இந்தச் செய்தி உண்மையாக இருந்துவிட்டால், அமெரிக்கா மற்றொரு அவமானத்தை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக்கொள்கிறது (ஸ்னோடன் விவகாரத்துக்கு அடுத்து).
உக்ரேனில் ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதியின்மேல் உளவு பார்க்க வந்த அமெரிக்க உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய அரசு நிறுவனமான ரொஸ்டெக், இந்த தகவலை வெளியிட்டுள்ளது (அநேக சர்வதேச மீடியாக்கள் இந்த செய்யை இருட்டடிப்பு செய்துள்ளன).
ரொஸ்டெக் என்பது, ரஷ்யா அரசுக்கு சொந்தமான நிறுவனம். இவர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு தேவையான பலவித எலக்ட்ரானிக் சாதனங்கள், ராடார்கள் ஆகியவற்றை தயாரிக்கிறார்கள்.
உக்ரேனின் கிரிமியா பகுதியில் ரஷ்ய ராணுவம் ஊடுருவியுள்ளது. ரஷ்யா தமது ராணுவத்தை அங்கிருந்து திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுதத்துகிறது. இந்த நிலையில், கிரிமியா பகுதிக்கு மேலே, உளவு பார்ப்பதற்காக அமெரிக்க உளவு விமானம் ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது என்கிறது, ரொஸ்டெக்.
“தரையில் இருந்து 4,000 மீட்டர் உயரத்தில் (சுமார் 13,000 அடி) பறந்த இந்த சிறிய விமானத்தை தரையில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், அந்த விமானத்தில் இருந்து தரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொண்டிருந்த சிக்னல்களை, ரஷ்ய சிக்இன்ட் உளவு மையம் ஒன்று இடைமறித்ததில், வானில் விமானம் ஒன்று சுற்றிக் கொண்டிருந்த விஷயம் தெரியவந்தது.
நாம் உடனடியாக செயல்பட்டு, அந்த உளவு விமானத்தை தரைக்கு கொண்டுவந்துள்ளோம். இது ரஷ்ய அரசால் செய்யப்பட்டதல்ல. எமது நிறுவனத்தால் (ரொஸ்டெக் – அதுவும் அரசு நிறுவனம்தானே) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை” என தகவல் வெளியிட்டுள்ளது ரொஸ்டெக்.
“தரையில் வீழ்த்தப்பட்ட உளவு விமானத்தை நாம் ஆராய்ந்ததில், இதன் IN (Identification Number) MQ-5B என தெரிந்து கொண்டோம். எம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த அடையாள எண் உடைய உளவு விமானம், அமெரிக்காவின் 66-வது உளவு பார்க்கும் பிரிகேட்டுக்கு சொந்தமானது. பவாரியா விமான தளத்தில் இருந்து இயக்கப்படுவது” என அக்குவேறு ஆணிவேறாக விபரங்களை வாரிக் கொட்டியுள்ளது ரஷ்ய அரசு நிறுவனம்.
இந்த செய்தி மட்டும் நிரூபிக்கப்பட்டால், உளவு பார்த்தல் விஷயத்தில் அமெரிக்கா ரஷ்யாவிடம் இவமானப்படுவது, இது 2-வது தடவையாக இருக்கும்.
முதல் தடவை அவமானப்பட்டது, 1960களில்!
அமெரிக்க ஜனாதிபதியாக எய்ஸன்ஹோவர் இருந்தபோது, சி.ஐ.ஏ.வால் தயாரிக்கப்பட்ட U-2 உளவு விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதுடன், அதை செலுத்திய விமானி பிரான்சிஸ் பவர்ஸ் என்பவரையும் உயிருடன் பிடித்து, அமெரிக்காவை அவமானப்படுத்தியது. ; விறுவிறுப்பு
Aucun commentaire:
Enregistrer un commentaire