ஐ.நா.தீர்மானத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகளென தம்மை அடையாளப் படுத்துவோர் விமர்சித்து குழப்ப வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் நகைப்பிடமாகத் தோன்றுகின்றது. குழப்பங்களுக்கெல்லாம் காரணமானவர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் விடுப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.
தமிழ் மக்களின் விடுதலைப்; போராட்டத்தை கொச்சைப் படுத்தி அப்போராட்டமானது வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளால் விரக்தியடைந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று கூறியதோடு மட்டுமல்லாமல், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு காரணமாணவர்கள் இலங்கை இராணுவம் மட்டுமல்ல, இராணுவத்தின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பொதுமக்களைவிட விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள்தான் அதிகம்; எனக்கூறி, விடுதலைப் புலிகளையும் சர்வதேச விசாரணைகளுக்குட்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தவர்தான்தான் இந்த சுமந்திரன் அவர்கள். இவ்வாறு கூறியவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டுவார். எந்த நம்பிக்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவரை அங்கு அனுப்பி வைத்தது.
இவர் கொழும்பில் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், தென் இலங்கையில் சில அரசியல் தலைவர்களை திருப்தி படுத்துவதற்காகவும் இடைக்கிடை இவ்வாறான அறிக்கைகளை தமிழிலும் விசேடமாக சில பிரமுகர்கள் வாசிக்கவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்திலும் விடுப்பார். இவ்வாறானவர் எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை ஐ.நா சபையில் எடுத்துரைப்பார்.
விடுதலைப் புலிகள் என்பது போராட்டக்குழுவாக இயங்கிய ஒரு அமைப்பு. ஆனால் இலங்கை அரசு என்பது ஒரு அங்கீகரிக்கப் பட்ட அமைப்பு. எனவே சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அரசு கட்டுப்பட்டே ஆக வேண்டும். எனவே சர்வதேச சட்டதிட்டங்கள், மனித உரிமைகள் மீறப் படும் போது கண்டிப்பாக அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பில் யார் எந்த பதவியில் இருந்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். அதுமட்டுமல்ல அவர்கள் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
யாரைப் பிடித்து எப்படி விசாரணை செய்வது? விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திவிட்டு, புலிகளும் விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கூறித்திரிபவர் எவ்வாறு எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எமது மக்களின் நிலை பற்றி எடுத்துரைப்பார்?. இவர்தான் தமிழ் மக்களின் பிரதிநிதி என்று தன்னைக் கூறிக்கொண்டு தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள இரட்டை வேடம் போடுகின்றார்;. இவ்வாறானவர்களின் கையில் தமிழ் மக்களின் தலைவிதி நிர்ணயிக்கப்படுவதை நினைக்கும் போது, தமிழ் மக்களின் சாபக்கேட்டை ஆண்டவனாலும் தீர்த்து வைக்க முடியாதுபோல தோன்றுகின்றது. ஏனெனில் தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே எழுதிக் கொண்டார்கள்.
மனித உரிமை மீறல்கள் எந்தளவிற்கு முக்கியமாக விசாரணை நடத்தப்பட வேண்டியதோ, அந்தளவிற்கு முக்கியமானது எமது மக்களின் வாழ்வாதார பிரச்சினையும். அதாவது பசி பட்டினியுடன் வாழும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வறுமையைப் போக்க வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதுவரை அவர்களுக்கு ஒழுங்கான வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக உடல் உறுப்புக்களையும் தம் நெருங்கிய உறவுகளையும் இழந்துவிட்டு, குண்டுச் சிதறல்களை உடம்பிலே தாங்கிக்கொண்டு, வாழ வழி தெரியாது தவிக்கும் மக்களின் துயரங்களையும் துடைக்க வேண்டும். எனவே இந்தப் பிரச்சினைகளும் எல்லோருடனும் கலந்துரையாடி, தீர்த்து வைக்கப்பட வேண்டும்.
இதைவிடுத்து வெறுமனே வீர வசனங்கள் பேசி மக்களின் உணர்வுகளை தூண்டிவி;ட்டு அறpக்கைள் விடுவதால், எவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் “தமிழ் மக்கள்தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி” என்று கூறி சரத்பொன்சேகாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்த போது சிங்கள மக்கள் முன் எப்பொழுதும் இல்லாதவாறு ஒன்று திரண்டு மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து வெற்றிபெற வைத்தார்களோ, அதே போன்று இலங்கையிலுள்ள பொது அமைப்புகள் அத்தனையும் ஒன்று திரண்டு ஐ.நா.தீர்மானத்திற்கு எதிராக ஜனாதிபதிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள்.
அதன் மூலம் ஜனாதிபதிக்கு ஆதரவு பெருகிக் கொண்டே போகும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி தமிழ்மக்கள்தான். தலைவர்கள் எல்லோரும் தப்பித்துக் கொள்வார்கள்;. இரட்டை வேடம் போடுபவர்கள் எப்படியும் வாழப் பழகிக் கொள்வார்கள். புத்திஜீவிகள் அத்தனை பேரும் புத்தியாக சீவித்துக்கொள்வார்கள். அப்பாவி மக்கள் மட்டும் அகப்பட்டுக் கொள்வார்கள்;. போராட்டக் களத்தை சற்று திரும்பிப் பார்த்தால் புரியும் அனைவருக்கும,; இன்று புத்திஜீவிகள் என்று கூறிக் கொள்பவர்களோ அவர்களின் பிள்ளைகளோ அன்றைய போரட்டங்களின் போது புத்தியாக சீவித்துக் கொண்டிருந்தார்கள்.
சிங்கள மக்களுக்கும்சரி, இஸ்லாமிய மக்களுக்கும்சரி அம்மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்கக்கூடிய நல்ல தலைவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் நல்ல தலைவர்களும் இல்லை, நல்லவர்களை தேர்தல் காலங்களில் எம் மக்கள் தேர்ந்தெடுப்பதும் இல்லை. அதன் விளைவுதான் இன்று சுமந்திரன் போன்றோர் வெளிநாடு சென்று எம்மக்களுக்காக ஆதரவு திரட்டுகின்றார்கள். குழப்புவதற்குத்தான் நான் இருக்கின்றேனே, பின்பு நீங்கள் எல்லோரும் எதற்கு என்று கூறுகின்றார் போலும். இன்றைய சூழ்நிலையில் எமது பிரச்சினையை இந்தியாவிடம் ஒப்படைத்துவிடுவதே சாலச்சிறந்தது. எமது இன்பத்திலும், துன்பத்திலும் உதவும் ஒரே நாடு இந்தியாவே.
வீ. ஆனந்தசங்கரி;,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

Aucun commentaire:
Enregistrer un commentaire