கடமைக்குச் செல்லும் அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் துப்பாக்கி வழங்கப்பட உள்ளது.கடமை நேரத்தில் பயன்படுத்துவதற்காக காவல்துறையினருக்கு கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி,இனிவரும் காலங்களில் காவல்துறை சேவையில் இணைந்து கொண்ட நாள் முதல் கைத்துப்பாக்கியொன்று வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.காவல்துறை உத்தியோகத்தர்களின் தற்பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடி;ககை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தற்காப்பு நோக்கிற்காக துப்பாக்கிகள் வழங்கப்படுவது வழமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆயுதமற்ற காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது அண்மையில் தாக்குதுல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளன.எவ்வாறெனினும், ரி56 துப்பாக்கிகள் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:
Enregistrer un commentaire