lundi 17 mars 2014

இந்திய‌ பாராளுமன்றத் தேர்தல் நடத்தி முடிக்க செலவு ரூ.30000000000


பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிக்க ஆகும் செலவை ஊடக கல்வி மையம் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் தேர்தல் முடியும் வரை ஆகும் மொத்த செலவு ரூ 30, 000 கோடி என்று அறிவித்துள்ளது.
இந்திய வரலாற்றில் 9 கட்டங்களாக நடக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே மாதம் 12-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் செலவினங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற நோக்கில் செலவினங்கள் குறித்து ஊடக கல்வி மையம் ஒரு ஆய்வு நடத்தியது. அரசுக்கு ஆகும் செலவு, அரசியல் கட்சிகளின் செலவு, வேட்பாளர்கள் செய்கிற செலவு என பல கோணங்களில் நடத்திய ஆய்வில் 16-வது பாராளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு மத்திய அரசு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி முதல் ரூ.8 ஆயிரம் கோடி வரை செலவளிக்கும். இந்த தொகையில் ரூ.3 ஆயிரத்து 500 கோடியை தேர்தல் கமிஷன் செலவு செய்யும். மீதித் தொகையை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்திய ரெயில்வே, பிற அரசு துறைகள், மாநில அரசுகள் செலவு செய்யும். சமீபத்தில் வேட்பாளர்கள் செலவின வரம்பினை தேர்தல் கமிஷன் பரிந்துரைகளுக்கு ஏற்ப அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி குறைந்த பட்சம் ரூ.54 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம். என் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த செலவுகளையெல்லாம் கணக்கில் கொண்டால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ.30,000 கோடி செலவாகும். இந்திய கடன் தொகையை இதனுடன் இணைத்தால் அப்பா வேண்டாடா சாமி….

Aucun commentaire:

Enregistrer un commentaire