தில்லியில் வருகிற 26–ந்தேதிபா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் மோடியுடன் அமர்ந்து விருந்து சாப்பிட ஆசைப்படுபவர்கள் சாப்பிடலாம். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
. விருந்து கட்டணம் ரூ. ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் கொடுப்பவர்கள் மோடியின் அருகில் அமர்ந்து சாப்பிடலாம்.
இந்த திட்டத்தின் மூலம் பா.ஜ.க.வுக்கு அன்று ஒரு நாள் மட்டும் ரூ.15 கோடி நிதி கிடைக்கும் என செய்திகள் வெளியாகின. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும், அதுபோன்ற நிகழ்ச்சி எதையும் ஏற்பாடு செய்யவில்லை என்றும் பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜேவேட்கர், மறுப்பு தெரிவித்துள்ளார். 'மோடியுடன் டீ' என்ற நிகழ்ச்சி மட்டுமே தங்களுடையது என்றும், கட்டணத்துடன் 'மோடியுடன் டின்னர்' என்ற நிகழ்ச்சி எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire