மனைவிக்கு துரோகம் செய்வதில் பிரான்ஸ், இத்தாலி நாட்டு ஆண்கள் முதலிடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஒப்பீனியன் என்ற நிறுவனம், மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்கள் குறித்த கருத்து கணிப்பை பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடத்தியது.
4500 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
அதன்படி, வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து மனைவிக்கு துரோகம் செய்வதில் முதலிடத்தில் இருப்பவர்கள் பிரான்ஸ், இத்தாலி ஆண்கள் தான் என்பது தெரியவந்துள்ளது.
இருநாடுகளிலும் 55 சதவீதம் பேர், மனைவிக்கு துரோகம் செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
பெண்களை காதலிப்பது, உண்மையாக நடந்து கொள்வதில் இங்கிலாந்து ஆண்கள் முதலிடத்தில் உள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது, எனினும் 42 சதவீதம் பேர் மனைவியை ஏமாற்றுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஜேர்மனியில் 46 சதவீதம் பேர் மனைவியை ஏமாற்றுகின்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire