கு  நிராயுதபாணியாக சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் வயிறு மற்றும் பாதத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு அந்தவீட்டிலிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோபியும் அந்த வீட்டில் இருந்ததாகவே பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

dimanche 23 mars 2014

மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ஷ, இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு – 3;வீ. ஆனந்தசங்கரி

anandasangary2அமெரிக்காவின் அனுசரணையுடன் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையில் கூடி விவாதித்து வாக்கெடுக்கும் திகதி நெருங்கிவந்து கொண்டிருப்பதால் அவசரஅவசரமாக நான்,  நம்நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்காது இருப்பதற்காகவும், நாட்டின் பெயர் எமது சரித்திரத்தில் கண்டனத்துக்குள்ளானது என்ற அவப் பெயரைத் தவிர்ப்பதற்காகவும் எனது ஆலோசனைகளை வழங்குகிறேன். நான் வருவதை முன்கூட்டி கூறுபவனுமல்ல. சாத்திரம் சொல்பவனுமல்ல. ஆனால் நான் நாட்டையும், நாட்டு மக்களையும் உள்ளன்போடு நேசித்து அக்கறை கொண்டுள்ளவனாவேன். கடந்த காலத்தை  நினைவுபடுத்தி எனது மனதை மேலும் புண்படுத்தவிரும்பவில்லை. ஆனால் நான் எவ்வாறு எனது நாட்டிலும், இங்கு வாழும் மக்களிலும் அக்கறைகொண்டு கடந்த கசப்பான காலங்களில் எடுத்த திடகாத்திரமான முடிவு இருதடவைகள் பாராளுமன்றத் தேர்தலில் என்னைத் தோற்க வைத்ததும் துரோகி என்ற கௌரவப் பட்டத்தையும் பெற்றுத் தந்தது. மிகவும் அதிகாரமுடையவர் என்பதால் என்னுடைய கௌரவம் நேர்மை பற்றி திடகாத்திரமாக கூறக்கூடியவர் நீங்கள் ஒருவரே! நான் என்றைக்கும் எதுவித உதவியையும் உங்களிடம் கேட்டவனுமல்ல. நீங்களும் ஏதேனுமுதவியை எனக்கு வழங்கி என்னை வசப்படுத்தியவருமல்ல. சொந்த இலாபத்துக்காக என்னுடைய நிலையை துஷ்பிரயோகம் செய்தவனுமல்ல. கிளிநொச்சியுடன் எனது தொடர்பு அரைநூற்றாண்டுக்கு மேலாக இருந்தும், கிளிநொச்சியிலோ அல்லது வேறுஎங்காவதோ ஒரு சிறு துண்டுக் காணிகூட சொந்தமாக இல்லாதவன். 45 ஆண்டுகாலமாக நான் வாழ்ந்த வீட்டின் சொந்தக்காரர் தமது வீட்டை மிக சொற்ப விலைக்குத் தந்துதவியதால் அவ்விடத்தில் வந்து பழகிய தமிழ்த் தலைவர்கள் முதியோர், இளையோர் என்ற பாகுபாடின்றி அனைவரினதும் பொது ஞாபகச் சின்னமாக பாதுகாக்க உத்தேசித்துள்ளேன். 

அடிக்கடி உங்களுக்கு பலதடவைகள் ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். அவற்றில் எவற்றையேனும் எடுத்து செயற்பட்டதாக நானறியேன். புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தனிப்பட்ட ஒருவரோ அல்லது ஒரு குழுவினரோ வென்றெடுக்கவில்லை. அது பலரின் ஒரு கூட்டுமுயற்சியே! இதற்கான அர்ப்பணிப்புக்கள் இராணுவத்தினர், பலாத்காரமாக போராட்டத்தில் இணைக்கப்பட்ட இளைஞர்கள், பல்வேறு இன மதத்தைச் சார்ந்த மக்கள் ஆகியோரின் முயற்சியால் பெறப்பட்டதே! இதற்குரிய உதவி பலதரப்பட்டவர்களால் பல்வேறு இடங்களிலுமிருந்து கிடைத்தன. அனேகமாக எல்லா நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளை தத்தம் நாட்டில் தடைசெய்திருந்தன. அவைகளில் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஸ்கன்டினேவியன் நாடுகள் போன்றவை அடங்கும். எல்லாவற்றுக்கும் மேலாக எமது அயல்நாடான இந்தியாவின் தமிழ்நாட்டுப் பொலிசாரின் கியூ பிரிவு தாங்கள் இன்றேல் நாடு அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நிரூபித்துக்காட்டினர். 

ஜனாதிபதி அவர்களே! நீங்கள் செய்த மிகப் பெரிய தவறு அமெரிக்கத் தீரமானத்தை ஆதரிப்பதாகக் கருதப்பட்ட நாடுகளைக் கண்டித்தவர்களை தடுத்து நிறுத்த தவறியதாகும். ஏதாவதொரு நாடு உள்நோக்கோடு எம்மைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது எனக்கூறினால் நம்நாட்டில் எதை எடுப்பதற்கு அந்நாடு  அவ்வாறு செயற்பட வேண்டும்? அமெரிக்கப் பிரேரணையை ஆதரிப்பதா அல்லது நடுநிலை வகிப்பதாகக் கூறுகின்றவர்கள் அத்தீர்மானங்கள் பௌத்த மதத்திற்கு மாறுபட்டதல்ல என்பதால் இப்போதாயினும் இதைக் கண்டித்தவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றி தீர்மானங்களை வரவேற்பர். 

நீங்கள் செய்த இரண்டாவது தவறு உலகத்தைச் சுற்றிவந்து பல நாடுகளிடம் இத்தீர்மானத்தை எதிர்க்கும்படி கேட்பதாகும். மிக நெருக்கமான நட்புநாடு கூட ஒன்றில் இத்தீர்மானத்தை ஆதரிக்கும் அல்லது குறைந்தபட்சம் நடுநிலை வகிக்கும் என்பதை தயவுசெய்து உறுதியாக நம்புங்கள். இதற்கு ஒரு காரணம் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தமது மூதாதையர்கள் செய்த தவறால் விரக்தியடைந்து இருந்திருக்கலாம். இவர்களுக்கு பழைய சம்பவங்களை நினைவு படுத்துவதால் எதிர்மாறான விளைவுகள் உருவாகுமேயன்றி எதுவித பிரயோசனமும் கிடையாது. எம்மை ஒருவர் பார்த்து எகலபொல குடும்பத்துக்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள் என்றால் எமது பதில் என்னவாக இருக்கும்? 

யுத்தம் முடிவில் பல மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளமையை யாரும் மறக்க முடியாது. ஆனால் அதற்கு எல்லா படை வீரர்களையும் பொறுப்பாளியாக்க முடியாது. இராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஓர் தப்பான கட்டளையின் விளைவை த சார்ஜ் ஒப் த லைற் பிறிகேட் என்ற கவிதையில் ஒரு கவிஞன் மிக அழகாக விளக்குகிறார். “ஒருவன் தவறு செய்து விட்டான் என தெரிந்தும் அவர்களால் தட்டிக் கேட்க முடியாது. அவர்களால் நியாயப்படுத்தவும் முடியாது. இட்ட பணியை செய்து முடிக்க வேண்டியதுதான். பள்ளத்தாக்கை நோக்கி 600 பேரும் சவாரி செய்கின்றனர். பீரங்கிகள் அவர்களின் இடப் பக்கமும், வலப் பக்கமும், எதிராகவும் ஒரே நேரத்தில் வெடிக்கின்றன. ஆனால் அந்தப் போர் வீரர்களோ கேள்வி கேட்க முடியாது. பள்ளத்தாக்கில் அந்த 600 பெரும் சவாரி செய்து இறுதியில் மாண்டனர்” யுத்த முனையிலிருந்த போர் வீரர்களின் நிலையும் இவ்வாறாகத்தான் இருந்திருக்கும். அவர்களைத் தண்டித்து அவர்களுடைய மனித உரிமைகளையும் மீறாது செயற்பட வேண்டும். ஆனால் உங்களுக்கு ஒரு கடமை உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிப்பதோடு  நீங்கள் ஆளுகின்ற மக்களுக்கு உங்களுடைய கடமையைச் செய்யும் அதேவேளை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் குற்றம் சாட்டப்படுகின்ற போர்வீரர்களை தண்டனையிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதாகும். 

மூன்றாவது தவறு ஏற்கனவே கூறப்பட்ட இரண்டு காரணங்களைவிட முக்கியமானது. அதாவது 13ஆவது திருத்தத்திலும் கூடுதலான அதிகாரத்தை வழங்குவதாக இந்திய அதிகாரிகளுக்கு கூறியதை அமுல்நடத்த தவறியதே. இதுவே எல்லாவற்றையும்விட மோசமான தவறாகும். என் பார்வைக்கு எமது நாடு இந்தியா இராஜதந்திரம், நேர்மை ஆகியவற்றிலிருந்து பாடம் கற்க தவறியதாகும். எனது பழைய ஆவணங்களில் இருந்து 25.05.1995 திகதியிட்டு என்னால் எழுதப்பட்ட கட்டுரையும், தினமின என்ற சிங்கள நாளேட்டில் இருநாட்களின் பின் வெளியான கட்டுரையும் அகப்பட்டன. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றதாக அவை அமைந்திருந்தன. அவற்றில் சில பகுதிகளை இங்கே குறிப்பிடும் வேளையில் அவ்விரு ஆவணங்களின் பிரதிகளை நீங்கள் பார்வையிட்டு கவனம் எடுக்க வேண்டும் என்பதற்காக இத்துடன் இணைத்துள்ளேன். 

அக்கட்டுரை “இன்றைய நிலையில் இலங்கை இந்திய உறவு” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் உள்ள 20 மைல் தூரம், இருநாடுகளுக்குமிடையில் இருக்க வேண்டிய உறவு, வெறும் நட்பு நாடாக அல்ல – தேவையைப் பொறுத்து விரைந்து வந்து உதவக்கூடிய நாடாக இருக்க வேண்டும் என்றும் அக்கட்டுரையில் இந்தியா எமது பிரச்சனைகளில் பங்கெடுக்க மிகத் தயாராக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளேன். மேலும் நேரு கொத்தலாவல ஒப்பந்தத்தில் இருந்து சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் வரை எடுத்த தீர்மானத்துக்கு அமைய எதுவித தயக்கமும் இன்றி பெருந்தொகையான இந்திய வம்சாவளியினரை இந்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. கொள்கையளவில் எமது கட்சி இந்த ஏற்பாட்டுக்கு மாறாக இருந்தாலும் தங்களின் பிரச்சினை இல்லாத ஒரு விடயத்தில் இந்திய அரசு இலங்கைக்கு எவ்வாறு உதவ முன்வந்தது என்பதை இச்செயலில் காண முடிகிறது. 

இன்று மிகவும் பிரச்சினைக்குரிய விடயம் கச்சதீவு ஆகும். அதுபற்றி அக்கட்டுரையில் பின்வருமாறு நான் கூறியிருந்தேன். “ஸ்ரீமதி இந்திரா காந்தி அவர்கள் இலங்கைக்கு இந்தியா கச்சதீவைப் பாரமளிக்கின்றபோது மிகப்பெரிய எதிர்ப்பும் ஆட்சேபணையும் இருந்தது. ஆட்சேபித்தவர்களுக்கு இதுஒரு பெறுமதியற்ற கற்பாறை நிறைந்த தீவு என சமாதானம் கூறும்பொழுது தான் அவ்வாறு செய்வதால் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு  ஒரு  காலத்தில் பங்கம் ஏற்படும் என்பதை நன்கு அறிந்திருந்தார். இது உண்மையில் இந்திரா காந்தி அம்மையாருடைய நட்பு நிறைந்த நற்செயலாகும். இலங்கை ஒருபோதும் தமக்கு துரோகம் செய்யாது என நம்பிக்கை கொண்டிருந்தார்.

அக்கட்டுரையில் நான் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளேன். அவற்றில் சில முக்கியமானவையும் நம் இருநாடுகள் சம்பந்தப்பட்டவையுமாகும். 

ஏனையவை ஒருபுறமிருக்க, கச்சதீவு சம்பந்தமாக எழுதப்பட்டுள்ள பகுதியை ஊன்றிப் படியுங்கள். அன்றைய இலங்கைப் பிரதமர் கௌரவ சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய கச்சதீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டபோது இந்திய மாநிலங்கள் சில - குறிப்பாக தமிழ்நாடு பெரும் எதிர்ப்புக் காட்டியது. கச்சதீவை விடுதலைப் புலிகள் தமது தளமாக உபயோகிக்க வாய்ப்பு உண்டு என அவர் கருதியிருந்தார். கச்சதீவு எதுவித பெறுமதியுமற்ற கல்லுப்பூமி என கூறி எதிர்ப்பாளர்களை ஸ்ரீமதி இந்திரா அம்மையார் மௌனப்படுத்தி அதுசம்பந்தமாக பெரிதாக எதிர்க்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் அப்போது பின்நாட்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என அறிந்திருந்தார். அவ்வாறு ஒருவர் இன்றும் சிந்திப்பதில் தப்பில்லை. விசேடமாக எமது நாடும் சீனாவும் காட்டிவரும் நெருங்கிய உறவும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுமாகும். 

இந்திய சாணக்கியத்திலும் ஜனநாயகத்திலும் இருந்து நாம் கற்க வேண்டிய பலவிடயங்கள் உண்டு. கச்சதீவு சம்பந்தமாக நமது நாடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இந்திய மீனவருக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. இருந்தும் இன்று கச்சதீவு இலங்கையின் ஏக சொத்தாகும். கச்சதீவு இன்று ஓர் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு அரசு உட்பட இந்தியாவின் பல மாநிலங்கள் கச்சதீவை இந்திய அரசு மீளப் பெறவேண்டும் என பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்தக் கோரிக்கையும் அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களும் இந்திய அரசுக்கு மிக சங்கடமான நிலைமையை உருவாக்கியுள்ளது. விடயம் நீதிமன்றம் வரை சென்றுள்ளமையால் இந்திய அரசு எதுவித ஆரவாரமுமில்லாமல் கச்சதீவை மீளப் பெற்றிருக்க முடியும். இலங்கை அரசுகூட மௌனம் சாதித்திருக்கும். இந்திய அரசு விரும்பியிருந்தால் உயர் நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருக்கும். ஆனால் பெரும் அபூர்வ சம்பவம் என்னவெனில் உயர்நீதிமன்றம் மத்திய அரசின் அபிப்பிராயத்தை கேட்டபோது, அதிர்ச்சி தரக்கூடிய ஆனால் பாராட்டப்பட வேண்டிய பதில் கையளிக்கப்பட்டதுதான். மீளப் பெறமாட்டோம் என நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியதோடு ஒருபடி மேலே சென்று இந்திய மீனவர் அங்கே மீன்பிடிக்கப்படாது என்றும் தெரிவித்தது. நான் உங்களைக் கேட்பது இப்பேற்பட்ட ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? என்று. 

ஜனாதிபதி அவர்களே! இந்திய அரசின் முடிவை ஆராய்ந்து பார்ப்பீர்களேயானால் ஒரு விடயம் தெளிவாகின்றது. சரியோ பிழையோ ஒர் தலைவி எடுத்த முடிவுக்கு மாறாக அவருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த அரசு விரும்பவில்லை. அத்தலைவி இறந்து 30 ஆண்டுகள் கடந்த பின்பும்கூட அவரின் கௌரவத்துக்கு களங்கம் ஏற்படுத்த அரசு தயாரில்லை. மிகப்பாராட்டுதலுக்குரிய விடயம் யாதெனில் அண்மையில் வரஇருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்த விடயம் முக்கிய இடம்பெறும் என்பது உறுதி. ஒர் பெரும் அரசியல் தலைவர் கூறியதுபோல தான் விசுவாசமாக நேசிக்கும்  சமூகத்திடம் பொய்களைக்கூறி வெற்றிபெறுவதைவிட உண்மையைக் கூறி தோல்வியைத் தழுவிக் கொள்வது மேலானதாகும் என காங்கிரஸ் கூட்டாட்சி எண்ணுவதுபோல் தோன்றுகிறது. இதே கொள்கைதான் நான் 55 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு பிரவேசித்த காலம்தொட்டு கடைப்பிடித்து வருகின்றேன். 

1947ஆம் ஆண்டு கலைக்கப்பட இருந்த சட்டசபையின் தமிழ் உறுப்பினர்களுக்கு தேசபிதா என வர்ணிக்கப்படும் அதிமரியாதைக்குரிய அமரர் டி.எஸ். சேனநாயக்கா அவர்கள் கொடுத்த வாக்குறுதி இந்திய பிரஜா உரிமைச் சட்த்தின் அமுலாக்கத்துடன் மீறப்பட்டது பற்றி இங்கே குறிப்பிடுவதில் தப்பில்லை என நம்புகிறேன். அத்துடன் அமரர் பண்டாரநாயக்கா அவர்கள் தந்தை செல்வநாயகத்துடன் செய்து கொண்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் எதிர்க்கட்சியின் ஆட்சேபணையால் அமரர் பண்டாரநாயக்கா அவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது. அதன்பின் ட்டலி - செல்வா ஒப்பந்தத்திற்கும் அதே கதிதான். ஆனாலும் தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி செய்த டட்லி அரசு  ஒப்பந்தத்தை கையில் எடுக்காமலேயே ஆட்சியை நடத்தி முடித்தது. அதனை அடுத்து உங்களால் உருவாக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கை கூட இயற்கை மரணமெய்தியது. 

ஜனாதிபதி அவர்களே! இப்போது நான் தங்களை கேட்பது கடந்த காலத்தைப் போல் அல்லாமல் நாடு எதிர்நோக்கியுள்ள இன்றைய அவலநிலையை மனதில் கொண்டு எமது நாட்டுக்கு அமைதியைத் தேடித்தர அயராது உழைத்து தன் உயிரையே தியாகம் செய்த இந்திய முன்னை நாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் முயற்சியால் உருவாகிய 13ஆவது திருத்தச் சட்டத்தை துணிச்சலுடன் அமுல்படுத்துங்கள். இதுவே நீங்கள் கௌரவம் மிக்க பெரும் நாடாகிய இந்தியாவுக்கும் அந்த நாட்டின் ஒப்பற்ற மகனாகிய ராஜீவ் காந்தி அவர்களுக்கும் காட்டும் பெரும்மரியாதையாகும். இந்தியா என்றும் எம்மக்களுக்கோ எமது நாட்டுக்கோ எதுவித தீங்கும் விளைவிக்கவில்லை. விளைவிக்கவும் மாட்டாது.

13ஆவது திருத்தத்தை உடன் அமுல்படுத்துவதால் அமெரிக்காவின் தீர்மானத்தின் பலபகுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதோடு முதல் கட்டமாக சர்வதேச விசாரணைக்கு செல்லவிடாது தவிர்க்கவும் உதவும். ஈற்றில் முடிவுரையாக நான் வலிந்து கேட்பது உங்கள் பிரதிநிதிகள் மூலம் ஓர் திருத்தப் பிரேரணைக்கு ஆதரவு கேளுங்கள். ஏனைய விடயங்களாகிய உயிருக்கும் உடமைக்கும் நஷ்டஈடு, யுத்தகால குற்றங்கள் போன்ற அத்தனையையும் விசாரிப்பதற்கு, தீர்மானத்தை முன்வைத்த நாடுகளையும் உள்ளடக்கி இந்திய பிரதிநிதியின் தலைமையில் ஓர் குழுவை அமைக்குமாறு  கோருவது. 

நாட்டின் கௌரவத்தை காப்பாற்றுவது இப்போது உங்கள் கையில். எந்த நாட்டுக்கும் மக்களுக்கும் மனச்சங்கடமோ வேதனையையோ ஏற்படுத்தாமல் கடமை உணர்வுள்ள ஓர் இலங்கைப் பிரஜையாக என் கடமையைச் செய்துள்ளேன் என திருப்தி அடைகிறேன். 

அன்புடன்,


வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

vendredi 21 mars 2014

இலங்கையில் சிறு போக நெல் வேளாண்மை செய்கை பாதிக்கப்படும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  பருவ மழை குறைவு காரணமாக  நீர்ப்பாயச்சலுக்குரிய  சிறு போக நெல் வேளாண்மை  செய்கை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சமும் கவலையும் வெளியிட்டுள்ளார்கள்
வழமையாக சிறுபோக நெல் வேளாண்மை செய்கக்குரிய காணியில் இந்த ஆண்டு 29 சத வீதம் தான் செய்கை பண்ணுவதற்கு நீர்பாசன தினைக்களத்தினால் அனுமதியளிக்கப்பாட்டுள்ளதாக கமநல சேவைகள் தினைக்களம் கூறுகின்றது 
பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெய்ய வேண்டிய பருவ மழை   பிரதேசங்களில் இன்னமும்  பெய்யாத நிலையில்  அநேகமான பிரதேசங்களில் வரட்சியான நிலை காணப்படுகின்றது.
 
மழை இல்லாத நிலையில் விவசாய நீர்ப்பாசன குளங்களிலும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டமும் குறைந்து வருகின்றது.
நாட்டின் தற்போதைய வரட்சி நிலையை நீக்க  அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் மழை வேண்டி பிரதர்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.
 
இந்த ஆண்டுக்கான பருவ  மழை குறைவு காரணமாக நீர்பாசன அதாவது சிறு போக நெல் வேளாண்மை செய்கையை மட்டுப்படுத்துமாறு  நிர்பாசன இலாகாவினால் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தங்களது  நெல் வேளாண்மை செய்கையில் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 தொடக்கம் 15 சத வீத ஏக்கரில்  விவசாயிகளுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றார்கள்.
இம் மாவட்டத்திலுள்ள சிறு  நெல் வேளாண்மை செய்கைக்கு என அடையாளம் காணப்பட்டுள்ள 60 ஆயிரம் ஏக்கரில் இந்த ஆண்டு 17ஆயிரத்து 500 ஏக்கரிலே  நெல் வேளாண்மை செய்கைக்கு உத்தேசிக்கனப்பட்டுள்ளது

முதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எதிராக கூண்டில் ஏற்றும் அளவிற்கு வழக்கு!!

 முதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எதிராக சுரேஷ்.P யின் பிரத்தயக செயலாளர் அன்னலிங்கம் உதயகுமார் வழக்கு!!
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக அவர் சார்ந்த கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை தலைவர் அன்னலிங்கம் உதயகுமார் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்தே அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலி. கிழக்கு பிரதேச சபை தலைவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்.P யின் பிரத்தயக செயலாளருமான அன்னலிங்கம் உதயகுமார் தாக்கல் செய்த மனுவொன்றை இன்று விசாரித்த நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதேச சபையின் 2014 வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் தான் பதவி விலக்கப்படுவதை எதிர்த்து வலி. கிழக்கு பிரதேச சபை தலைவர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி சபை ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை!
முதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமியினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது
.
அதாவது, வடக்கு மாகாண முதலமைச்சர் மாகாண சபையின் 13வது திருத்தச் சட்டதிட்டங்களை மீறியும், மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோரின் அதிகாரங்களுக்கு அப்பால் சென்று செயற்படுகின்றார்.
அத்தோடு, பிரதம செயலாளருடைய உரிமையை பறிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவதாகக் தெரிவித்தும், தன்னுடைய உரிமைப் பெற்றுக்கொள்ள நீதிதமன்றம் உதவ வேண்டுமென்றும் பிரதம செயலாளரினால் தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.