அமெரிக்கா, தமது வான் தாக்குதல் பலத்தை ஐரோப்பாவில் அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கிவிட்டது. அமெரிக்க விமானப்படையின் 6 போர் விமானங்களை ஐரோப்பாவுக்கு அனுப்ப நேற்றிரவு உத்தரவிட்டுள்ளது.
பென்டகனின் இந்த அறிவிப்பு, நேற்றிரவு வெளியானது. அதன்படி, ஆறு F-15 ரகத்திலான குண்டுவீச்சு தாக்குதல் விமானங்கள் உடனடியாக புறப்பட்டுச் செல்ல உத்தரவு கொடுக்கப்பட்டது.
இந்த ஆறு விமானங்களும், பால்டிக் நாடுகளின் மேல் பறந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா ‘ராணுவ ரீதியில்’ கடுமை காட்ட தொடங்கியபின் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.
ரஷ்யா காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து டொபோல் RS-12M ரக ஏவுகணையை ஏவியது பற்றி விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம்.
அது நடந்து 24 மணி நேரத்தில் அமெரிக்கா தமது போர் விமானங்களை அந்த ஏரியாவுக்கு அனுப்புகிறது என்பதை கவனிக்கவும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire