உலகளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளின் தகவல்களை சேகரித்து வைத்துள்ளது சீனா.தென் சீனக் கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே மற்றும் தைவான் போன்ற நாடுகளுடன் சீனாவுக்கு கடல் எல்லை தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.மேலும் கிழக்கு சீனக் கடல் பகுதியில் சென்சாகு தீவுகள் தனக்கு தான் சொந்தம் என்று ஜப்பானுடன் சண்டை போட்டு வருகிறது.இந்நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளின் அமைப்பிடம் தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் படங்களை சீனா சேகரித்துள்ளது.இது தொடர்பாக அந்நாட்டின் பெருங்கடல் நிர்வாகத் துறை கூறுகையில், சீனா தனது எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 10,500 தீவுகளின் அமைப்பிடம் தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் படங்களை ரிமோட் சென்சிங் மூலம் திரட்டும் பணி முடிந்துள்ளது.இத்தீவுகளை கண்காணிப்பது, பாதுகாப்பது, மேம்படுத்துவது ஆகிய பணிகளை திறமுடன் மேற்கொள்ள இத்தகவல்கள் உதவும் என்று தெரிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire