mercredi 9 janvier 2013

கிளிநொச்சியிலிருந்து இராணுவத்தில் இணைந்து கொண்ட பெண்கள் இன்று இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்


கொழும்பிற்கு சுற்றுலா மேறகொண்டுள்ள கிளிநொச்சியிலிருந்து இராணுவத்தில் இணைந்து கொண்ட பெண்கள் இன்று இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். இவர்களுக்கு இராணுவத்தலைமையகத்தில் பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. இவர்கள் இன்னமும் சில நாட்கள் கொழும்பில் தங்கியிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதோடு பல்வேறு இடங்களையும் பார்வையிடவுள்ளனர்.







2 ஆண்டுகளில் 207 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் யாழ்ப்பாணத்தில்

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 207 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை புள்ளி விபரங்களூடாகத் தெரிய வருகின்றது என யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி. சிவரூபன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்பொழுது நாளுக்கு நாள் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. எமது விசாரணைக்குட்பட்ட முடிவுகளுக்கமைய 207 சிறுமிகள் கடந்த இரு ஆண்டுகளில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனைவிட அதிகமான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. சில சம்பவங்கள் அரசியல் செல்வாக்கினால் மூடி மறைக்கப்படுகின்றன. வேறு சில சம்பவங்களை பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரே சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மூடி மறைக்கின்றனர். இப்படியான பாலியல் துஷ்பிரயோகங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கு பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள சமூகம் புரள்வான சிந்தனையே காரணமாகும். பொது மக்களிடம் முறையான விழிப்புணர்வு தேவை. பெண்களுக்கெதிரான வன்முறைகள் இங்கு அதிகமாக நடைபெறுகின்றன. கடந்த வாரம் மண்டைதீவுப்பகுதியில் 4 வயதுச் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அதேபோல் மன நிலை பாதிக்கப்பட்ட யுவதியொருவரையும் காரைநகர் பகுதியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தபின் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டிலும் தொடக்கத்திலேயே இப்படியான பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் நடைபெறத் தொடங்கி விட்டன. எனவே  இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். பெற்றோர்களுக்கும் இவ்விடயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தச் செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொள்ளாவிடின் யாழில் இப்படியான வன்கொடுமைகள் இடம்பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

mardi 8 janvier 2013

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு: ஜன.19ல் குமரியில் கருணாநிதி ஆர்ப்பாட்டம்


திருவள்ளுவர் சிலையைப் பராமரிக்கக் கோரி கன்னியாகுமரியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார்.
கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலையைப் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக சார்பில் ஜனவரி 19-ம் தேதி குமரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகும் சிலையைப் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், திமுகவே செலவு செய்து, பராமரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

lundi 7 janvier 2013

பலாலி விமானநிலையத்தில் புதிய பயணிகள் நிலையம்


பயணிகளின் வசதிகருதி பலாலி விமானநிலையத்தில் புதிய பயணிகள் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பலாலி மற்றும் கொழும்புக்கிடையேயான விமானச் சேவைகளின் போது, பொதுமக்கள் தேவைகளுக்கேற்ப இப் புதிய  நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இப் புதிய வசதியானது  (ஜன-04) ஆரம்பித்துவைக்கப்பட்டது.யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி மூலம் முன்னொருபோதும் இல்லாத பொருளாதார மற்றும் சமூக எழுச்சியானது, யுத்தம் கடுமையாக இடம்பெற்ற வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது வடக்கின் சுற்றுலா அபிவிருத்தியை மேலும் விருத்தியடையச் செய்யும். இதைத்தவிர இலங்கையை உள்நாட்டு விமான நிலையங்களின் தரம் எதிர்காலத்தில் மேலும் விருத்தியடையும், இதன் மூலம் சுற்றுலா பிரயாணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நிகழ்வில்  பல அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

உறை பனியில் சிக்கிய 1000 கப்பல்கள்

சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் உறை பனியில் 1000 கப்பல்கள் சிக்கி தவிக்கின்றன. சீனாவில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. 28 ஆண்டுகளு க்குப் பின்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்கிறது. பொதுவாக அங்கு மைனஸ் 15.3 டிகிரி தட்பவெப்ப நிலை நிலவும். குளிர்காலத்தில் மைனஸ் 3.8 டிகிரியாக இருக்கும். இது கடந்த 42 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அங்கு மைனஸ் 7.4 டிகிரியாக தட்பவெப்ப நிலை குறைந்துவிட்டது. எனவே எங்கும் பனிக்கட்டி மயமாக காட்சி அளிக்கிறது. வடமேற்கு சீனாவில் போகல் கடல் உள்ளது. தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த கடல் நீர் பனிக்கட்டியாகி விட்டது. கடல் முழுவதும் சுமார் 27 ஆயிரம் சதுர மீற்றர் அளவுக்கு பனிக்கட்டியாக மாறிவிட்டது. எனவே அக்கடலில் பயணம் மேற்கொண்ட 1000 கப்பல்கள் பனிக்கட்டிக்குள் சிக்கி கிடக்கின்றன. தென்கிழக்கு சீனாவில் சிசுவான் மாகாணத்தில் மலை முழுவதும் பனி படர்ந்துள்ளதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 1000 பேர் சிக்கி தவிக்கின்றனர்.

அரசியல்வாதிகளை கொழும்பிலிருந்து முதலைக் கண்ணீர் வடிக்காது யாழ். வருமாறு அழைப்பு

கொழும்பிலிருந்துகொண்டு சகலவிதமான சொகுசுகளையும் அனுபவித்துக் கொண் டிருக்கும் அரசியல்வாதி நல்லையா குமரகுருபரன் யாழ்ப்பாணத்திற்கு வந்து உண்மை நிலையை அறிந்து செல்ல வேண்டும். வெறுமனே தமது பரபரப்பிற்காக ஊடகங்களில் அறிக்கையை விட்டு மக் கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனை யக் கூடாது என்று வடக்கு மக்கள் பாது காப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. குமரகுருபரன் அவர்கள் தெரிவித்தது போன்று யாழ்ப்பாணத்தில் எதுவும் நடைபெறவில்லை. அவை யாவும் அவரது கற்பனையே. உண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில சம்பவங்களுக்கு தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் சிலரே காரணமாக உள்ளனர். அண்மையில் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவத்திற்கு ஒரு அரசியல்வாதியே நேரடிக் காரணம். அவர் அன்று சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுக்கு உசுப்பேற்றி படையினருடன் மாணவரை மோத வைத்தார். இன்று அவர் கொழும்பில், மாணவர்கள் புனர்வாழ்வு முகாமில். இதுவே உண்மை.

மதத்தை வைத்து வயிறூ வழக்கும் போராட்டம்


அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றையும், அங்கு வாழும் முஸ்லிம் குடும்பங்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்திருக்கிறது. சுமார் 300 பேர் வரையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பள்ளிவாசம் கடந்த ஹஜ்ஜுப் பெருநாளின்போது எரிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அங்கு அமைந்திருக்கும் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஆகியவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் அங்கு வாழ்ந்து வருகின்ற சுமார் 42 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
அந்தப் பகுதி பௌத்த புனித பிரதேசத்துக்குள் வருவதாகக் கூறியே அங்கு வேறு மதங்களுக்கு இடம்கிடையாது என்று அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
வெளியூர்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களே இந்தப் போராட்டத்தில் பெரிதும் கலந்துகொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
பொலிஸார் தலையிட்டதை அடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பது தடுக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளைஇ அங்கு வந்த அந்த பிரதேசத்துக்கான துணை அரசாங்க அதிபர்இ 3 மாத காலத்துக்குள் அந்த முஸ்லிம் மக்களையும்இ பள்ளிவாசலையும் அங்கிருந்து அகற்றுவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் மக்கள் குறித்து அரசின் உயர் மட்டத்தினருடன் முஸ்லிம் சமூகத்தலைமைகள் பேசுவதற்காக இருந்த தருணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரான எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் புனிதப் பிரதேசம் என்று காரணம் கூறப்பட்டு அநுராதபுரத்தில் வேறு இடத்தில் இருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் வருத்தம் வெளியிட்டார்

தமிழ் ஆவண மாநாடு 2013

இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தல் பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய , எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், 2013ம் ஆண்டில் தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது ஆண்டு விழாவுடன் கூடியதாக ”தமிழ் ஆவண மாநாடு 2013” ஐயும் நடாத்தவிருக்கின்றது. 'ஈழத்துத் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம் மாநாடு எதிர்வரும் 2013 ஏப்ரல் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் நடைபெறும்.
பல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும்.

ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயப்பரப்புகள்

* வரலாறு, தொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும்
* ஒலி, ஓளி, புகைப்பட ஆவணங்கள்
* தனிமனித ஆளுமைகள், நிறுவனங்கள்
* சமூகத்தை ஆவணப்படுத்தல்
* மொழி இலக்கியப் பதிவுகள்
* அறிவுப்பகிர்வும் கல்வியும்
* ஆவணப்படுத்தலில் தொழினுட்பப் பயன்பாடுகள்
* எண்ணிம நூலகங்கள் [Digital Libraries], இணையத் தளங்கள், தரவுத் தளங்கள்
* நூல் விபரப்பட்டியலும் நூலகவியலும்
* கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும்

ஆய்வரங்குகளில் பங்குபெற்ற விரும்பும் ஆய்வாளர்கள், தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான முன்வரைவை 400 சொற்களுக்கு மேற்படாதவாறு அனுப்பி வைக்க வேண்டும். இம் முன்வரைவு 15-01-2013 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவை தமிழ் ஒருங்குறி [Unicode] எழுத்துருக்களில் தட்டச்சிடப்பட்டு மின்னஞ்சலில் noolahamfoundation@gmail.com அனுப்பப்படுவது விரும்பத்தக்கது. அதேவேளை தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், நியமிக்கப்பட்ட ஆய்வறிஞர்களைக் கொண்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட முன்வரைவுகள் பற்றிய விபரம் இரு வாரங்களுக்குள் அவற்றை அனுப்பியவர்களுக்கு அறிவிக்கப்படுவதோடு மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிப்பதற்கான அழைப்பும் பதிவுசெய்தல் பற்றிய விபரங்களும் அறிவிக்கபடும்.
தெரிவு செய்யப்பட்ட முன்வரைவுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமது இறுதி வடிவத்துடன் 01-03-2013 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளின் இறுதிவடிவம் 5000 சொற்களுக்கு மேற்படாததாக இருத்தல் வேண்டும்.
மாநாட்டு அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் நூலக நிறுவனம் மாநாட்டின் ஆரம்ப நாள் அன்று வெளியிட உள்ள மாநாட்டுச் சிறப்பு மலரில் இடம்பெறும். கட்டுரையாளர்கள் மற்றும் பதிவு செய்த பங்குபெறுவோர் அனைவருக்கும் மாநாடு நடைபெறும் நாட்களில் மாநாட்டு சிறப்பு மலர், வெளியீடுகள், கோப்புக்கள் போன்றவை வழங்கப்படும். முழுப்பெயர், மின்னஞ்சல், வதிவிட முகவரி ஆகிய விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை அனுப்புதலுக்கும் பிற தொடர்புகளுக்குமான முகவரி:

Noolaham Foundation
No 7, 57th Lane, (Colombo Tamil Sangam)
Colombo-06, Sri Lanka

பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்கு .ஹோட்டல்களிற்கு சீல் வைப்பு

தம்புள்ளை நகரப்பகுதியில் பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்குகளை இரவு நேரங்களில் சோட்டல்களுக்கு விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது 85 ரூபா பெறுமதியான கிழங்குகள் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பாவனைக்கு உதவாத கிழங்குகள் 35 ரூபாவிற்கு விற்பனையாகின்றன. இந்த கிழங்குகள் ஹோட்டல்களில் சிற்றுண்டிகள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட தம்புள்ளை நகரசபை அதிகாரிகள் 3 ஹோட்டல்களிற்கு சீல் வைத்துள்ளனர். மேலும் 10 ஹோட்டல்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்.

dimanche 6 janvier 2013

எதிரும் புதிருமானவர்கள் இதற்கு எப்படி ஒப்புக் கொண்டார்கள்?அரசியலில்

 ஈழ போராட்டமானது இலங்கையில் ஆட்சி செய்த அரசுகளின் இனவிரோத போக்கால் ஏற்பட்டு அதற்காக போராடிய இயக்கங்கள் இடையே ஏற்பட்ட முரன்பாடுகளால், குறிப்பாக புலிகளின் சகோதர படுகொலைகள் காரணமாக அழியத் தொடங்கி, இறுதியில் புலிகளின் பாசிச கொள்கை காரணமாக முற்று முழுதாக அழிந்து விட்டது. இந்த போராட்டமானது ஆரம்பத்தில் சாத்வீக போராட்டமாக தொடங்கியதற்கு தமிழ் அரசு கட்சியே காரணமாக இருந்தது.தமிழ் அரசு கட்சியை அந்த நாட்களில் பலர் இதற்காக ஆதரித்தனர். தமிழ் அரசு கட்சி இளைஞர்களை வழி நடத்தி தமிழ் ஈழத்தை பெற்று கொடுத்து விடுவார்கள் என பலர் எண்ணி இருந்தனர்.அதற்காக அது தமிழர் விடுதலை கூட்டணியாக உருமாற்றம் பெற்றது.
 தமிழர் விடுதலை கூட்டணி இதனை செய்வதற்கு அருகதையற்ற கட்சி என பின்னர் அதனை இனங்கண்டு தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்டனர்.
தமிழ் இளைஞர்கள் பல பெயர்களை கொண்ட இயக்கங்களாக போராடினர்.ஆயுத போராட்டம் மும்முராக நடைபெற்ற வேளையில் இயங்களிடையே ஒற்றுமை இருந்தால், தமிழ் ஈழம் இலகுவாக கிடைத்துவிடும் என பலர் சொல்லத் தொடங்கினர். அந்த ஒற்றுமை நடந்தும் நடக்காது போல் அமைந்தது.
இயக்கங்களிடையே ஒற்றுமை இல்லை இவர்கள் உருப்பட மாட்டார்கள் என பலர் கூறினர்.அதன் படியே எல்லாம் நடந்தது.
இறுதியாக எல்லா இயக்க தலைவர்களையும் அழிக்க காரணமாக இருந்த புலிகள் இயக்கமும், அதன் தலைமையும் அழிந்து போனது.
 புலிகள் இயக்கம் ஆயுத ரீதியாக பலமாக இருந்த போது அதற்கு அரசியல் ரீதியாக ஒரு பலம் தேவை என, தமிழ் கட்சிகளை ஒற்றுமை படுத்தி உருவாக்கியதே தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று இன்று சாட்சியாக சொல்ல பிரபாகரனும் இல்லை தமிழ்செல்வனும் இல்லை, தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அவர்கள்தான் இதனை உருவாக்கினார்கள் என ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரு வகையில் புலிகளால் மிகவும் பாதிக்கப்ப்பட்ட கட்சிகள்.அப்படி இருக்கையில் இந்த உடன்படிக்கை எப்படி ஏற்பட்டது. எதிரும் புதிருமானவர்கள் இதற்கு எப்படி ஒப்புக் கொண்டார்கள் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கவுண்டமணி பாணியில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டவர்.ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டவர்.ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா புலிகளால் கொல்லப்பட்டவர்.
இப்படியெல்லாம் இருந்தும் இது எப்படி சாத்தியமானது?
அது மட்டுமல்ல நாம் ஆரம்பத்தில் சொன்ன தமிழரசு கட்சி பிழையாக இளைஞர்களை வழி நடத்துகிறது என தூக்கி எறிந்த கட்சியை மீண்டும் இன்று தலைமைத்துவ கட்சியாக நாம் ஏற்றுக் கொண்டுள்ளேம்.இது எப்படி?
ஆக இந்த ஈழ போராட்டமானது மக்களுக்கும், அதற்காக மடிந்த, காணாமல் போன பல நாடுகளில், இலங்கையில் குறிப்பாக மலையகம்,வடக்கு-கிழக்கு ஆகிய பகுதிகளில்வாழும் இதனால் பாதிக்கபட்ட பலருக்கு அடுத்த நாள் என்ன செய்யப்போகிறோம், என்ற கேவலமான வாழ்கையையே கொடுத்துள்ளது என்பது வேதனையை கொடுக்கிறது. மலைய இளைஞர்களை இன்று யாரும் கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை. அப்பகுதி இளைஞர்கள் பலர் இதற்காக மடிந்துள்ளதுடன். இன்னும் தமிழக முகாம்களில் அவர்கள் வாழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கூட கொள்வதில்லை.
இந்த ஈழ போராட்டமும், அதன் தொடர்ச்சியும் இன்னும் பலருக்கு சௌகரியத்தை கொடுக்கிறது..அவர்கள் அரசியல் செய்து மேலும் மேலும் சௌகரியத்தை வளர்க்க இது வழி வகுத்து நிற்கிறது.
 நாம் பேசிய சோசலிச ஈழம் எங்கே? சமதர்ம ஈழம் எங்கே?

 நன்றி - ஸ்ரனிஸ் அவர்கள் 

samedi 5 janvier 2013

சவூதி அரசு பதவி விலக வேண்டும் .ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் உக்கிரமடைகின்றது.


மக்கா நகரிலும் புரைதா மத்திய நகரிலும் அல்சஊத் அரசுக்கெதிராக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர் என பிரஸ் ரிவி தெரிவிக்கின்றது. செவ்வாய்கிழமை, இவ்விரு நகரங்களிலும் இடம்பெற்ற இம்மாபெரும் ஆர்ப்பாடங்களில், சவூதி அரசு பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

டிசம்பர் 31ம் திகதி, பல்லாயிரக்கணக்கான சவூதி மக்கள், எண்ணெய் வளம் மிக்க மாகாணத்தில், இளம் பேரணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தனர்.

கதிப் மாகாணத்தில் கடந்த டிசம்பர் 27ல் இடம்பெற்ற பேரணியின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அஹ்மத் அல்மராரின் இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

பெப்ரவரி 2011 தொடக்கம், சவூதி அரேபியாவில் குறிப்பாக கிழக்கு மாகாணாத்தின் கிழக்கு மாகாணத்தின் கதிப் மற்றும் அவாமிய்யா நகரங்களில் தொடர்ந்து இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அரசுப் படைகளின் தாக்குதலில் பல பொதுமக்கள் காயங்களுக்குள்ளாகி உள்ளதுடன் மற்றும் பல தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நவம்பர் 2011ன் பின் வீரியத்துடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டம் புரியும் பொது மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தக்கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை சவூதி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கருத்தின் பிரகாரம், அரசுக்கெதிரான விமர்சனங்களையும் கருத்துகளையும் சவூதி அரசாங்கம் மிகக் கடுமையான முறையில் நசுக்கி வருகின்றது.

vendredi 4 janvier 2013

கல்வித் துறையினர் அதிர்ச்சியில்!!சிங்களம் கற்பிக்க இராணுவம் நியமனம்!


கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் கற்பிப்பதற்கு கல்வி வலயங்களுக்கு ஊடாக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்களத்தைத் திணிக்கும் இந்த முயற்சி வடபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளும் இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது எனத் தெரியாமல் திண்டாடுவதாகத் தெரிகின்றது.
2013 ஆம் ஆண்டு 1 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்கும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்திலுள்ள பாடசாலைக்கும் படையினர் சீருடைகளுடன் கற்பித்தலுக்காகச் சென்றிருக்கின்றனர்.
மேலும் இந்தப் பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிப்பதற்கு கல்வி வலயத்தின் ஊடாக தமக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், பாடசாலை அதிபர்களுக்கு படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் மாலினி வெஸ்ரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, தமது வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் மொழி சிங்களம் கற்பிப்பதற்கு படையினர் முன்னர் உத்தியோகப்பற்றற்ற அனுமதியினை  கோரியிருந்தனர். தற்போது உத்தியோக பூர்வமாக தமக்கு அனுமதி வழங்குமாறு கோரியிருக்கின்றனர். இந்நிலையில் விடயம் தொடர்பில் எமது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவுள்ளோம். அவர்களே இவ்விடயம் குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறினார்.
இதேவேளை விடயம் குறித்து தகவலறிவதற்காக கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டபோது, தான் கூட்டமொன்றுக்குச் சென்றுகொண்டிருப்பதாகக்கூறினார்.
எனினும் கிளிநொச்சி கல்வி வலயத்திற்குச் சென்ற இராணுவத்தினர் ஏனைய வலயங்களில் படையினர் சிங்களம் கற்பிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தைக் காண்பித்து தமக்கு அனுமதி வழங்குமாறு கேட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர். எனினும் இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

மஹிந்தயுத்த வெற்றியால் அல்லாமல் அசோகரைப் போல் பௌத்தனானால் நீண்டகாலம் ஆளலாம்


- வரதராஜப் பெருமாள்
“Mahinda-Rajaதம்பியுடையான் படைக்கஞ்சான்” என்பார்கள். இது ஜனாதிபதி மஹிந்த அவர்களுக்கும் பொருந்தும். அவர் தம்பிகளை மட்டுமல்ல, தனது அண்ணனையும் பொறுத்த அரசியல் அதிகார பீடத்தில் வைத்திருக்கிறார். அவர் தனது மகன்களையும் இறைமை அதிகாரங்கள் பல பெற்றவர்களாக செயற்பட வைத்திருக்கிறார். 2005ம் ஆண்டுக்கு முதல் மஹிந்தவைப் பார்த்தவர்கள் அவரை “பௌத்த போதனைகளின் பண்புகள் நிறைந்தவர்”, “சோசலிசத்தின் நண்பன்”, “தொழிலாளர்களின் தோழன்”, “ஏகாதிபத்தியம், சியோனிசம், பேரினஆதிக்கவாதம் போன்றவற்றின் எதிரி” என்றுதான் பார்த்தார்கள். இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அவரை “ஒரு நல்ல சிங்கள பௌத்தன் ஆனால் இனவாதியல்ல” என்றுதான் அடையாளம் கண்டார்கள். இந்தியா அவரையும் அவரது சகோதரர்களையும் “அவர்கள் ஒப்புக் கொள்வதை செய்கிறார்கள், தம்மால் முடியாததை நேரடியாக தமக்கு முடியாது” என்கிறார்கள் என அவர்களது நேர்மையில் நம்பிக்கை வைத்தது. 2005ம் ஆண்டு மஹிந்தாவை ஜனாதிபதி ஆக்குவதில் பெரும் பங்காற்றிய பிரபாகரனும் அவரை ஒரு யதார்த்தவாதி என்றார். எனினும் பிரபாகரன் மஹிந்த அவர்கள் ஒரு பலயீனமான ஜனாதிபதியாக இருப்பார் என்றே எதிர்பார்த்தார். ஆனால் மஹிந்த அவர்கள் ஜனாதிபதி ஜெயவர்த்ததனாவின்; கணித்து செயற்படும் ஆற்றல், ஜனாதிபதி பிரேமதாசாவின் நினைத்ததை நினைத்தவாறே முடிக்கும் வல்லமை, ஜனாதிபதி சந்திரிகாவின் மக்கள் கவர்ச்சி ஆகிய மூன்று ஆளுமைகளினதும் மொத்த உருவாகமாக விசுவரூபம் எடுத்து நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை.   
2005ல் அவர் ஆட்சிக்கு வந்த உடன் 13வது அரசியல் யாப்பு திருத்தத்துக்கும் அப்பாற் சென்று மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கி இனப்பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு காணப் போவதாக உறுதி அளித்தார். பிரபாகரன் ஏற்றால் தான் வன்னிக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணத் தயாராக உள்ளதாக அக்கறை காட்டினார். தனது ஆசை ஆசியாவின் அதிசயமாக இலங்கையை ஆக்குவதென அறிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷாவை ஓரளவாயினும் அறிந்தவர்கள் பலர் தமது கருத்துக்களிலும் எழுத்துக்களிலும் “மஹிந்த அவர்கள் தான் நினைத்ததை செயலுக்குக் கொண்டு வரும் வல்லமை கொண்டவர். அவருக்கு தான் எதைச் செய்ய வேண்டும் அதை எப்படிச் செய்ய வேண்டும் அதை எப்போது செய்ய வேண்டும் என விடயங்களைக் கணித்துச் செயற்படுவதில் மிகத் தெளிவானவர்” என்றே கூறினார்கள்
நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜபக்ஷாக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்களும், அவர்களின் கைகளில் தொடர்ந்து அதிகாரங்கள் எல்லையற்ற விதமாக குவிக்கப்பட்டு வரும் விதங்களும், நாட்டின் பாதுகாப்பில், சட்ட ஒழுங்கு நடைமுறைகளில், கல்வியில், பல்கலைக் கழகங்களின் நிர்வாகங்களில், திறைசேரி நிதிகளில், மாவட்ட சிவில் மற்றும் அபிவிருத்தி நிர்வாகங்களை இராணுவமயமாக்குவதில், தேசிய இயற்கை வளங்கள் மற்றும் நில வளங்களை சுயசொத்துக்களாக  மாற்றுவதில் என பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஏற்பட்டு வரும் ராஜபக்ஷாக்களின் எதேச்சாதிகார மாற்றங்கள் தொடர்பாக நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளிலும் நாட்டின் ஜனநாயக அரசியலிலும் அக்கறை கொண்டோர் பல தொடர் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
மஹிந்த அவர்கள் தேர்தல் மூலம் அடுத்தடுத்து மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியானவர். எனினும்; அவரும் அவரது வாரிசுகளும் பர்மாவில் நடந்து வரும் இராணுவ குண்டர் ஆட்சி, பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் நடத்திய ஆட்சி, இந்தோனேசியாவில் சுகார்ட்டா நடத்திய ஆட்சி, சிலியில் பினோட்சே நடத்திய ஆட்சி ஆகியவற்றை அரசியல் வழித்தடமாகக் கொண்டு செயற்பட முனைவதாகவே இன்று பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உள்நாட்டில் புலிப்பயம் காட்டும் அரசியல்,  சிங்கள பௌத்த தேசபக்தி பிரச்சாரம், இராணுவத் தலைமை அதிகாரிகளின் ஆதரவு, சிதறிக் கிடக்கும் சிறுபான்மைக் கட்சிகள் அவற்றின் சீரழிந்த தலைமைகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு சாம பேத தான தண்டம் என அனைத்தையும் பாவித்து மீண்டும் மீண்டும் தேர்தல்களில் வெல்லலாம், அதிகாரங்களைத் தங்கள் கைகளில் குவித்து வைத்துக் கொள்ளும் வகையான சட்டங்களை ஆக்கிக்கொள்ளலாம் என்ற நினைவுகளோடும் திட்டங்களோடுமே செயற்படுகிறார்கள் என்று பலரும் தெரிவிக்கும் கருத்துக்களில் தவறு இருப்பதாகக் கருத முடியவில்லை. 
நாட்டில் கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளாக தப்பிப் பிழைத்து வரும் தேர்தல் ஜனநாயகத்துக்கும், இன்னும் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் சட்டத்தின் ஆட்சி முறைக்கும், அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்ட வகையில் இன்னமும் நூலிழையில் தொங்கும் நாட்டு மக்களின் இறைமைக்கும் ராஜபக்ஷ சகோதரர்கள் இறுதிச்சடங்கு நடத்தி விடுவார்களோ என்ற பயம் இன்று நாட்டில் தலைதshirani1ூக்கியுள்ளது.
நாட்டின் நீதியரசருக்கே நீதி கிடைக்கவில்லை என்று ஏற்பட்டுள்ள நிலைமையானது நாட்டின் சட்டத்தின் ஆட்சியையும், நாட்டின் வலுவேறாக்க அரசமைப்பு முறையையும்; முடிவு கட்டுவதற்கான இறுதிக்கட்டமோ என்று கருதத் தூண்டியுள்ளது. “நாட்டின் சர்வ அதிகாரங்களினதும் இறைமை ராஜபக்ஷாக்களிடமே உள்ளது”, “ராஜபக்ஷாக்கள் எவ்வேளையிலும் தவற விடமாடார்கள் எனவே அவர்கள் நாட்டின் சட்டங்களுக்கும் நீதி மன்றங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள்”, ராஜபக்ஷாக்களும் அவர்களின் அரவணைப்புக்கு உட்பட்டவர்களும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் ஏனையவர்கள் எதைச் செய்தாலும் அரசின் பொலிஸ் படைகளும் உளவுப் படைகளும் அவர்களைத் துரத்தும்”, “நாட்டின் எல்லா அரச நிறுவனங்களும் அரச நிர்வாகங்களும் ராஜபக்ஷாக்களின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் மட்டுமே உரியன”, “ராஜபக்ஷாக்களை அண்டினால் சொர்க்க வாழ்வு சீண்டினால் அதளபாதாள அழிவு” என்ற நிலைமைகளை உருவாக்குவதை நோக்கியே நாட்டை அவர்கள் கொண்டு செல்கிறார்கள் என்ற கருத்தே இன்று நாட்டிலும் உலக மன்றங்களிலும் வலுவடைந்து வருகின்றது.
இலங்கை பல குறைபாடுகளின் மத்தியிலும் இன்னமும் ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஆட்சியாளர்களின் அதிகார இருப்புகளும்  ஆட்சி மாற்றங்களும் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மணிமுடி தாங்கிய மன்னருமல்ல. அவரது சகோதரர்களும் மகன்களும் வாரிசு முடியேந்திய இளவரசர்களுமல்ல.
வரலாற்றில் ஆனானப்பட்ட சக்கரவர்த்திகள் எல்லாம் மக்களின் புரட்சிகளி;ன் முன்னால் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள். தமது அதிகாரத்துக்கு எதிரானவர்களென தாம் சந்தேகப்பட்டவர்களுக்கு மரணதண்டனை, தமக்கு அடங்காதவர்களுக்கு சிறைத்தண்டனை என தலை எது கால் எதுவென புரியாமல் அதிகார வெறி ஆட்டம் போட்ட சர்வாதிகாரிகள் எல்லாம் அடக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளின் முன்னால் ஓடி ஒழிந்து முடிந்த போன கதைகள் ஏராளம் வரலாற்றில் உண்டு.
அதிகாரக் கனவுலகில் இருந்து பின்னர் காணாமற் போன பலரது கதைகள் உலகின் வேறு நாடுகளில் மட்டுமல்ல நவீன இலங்கை வரலாற்றிலும் உண்டு. டீ.எஸ் சேனநாயக்காவுக்குப் பின்னால் டட்லி சேனநாயக்கா அதற்குப்பின்னால் தான்தான் அதிகார வாரிசு என முனைந்த ருக்மன் சேனநாயக்கா இன்று அதே ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு மூலையில் தேடிப்பார்க்கப்பட வேண்டியவராக இருக்கிறார்.
ஜே.ஆரின் ஆட்சியின் போது அவரது ஒரே மகனான ரவி ஜெயவர்த்தனா விசேட அதிரடி பொலிஸ் படையை உருவாக்கி அதனை தனது கைக்குள் வைத்துக் கொண்டு எத்தனை ஆட்டம் போட்டார். இன்றைக்கு அவர் எங்கே என்று எத்தனை பேருக்குத் தெரியும்.
எப்படி புலிகள் 2005ல் மஹிந்தவை ஜனாதிபதியாவதற்கு பிரதானமான துணையாக இருந்தார்களோ அவ்வாறே பிரேமதாசா அவர்கள் 1998ம் ஆண்டு ஜனாதிபதி ஆவதற்கு ஜே.வி.பி காரர்கள் துணையாக நின்றார்கள். பின்னர் அதே பிரேமதாசாவின் ஆட்சியால் ஜே.வி.பி.காரர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். அதில் வந்த அகங்காரம் பிரேமதாசாவை கண்மண் தெரியாமல் செயற்பட வைத்தது. பிரேமதாசா புலிகளால் படுகொலை செய்யப்படாமல் உயிரோடிருந்து 2004ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் கூட அவர் நிச்சயமாக மக்களால் தோற்கடிக்கப்பட்டிருப்பார் என்பது பிரேமதாசா ஆட்சியில் இருந்த போதே உறுதியாகிவிட்டது.
எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்காவுக்குப் பிறகு அவரது மனைவி சிறிமா பண்டாரநாயக்கா அதன் பின்னர் யூ.என்.பி.யின் அதிகார வெறி பிடித்த பதினேழு ஆண்டுகால ஆட்சிக்குப் பாடம் புகட்ட இலங்கை மக்கள் சந்திரிகா பண்டாரநாயக்காவை ஆட்சிபீடம் ஏற்றினார்கள்;. ஜே ஆர் மற்றும் பிரேமதாசாவின் ஆட்சியில் வெறுப்படைந்த மக்கள் சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் அடுத்தடுத்து பதினேழு தடவைகள் பல்வேறுபட்ட தேர்தல்களின் போதும் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்தார்கள்.
தொடர்ந்து கொண்டிருந்த போரின் காரணமாக சலிப்படைந்திருந்த மக்கள் ரணில் விக்கிரமசிங்காவினால் சமாதானம் கிடைக்கும் என நம்பி ஆட்சியை மாற்றி ஒப்படைத்தார்கள். Ranil3ஆனால் ரணில் அவர்களோ பிரதமர் பதவியிலிருந்து ஏறி தானும் ஜனாதிபதிப் பதவியில் எப்படியாவது உட்கார்ந்து தானும் ஒரு முறை சர்வ அதிகாரங்களையும் வைத்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்ற  ஆசையில் புலிகளின் கொலைப் பற்களுக்கு தமிழர்களையும் அவற்றை கீறிக் கிழிக்கும் நகங்களோடு  துள்ளித்திரிய முழு நாட்டையும் திறந்து விட்டார். அதன் விளைவு அவரை இனி எப்போதுமே எந்தத் தேர்தலிலும் வெல்ல முடியாதவராக ஆக்கிவிட்டது.
மஹிந்த ராஜபக்ஷாதான் 2005ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்ற நிலைமை உறுதிப்பட்டிருந்த வேளையிலும் தனது சகோதரிக்குப் பிறகு தான்தான் நாட்டை கட்டி ஆள வேண்டும் என்ற நப்பாசையில் அநுரா பண்ரநாயக்கா சிறி லங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்காக்கள் தான் தலைமை தாங்க முடியும், எனவே அடுத்த ஜனாதிபதி தான்தான் என்று கங்கணம் கட்டி நின்றார்;. இன்றைக்கு அநுரா பண்டாரநாயக்காவை  இலங்கையில் நினைவு வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்?   
புலிகளின் வரலாற்iயும் அவர்களின் எக்காள உறுமல்களையும், ஹிட்லரின் கோயபல்ஸ்களையும் மிஞ்சியவர்களாக அவர்கள் செய்த மாயப்பிரச்சாரங்களையும் மீட்டுப்பாருங்கள். “புலிகள் கொலை செய்தால் அதில் ஒரு  நியாயம் இருக்கும்”, “புலிகள் மக்களிடம் பணம் பறித்தால் அதில் ஒரு தர்மம் இருக்கும்”, புலிகள் சகோதர இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் அழித்தால் அதில் சுதந்திர தாகம் இருக்கும்” என உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையெல்லாம் பேச வைத்த வல்லவர்களல்லவா அவர்கள். …. இன்று எங்கே அவர்கள்?.
சமூகத்தின் பாவங்களை சிலுவையாகச் சுமந்த யேசுநாதரின் சீடர்கள் மட்டும்தான் தாம் விசுவசித்தவரை மறுதலித்தார்கள் என்றில்லை. கொடூர சர்வாதிகளுக்கு தூக்குத்தூக்கி ஏந்தி சேவகம் புரிந்து சுகம் பெற்றவர்களும் அதையேதான் வரலாற்றில் செய்தார்கள். புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பதால் தமக்கென ஒரு சமூக அந்தஸ்த்து, பதவிகள், பணம், ஊர் நாட்டாமை என்றிருந்தவர்களெல்லாம் இன்று “புலிகளின் மாவீரர்களுக்காக சுடரேற்றவில்லை கார்த்திகை விளக்கைத்தான் ஏற்றினோம்” என தங்களது செயலுக்கான உண்மையான நோக்கங்களை வெளியில் சொல்லத் திராணியில்லாமல் தாம் வணங்கிய பிரபாகரனையே மறுதலித்து நிற்கிறார்கள்.
வரலாற்றிலிருந்து மஹிந்தவும் அவரது சகோதரர்களும் கற்றுக் கொள்ள வேண்டும். மஹிந்தவின் அதிகாரம், அரசியற் செல்வாக்கு என்பன எப்போதும் அசைக்கப்பட முடியாதவை போல இன்றைக்கு தோற்றமளிக்கலாம். ஆனால் அரசியல் வரலாறு அப்படிப்பட்டதல்ல. ராஜபக்ஷாக்களின் கோட்டையில் ஒரு பொறுத்த இடத்தில் ஓட்டை விழுந்தால் போதும் அந்தக் கோட்டையை இறுகக்  கட்டியிருப்பதாகக் கருதப்படும் கற்களெல்லாம் ஒவ்வொன்றாக உதிர்ந்து கோட்டை மண்ணோடு மண்ணாகி விடும். பதவி. உயரும் போது துணிவு மட்டுமல்ல பணிவும் சேர வேண்டும். செயலாற்றல் உள்ள ராஜபக்ஷாக்களிடம் நல்லவற்றைப் பாதுகாக்கும் மற்றும் உய்ர்ந்தவற்றை மேலும் உயர்த்திடும் சிந்தனையும் சேர வேண்டும்;.
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக தம்பிமாரை மட்டும் வைத்துக் கொண்டு உற்றார் உறவினர்கள், தோள் கொடுத்த நண்பர்கள், துணைக்கரம் கொடுத்த அயலவர்கள் எல்லோரையும் இனித்தேவையில்லை – ஆறு கடந்தாயிற்று இனி ஏன் அண்ணன் தம்பியென - என எள்ளிநகையாடி பகைத்துக் கொள்வது தன்தலையிலேயே ஒருவன் கொள்ளி வைத்து அழிவைத் தேடிக் கொள்ளும் வேலையாகும்.
அதிகார வெறி நல்லோர் பெரியோர்களைப் பகைக்கும், சர்வாதிகார வெறி சந்தேகங்களை அதிகரித்து உறவுகளைக் கெடுத்து நண்பர்களைப் பகைக்கும், கெட்ட நோக்கங்கள் கொண்ட கெட்டித்தனங்கள் அயலவர்களை அந்நியப்படுத்தும். ஒரு நாட்டிற்கு நல்லாட்சி தருவதற்கு தன் சொந்த இனத்திற்கே பிரயோசனம் தராத புலிகளின் கெட்டித் தனங்களைக் கற்று பிரயோகிப்பது பொருத்தமானதல்ல. நல்ல ஆட்சியில்லையென்றால் பொருளாதார அபிவிருத்தியில்லை. அதிகாரம் குவிந்தால் அத்துடன் யாரும் கேள்வி எழுப்ப முடியாத நிலை இருந்தால் இலகுவாக அபிவிருத்திகளை அடைந்துவிட முடியும் என்பது தேசபக்தியின் வெளிப்பாடல்ல மாறாக எல்லாமே நான்தான், எல்லாமே என்னாற்தான், எல்லாமே எனக்குத்தான் எனக் கொள்ளும் பாசிசத்தை - நாசிசத்தை தழுவத்துடிக்கும் சிந்தனைப் பிசகே அது.
நாட்டின் வரிப்பணத்தில் பெருந்தொகை அரச படைகளைப் பராமரிப்பதற்கும்; பெற்ற கடன்களுக்கு வட்டி செலுத்துவதிலும் செலவழிப்பதிலேயே முடிவடைந்து விடுகின்றது. நடந்துsrilanka roadகொண்டிருக்கும் விடயங்களுக்கான மீண்டெழும் செலவுகளைச் சமாளிக்க ஒரு சிறு பகுதிக்குக் கூட மீதி வருமானம் போதியதாக இல்லை. பெருவீதிகளை அமைப்பதுவும், பள்ளிக்கூடங்களை சீரமைப்பதுவும், வைத்தியசாலைகளை விருத்தி செய்வதுவும் வெளிநாட்டு உதவிகளிலேயே ஓடுகின்றது. எங்கேயாவது ஒரு வீடு அல்லது ஒரு வீதி அல்லது ஒரு பாலம் அல்லது ஒரு துறைமுகம் அல்லது ஒரு மின்சார உற்பத்தி நிலையம் என எந்த ஒன்று கட்டப்பட்டாலும்; அது ஏதோவொரு நாட்டிடமிருந்து பெற்ற கடன் உதவியில் கட்டியதாகத்தான இருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை மக்கள் அனைவரும் பட்டினி கிடந்தாலும் இதுவரை பெற்றுக் குவித்துள்ள கடன்களை அடைத்து முடிக்க முடியாது என்ற அளவுக்கு இலங்கை கடனாளியாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் இலங்கை ஆசியாவின் அதிசமாக ஆகிக்கொண்டிக்கின்றது என்று சொல்வதை யாராவது நம்புவார்களா?
நாட்டின் அபிவிருத்தி மக்களின் உழைப்பிலும் அறிவார்ந்தோர்களின் மனமார்ந்த ஒத்துழைப்பிலும், சீரான அரசியல் ஓட்டத்திலும் தங்கியிருக்கின்றது@ அதற்கு நாட்டில் நீதிநியாயம் நிலவ வேண்டும்@ சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும்@ மக்களின் அடிப்படை உரிமைகள் பேணப்பட வேண்டும்@ நாட்டின் அரசியல் யாப்பு ஜனாதிபதியாலும், நாடாளுமன்றத்தாலும், அரச உயர் அதிகாரிகளாலும் கௌரவிக்கப்பட வேண்டும்@ மக்கள் அச்சத்தால் அல்ல மாறாக அன்பால் ஆளப்பட வேண்டும் என்பனவற்றை மஹிந்தவும் அவரது சகோதரர்களும் அவரது ஏனைய வாரிசுகளும் புரிந்து கொண்டால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.
2010ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் கடைசி நாட்களில் தமது எதிர்காலம் பற்றி கிடுநடுங்கிப் போயிருந்ததை ராஜபக்ஷ சகோதரர்கள் மறந்து விடக் கூடாது. அப்போது புலிகளுக்கான யுத்த வெற்றியைப் பெற்று ஆறு மாதங்கள் மட்டுமேதான் கடந்திருந்த காலம். ஆனால் கடந்த மூன்று வருடங்களில் ராஜபக்ஷ சகோதரர்கள் தமக்கெதிரான தேசியப் பிரச்சினைகளையும் அவை தொடர்பான மக்கள் போராட்டங்களையும் தொடர்ந்து அதிகரிக்க வைத்திருக்கிறார்கள் - தமக்கெதிரான அரசியல் எதிரிகளை எண.ணிக்கை ரீதியில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலக நாடுகள் ராஜபக்ஷாவின் ஆட்சியைக் கவிழ்க்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்புது ராஜபக்ஷாக்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும். அரசாங்கத்தை ஆதரித்து நிற்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் எந்த நேரத்திலும் கழன்று கொண்டு போகக் கூடியவை என்பதையும் அவர்கள் அறிவார்கள். இந்தியா ராஜபக்ஷாக்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறியதற்காக மிகுந்த அதிருப்தி கொண்டிருக்கிறது என்பதை இன்னேரம் புரிந்திருப்பார்கள். சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இப்போதைக்கு எதுவும் செயய முடியாதவர்களாக இருப்பினும் உள்ளுர ராஜபக்ஷாக்கள் மீது ஆத்திரம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் மேலும் அவர்கள் எந்த நேரமும் காலைவாரி விடுவார்கள் என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.
பொருளாதார நெருக்கடிகளாலும், ராஜபக்ஷாக்களின் அகங்கார எக்காளங்கள் கொண்ட ஆட்சி நிர்வாகங்களாலும் யுத்தவெற்றியால் பெருகியிருந்த ஆதரவு படிப்படியாக விலகி குறைந்து வருகின்றது என்பது வெளிப்படை. ரணில் விக்கிரமசிங்காவின் எதிர்க்கட்சி அரசியற் தலைமையின்; பலயீனம்தான் இன்றைக்கு ராஜபக்ஷாக்களின் பிரதானமான அரசியற் பலமாக உள்ளது. இராணுவமும் பொலிஸ_ம் தங்களது அரசியற் செல்வாக்கை மக்கள் மத்தியில் காப்பாற்றி வைத்திருக்கும் மேலும் தேர்தல்களின் போதெல்லாம் தம்மை வெற்றி பெற தொடர்ந்து ஆதரவாகச் செயற்படும் என ராஜபக்ஷாக்கள் நம்பினால் அது அவர்களின் தவறாகவே முடியும். சிங்கள சமூகத்தில் - சிங்களக் கிராமங்களில் மக்களின்  மத்தியில் செல்வாக்குப் பெறும் எண்ணங்கள் - கருத்துக்களின் படியே இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும்  செயற்படுவார்கள். அவர்களை அரசியல் இயந்திரங்கள் என வரட்சியாகப் பார்க்க முடியாது. எனவே அவற்றை தமது ஒரு குடும்ப தேர்தல் இயந்திரமாக ராஜபக்ஷாக்கள் கருதினால் இன்னும் சில ஆண்டுகளில் அது ஒரு மகா தவறு என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.
அரசியலில் மக்கள் திசை திரும்பி ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக இலட்சக்கணக்கில் வீதிகளில் இறங்குவதற்கு பல வருடங்கள் ஆகுமென்றில்லை. சிலவேளைகளில் அது சில நாட்களிலும் நடக்கும். அந்தப் பொறி தட்;டுப்பட்டால் அதற்கு எண்ணெயூற்றி கொழுந்து விட்டு எரிய வைக்க பல சக்திகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் காத்துக் கொண்டிருக்கின்றன. ராஜபக்ஷாக்களை வைத்து தனது காரியசித்திகளை ஆற்றும் சீனா அவர்களைக் காப்பாற்ற சிரமம் எடுக்காது. யப்பான் ஒரு வியாபாரி. பாகிஸ்தானுக்கு அதனது தலையில் ஆயிரம் நெருக்கடிகள். ரஷ்யாவும் ஈரானும் இந்தியாவைக் கடந்து வரமாட்டா. ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் அத்துடன் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் ஐ.நா சபையில் இலங்கையைக் காப்பாற்றலாம் ஆனாலும் ராஜபக்ஷாக்களின் அரசு எந்த வேளையும் ஜெனீவா மனித உரிமைகள் சபையில் நெருப்பின் மீது நடக்கும் சோதனைதான்.
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில் 18வது அரசியல் யாப்பு திருத்தத்தால்  மூன்றாவது மற்றும் நாலாவது தடவையும் தானே ஜனாதிபதி ஆவதற்கான கதவைத் திறந்து விட்டார் ராஜபக்ஷா. ஆனால் இன்னமும் மூன்றாண்டுகளுக்கு மேலுள்ள 2016ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலானது ராஜபக்ஷாக்களுக்கு சுலபமாகக் கடக்கும் ஒரு கட்டமாக இருக்கப்போவதில்லை என்பது தெரிகின்றது. ராஜபக்ஷாக்கள் தம்மைத் தாமே நிதானித்து தமக்குள்ளேயாயினும் சுயவிமர்சனம் செய்து தமது தவறுகளிலிருந்து தம்மை மீள விலக்கி சீரமைத்துக் கொள்வார்களா? அல்லது அவர்கள் திரும்பவே முடியாத ஒரு பிழையான பாதையில் பல தூரம் ஏற்கனவே போய்விட்டார்களா? அல்லது அவர்கள் செல்லும் பாதையை அவர்களின்; பிரச்சாரங்களை நம்பியபடி அமோக அளவில் சிங்கள மக்கள் எல்லாவற்றையும் கடந்து தொடர்ந்து ஆதரித்து நிற்பாhகளா? இவற்றுக்கான விடைகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தெளிவாகுவது நிச்சயம்;;

திடுக்கிடும் தகவல்கள் பஸ்சில் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களிடம்  17 வயது மைனர் என்ற போர்வையில் தப்ப நினைக்கிறான். 


 
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணை விபரங்கள் தெரியவந்துள்ளன. இதன்மூலம் 6 குற்றவாளிகளில் பெயர் வெளியிடப்படாத 17 வயது மைனர் வாலிபர்தான் அதிகப்பட்ச குற்றம் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
 
மாணவியும் அவரது நண்பரும் கடந்த 16-ந்தேதி இரவு பஸ்சில் ஏறியதும் அந்த மைனர் வாலிபர் முதலில் கிண்டல் செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவியின் நண்பருக்கும் 6 பேர் கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
அப்போது டிரைவர் ராம்சிங் கம்பியை எடுத்து மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதை தடுத்த மாணவியையும் இரக்கமின்றி தாக்கியுள்ளார். இதையடுத்து மாணவி அந்த வாலிபர்களை கடுமையாக திட்டியுள்ளார்.
 
ராம்சிங்குக்கு இதை கேட்டதும் ஆத்திரம் அதிகரித்துள்ளது. உனக்கு பாடம் கற்பிக்கிறேன் பார் என்று மாணவியை பலாத்காரம் செய்துள்ளான்அவனது வெறிச்செயல் அடங்கியதும் 17 வயது மைனர் வாலிபர் மாணவியை கற்பழித்துள்ளான். அதற்கு பிறகு அக்ஷய் என்பவன் மாணவியை வேட்டையாடி உள்ளான். ஓடும் பஸ்சில் சுமார் 30 நிமிடம் அந்த மிருகங்களிடம் சிக்கி மாணவி போராடினார். 3 வாலிபர்களும் ஒன்று சேர்ந்து செய்த கொடூரத்தின் உச்சமாக மாணவி மயங்கி விழுந்தார்.
 
மாணவி மயங்கி விழுந்த பிறகு ராம்சிங்கும் அக்ஷயும் நகர்ந்துவிட்டனர். ஆனால் அந்த 17 வயது வாலிபர் மட்டும் மீண்டும் கொடூரத்தில் ஈடுபட்டான். மயங்கி கிடந்த மாணவியை பலாத்காரம் செய்தான். அவனால்தான் மாணவி ஆழ்ந்த மயக்க நிலைக்கு செல்ல நேரிட்டது. 

இதுமட்டுமின்றி மாணவியை வயிற்றில் தாக்கியதும் இவன்தான். மாணவி சிறுகுடல் காயம் அடைந்ததற்கு இவனே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
 
இவ்வளவு அட்டூழியத்தையும் செய்துவிட்டு அவன் மைனர் என்ற போர்வையில் தப்ப நினைக்கிறான். அவனை தப்ப விடக்கூடாது என்பதற்காகத்தான் அவன் உண்மையான வயதை கண்டுபிடிக்க போலீசார் அவனுக்கு எலும்பு சோதனை நடத்தி உள்ளனர்.
 
அந்த சோதனை அறிக்கை இன்று வர உள்ளது. அதன் பிறகே சிறுவன் பற்றி டெல்லி போலீசார் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்

50,000 இந்திய வம்சாவளியினர் "மலேசியாவில் பள்ளிகளில் சேர முடியாத நிலை


மலேசியாவில் இந்த ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் சுமார் 50,000 இந்திய வம்சாவளியினர் பள்ளிகளில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது.
அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தாலேயே அவர்களால் பாடசாலைகளில் அனுமதி பெற முடியவில்லை என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.
பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கோரி போராடுபவர்கள்

மலேசியாவில் சுமார் மூன்று லட்சம் இந்திய வம்சாவளியினர் நாடற்ற நிலையில் வசிப்பதாகவும், அவர்களை அரசு திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கிறது எனவும் தேசிய மக்கள் நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என் சுரேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார்.
இம்மக்கள் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து பிறப்புச் சான்றிதழும் அடையாள அட்டையும் மறுக்கப்படுகிறது என்றும், இது சட்டத்துக்கு விரோதமானது எனவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.பல ஆண்டுகளாக, இந்திய வம்சாவளி மக்களில் நாடற்ற நிலையில் இருக்கும் பெருபான்மையானவர்கள் இந்துக்கள் என்று கூறும் சுரேந்திரன் அதன் காரணமாகவே அரசு திட்டமிட்ட வகையில் மதரீதியான புறக்கணிப்பை செய்கிறது எனவும் சுரேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார்.

எனினும் இந்தோனீசியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு உடனடியாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் அரச சலுகைகளை பெறுகிறார்கள் எனவும், அவர்களின் வாக்குகளை குறி வைத்தே அரசு இப்படி செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்கட்சிகளால் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியும், வீதிகளில் இறங்கியும் போராட முடியுமே தவிர வேறு ஏதும் செய்ய முடியாத நிலைமையே மலேசியாவில் நிலவுகிறது எனவும் அவர் கூறுகிறார்.
தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக இந்திய வம்சாவளியினர் குற்றச்சாட்டு
ஆனால் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அரசுடன் இணைந்து செயல்பட எதிர்கட்சிகள் தயாராக இருக்கும் போது, மூன்று லட்சம் மக்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை கூட அரசு ஏற்க மறுக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.
இந்த விஷயம் தொடர்பில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு இம்மாதம் ஒன்பதாம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும்,அந்தத் தீர்ப்பு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும் எனவும் சுரேந்திரன் நம்பிக்கை வெளியிட்டார்.
விரைவில் மலேசிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடாற்ற நிலையில் உள்ள மக்களின் நிலைமையானது தேர்தல் சமயத்தில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும் சூழல் உள்ளது என்றும் பரவலாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

jeudi 3 janvier 2013

பாவனைக்கு உதவாத கருவாடு ஐந்து வருடங்களுக்கு கிழங்கு' முதலாளிகளுக்கு சிறை

பாவனைக்கு உதவாத கருவாடு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை வைத்திருந்த முதலாளிகளுக்கு மாளிகாகந்த நீதவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

அத்துடன் அந்த இரு விற்பனை நிறுவனங்களுக்கும் ஒரு இலட்சம் மற்றும் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்கு 8500 கிலோவும் கருவாடு 2000 கிலோவும் வர்த்தக சந்தைக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்தவேளையில் நுகர்வோர் அதிகாரசவை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டது.

புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள இரண்டு விற்பனை நிறுவனங்களிடமிருந்தே பாவனைக்கு உதவாத குறித்த பொருட்கள் அண்மையில் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

யுத்த குற்றவாளி அடேல் பாலசிங்கம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடேல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் எனவும், பெண் புலிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடேல் பாலசிங்கம் 10வயது சிறுமிகளுக்கு பயிற்சிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவர் போராளிகளின் கழுத்தில் அடேல் பால சிங்கம் சயனைட் வில்லைகளை மாட்டிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிக்கினால் சயனைட் வில்லைகளை அருந்தி உயிரை மாய்த்துக் கொள்ளுமாறும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  மேல்நாட்டு பெண் மற்றும் தாதியயாருவர் இவ்வாறு கொடூரமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளம் சிறுமிகள் உயிரிழக்க காரணமான யுத்தப் பயிற்சிகளை வழங்கிய அடேல் பாலசிங்கம் பிரித்தானியாவின் சர்ரே பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். மனிதாபிமானத்திற்கு எதிரான யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட பெண் ஒருவர் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றார்.  அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக பிரித்தானியா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள பிரித்தானியாவில் புலிகளின் சர்வதேச தலைமையச் செயலகம் அமைந்துள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் எவ்வாறு பகிரங்க ஆர்ப்பாட்டம் நடத்த முடியும்? அரசியல் தலைவர்களுக்கு எதிராக எவ்வாறு போராட்டம் நடத்த முடி யும் என பாதுகாப்பு அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளது.
பிரித்தானியாவில் தமிமீழ விடுதலைப் புலிகள் நிதி திரட்டுவ தாகவும் குற்றம் சுமத்தப்ப ட்டுள்ளது. 2002-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போது அடேல் பால சிங்கம் தமிழீழ விடு தலைப் புலிகளை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் என பாதுகாப்பு அமை ச்சு சுட்டிக்காட்டியுள் ளது.

மின்சார தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாம்!யாழ்ப்பாணத்தில்


சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தின் ஊடாக நூற்றுக்கு நூறு வீதம் மின்சாரத்தை விநியோகிக்க கூடியதாகவுள்ளதாகவும் 3 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் 6 மாத காலத்தினுள் நாட்டில்  நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் நிலையம் இது என மின்சார சபை தெரிவித்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பில் 24 மெகாவோட் மின்சாரத்தை இணைக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தின் ஊடாக யாழ் மாவட்டத்திற்கான மின்சாரத்தை  விநியோகத்தை பூர்த்தி செய்ய முடிந்துள்ளதாகவும் சபை தெரிவிக்கின்றது. 

யாழ் குடாநாட்டில் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் மின்பாவனையாளர்கள் உள்ளனர். கடந்த வருடம் யாழ் மாவட்டத்திற்கு தேவையான மின்சாரத்தில் 90 வீதமான மிச்சாரத்தை மட்டுமே மின்சார சபையினால் விநியோகிக்க முடிந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இமயமலை பகுதியில் பெரும் பூகம்பம் ஏற்படும் ஆபத்து…!!! விஞ்ஞானிகள்



இந்தியாவின் இமயமலை பகுதியில் பாரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுவொன்று எச்சரித்துள்ளது. அந்நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள இமயமலையில் பூகம்ப ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக கருதப்படுகின்றது. இந்த பகுதியில் கடந்த 1897, 1905, 1934, 1950 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அதன்போது 7.8 முதல் 8.9 ரிச்டர் அளவு வரை பூகம்பம் ஏற்பட்டது. அதன்பிறகும் அந்த பகுதியில் பலமுறை பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆனால் வருங்காலத்தில் இமயமலை பகுதியில் கடுமையான அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என போல் டப்போனியர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த குழுவில் நேபாளம், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் இடம் பெற்று இருந்தனர்.
இந்தியாவில் இமயமலை பகுதியில் 1255 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் இரு மிகப்பெரிய பூமி அதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் போது இமயமலையின் தென் பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள நிலத்தட்டில் 150 கிலோ மீட்டர் நீளத்துக்கும் மேலாக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியின் நிலப்பரப்பிலும் சிறிது மாற்றங்கள் நிகழ்ந்தன.
வருங்காலத்தில் இமயமலை பகுதியில் பெரிய அளவில் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பூகம்பங்கள் 8 முதல் 8.5 ரிச்டர் அளவு வரை இருக்கக்கூடும்.

எல்லாளன் படை” விடுத்த இணைய அறிக்கையைக் கண்டிக்கும் புலிகளின் மற்றொரு அணியான “வெளிநாட்டு நெடியவன்”அணி.



விடுதலை புலிகள் நெடியவன் அணியின் 5 தளபதிகளுக்கும், அரசியல் ஆலோசகருக்கும், விடுதலைப்புலிகளின் மற்றொரு பிரிவான “எல்லாளன் படை” ‘இறுதி எச்சரிக்கை’ விடுத்திருப்பது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள விடுதலைபுலிகள் நெடியவன் அணியின் (தமிழர் மனித உரிமைகள் பேரவை) கிளை அமைப்பு, “தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு, எல்லாளன் படையின் பின்னணியில் உள்ள தளபதி உயிருடன் உள்ள விஷயம் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஐரோப்பாவில் இருந்து இயங்கும் விடுதலை புலிகள் நெடியவன் அணியின் கிளை அமைப்புகளில் ஒன்றான தமிழர் மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில், “சமீபத்தில் எல்லாளன் படை, விடுதலைப் புலிகளின் 5 தளபதிகளுக்கும், அரசியல் ஆலோசகருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த எல்லாளன் படையின் பின்னணியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த ஒரு தளபதி இருப்பதாக தெரிய வருகிறது.
அந்த தளபதி, இறுதி யுத்தத்தின் போது எப்படி தப்பி வெளியேறினார் என்று சொல்ல முடியுமா? அவர் உயிருடன் உள்ள விஷயம் தேசியத் தலைவருக்கு தெரியுமா? தேசியத் தலைவருக்கு தெரியாமல், அவரது அனுமதி பெறாமல் இந்த தளபதி தனது இஷ்டத்துக்கு எச்சரிக்கை விடுவது ஏன்? அந்த முன்னாள் தளபதி துரோகிகள் பட்டியலில் இணைந்து விட்டாரா?
இந்த இறுதி எச்சரிக்கை அறிவிப்பு தேசியத் தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. அதன் விளைவுகள் ஓரிரு நாட்களில் தெரியவரும்” என்று கூறப்பட்டுள்ளது.!!!
இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? இவர்கள் துரோகி பட்டியலில் இணைக்க முயலும் அந்த ‘முன்னாள்’ தளபதி யார்?…

பாதாள உலக குழுவினரை இல்லாதொழிக்கும் நடவடிக்கை தொடரும்

கொழும்பில் பாதாள உலகக் குழு மற்றும் குடு போதைப் பொருளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு மற்றும் நகர அபவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு நகரை அண்மித்துள்ள குடியிருப்புகளுக்குச் சென்றால் ஐயோ ஐயா குடுவை ஒழித்து தாருங்கள் என அந்த மக்கள் கோருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறினார். போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடானது அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டுக்கு அச்சுறுத்தல் என அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மெலேசியா சென்று, தனது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து திரும்பியுள்ள கேபி

2009ம் ஆண்டு புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், இலங்கை அரசிடம் சரணடைந்த கே.பி என்னும் குமரன் பத்மநாபன் தற்போது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். இலங்கை அரசின் செலவில் முற்றாகப் பராமரிக்கப்பட்டு வரும் இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன் நாள் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீட்டில் தற்போது தங்கியுள்ளார். இலங்கை அரசின் ஆதரவோடு, தொண்டு நிறுவனம் ஒன்றை தாம் நடாத்திவருவதாக கூறிவரும் இவர், சமீபத்தில் அரச செலவில் மலேசிய சென்று வந்துள்ளார் என்ற செய்திகள் கசிந்துள்ளது. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பல கோடி அமெரிக்க டாலர்களை, இவர் கோட்டபாயவுக்கு கொடுத்துள்ளார் என்றும், புலிகளுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளின் விபரங்கள் இவரிடம் இருப்பதாகவும் இலங்கை அரசு தகவல்களை வெளியிட்டு, சிங்களவர் மத்தியில் செல்வாக்கைப் பெற்றது. 
இதன் காரணமாகவே தாம் கே.பியை பராமரித்து வருவதாக இலங்கை அரசு சிங்களவர்களுக்கு மத்தியில் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். சமீபத்தில் இரகசியமாக மெலேசியா சென்று, தனது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து திரும்பியுள்ள கேபியின், விமானச் சீட்டு தொடக்கம் உணவுக்கும் சேர்த்து இலங்கை அரசே செலவுகளைப் பொறுப்பேற்றுள்ளது என்றும் மேலும் அறியப்படுகிறது. இலங்கை அரசு தம்மைக் கைதுசெய்யவில்லை என்றும், தாமே இலங்கை அரசிடம் சரணடைந்தேன் என்றும் இவர் அடிக்கடி கூறிவருகிறார். இருப்பினும், இலங்கைப் புலனாய்வுத் துறையினர் மலேசியாவரை சென்று ஒரு பாரிய ஆப்பரேஷனில் ஈடுபட்டே கே.பியைக் கைதுசெய்தனர் என்று சிங்களவர்கள் மத்தியில் பலத்த பேச்சு அடிபட்டுவருகிறது

இந்து சமுத்திரத்தையும் ஆராய்சி செய்ய சீன அரசாங்கம் இந்த சட்ட மூலம்


சர்வதேச கடற்பரப்பில் கனிய வளங்கள் குறித்து ஆராய்சி செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலாக சட்ட மூலம் ஒன்றை சீன அரசாங்கம் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அரச தகவல்களை மேற்கோள் காட்டி, த டைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்து. இந்த சட்ட மூலத்தின் மூலம் இந்து சமுத்திரத்தையும் ஆராய்சி செய்ய அனுமதிவழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சட்ட மூலம்தொடர்பில் இந்தியாவின் புதுடில்கி அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் சீனா இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றி கடலாராய்சியில் ஈடுபடுமாயின், அது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்தியா கருதுகிறது

mercredi 2 janvier 2013

மோதலை அடுத்து மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மற்றும் தேசிய டிப்ளோமா பாடநெறி மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது

இலங்கை தெரிவு.2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக


பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமானது 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத் தளமாக இலங்கையை பெயரிட்டுள்ளது.  இலங்கையில் பல வரலாற்று தளங்கள், இயற்கை அழகுகள் மற்றும் விருந்தோபலுக்கு ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டே இலங்கைக்கு முதலிலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை சுற்றுலாத்துறையானது 2016 ஆண்டிற்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

mardi 1 janvier 2013

ஆண்மை நீக்கம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு


பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.
பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை 30 நாட்கள் வரை காவலில் வைக்கவும், அவர்கள் முன் ஜாமீன் பெறாமல் இருக்கவும், கைது செய்யப்படுவோர் வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் விடுவிக்கப்படாமல் இருக்கவும் சட்டத்திருத்தங்கள் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழகத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவச் சிகிச்சைக்கான மொத்தச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்வதுடன், அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகளையும் அரசே செய்யும் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் புதுடில்லி சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தனது வேதனையைத் தெரிவித்திருக்கும் அவர், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே இருந்தாலும், அறவே அவற்றைக் களைவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்.
குண்டர் சட்டம் திருத்தப்படும்
அதன்படி பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால், சம்பந்தப்பட்டவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு வழி செய்யும் வகையில் குண்டர் தடுப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்படும்.
அண்மையில் அவர், முதற் குற்றமே சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்குமானால் அத்தகைய சம்பவங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தவென தகுந்த சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படும் எனக்கூறியிருந்தார்.
பொதுக் கட்டடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்படும், பொதுமக்கள் அதிகமாக நடமாடும் வணிக மையங்கள், பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடியவர்களின் நடமாட்டத்தைச் சீருடை அணியாத காவல்துறையினர் கண்காணித்து, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பர்.
மேலும் பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவிருப்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
இந் நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞர்களாக பெண்களே நியமிக்கப்படுவார்கள். அந்நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக தினசரி வழக்குகளை நடத்தி, விரைவில் தீர்ப்பு பெற சம்பந்தப்பட்டவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.காவல்துறைக்கு பயிற்சி
பாலியல் வன்முறை வழக்குக்கள் கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டு, துணைக் கண்காணிப்பாளர்களின் நேரடி மேற்பார்வையில் ஆய்வாளர்கள் புலன் விசாரணை மேற்கொள்வது, இயன்றவரை இவ்வழக்குவிசாரணைகளில் பெண் காவல் ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவது, மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள் ஆகியோரும் இவ்வழக்கு விசாரணைகளை ஆய்வு செய்வது, தற்போது புலன் விசாரணையிலும், நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருக்கும் அனைத்து பாலியல் வன்முறை வழக்குகளையும் மண்டல காவல்துறைத் தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து சட்டம், ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநருக்கு 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்புவது உள்ளிட்டவையும் புதிய அணுகுமுறையில் அடங்கும்.
குழந்தைகளுக்கென 24 மணி நேரமும் உதவி செய்யும் வகையில் இலவச தொலைபேசி அழைப்பு சேவை இயங்கி வருவது போல், ஆங்காங்கு தனித்தனியே இயங்கும் பெண்கள் உதவித் தொலைபேசி சேவையினை ஒருங்கிணைத்து ஆதரவற்ற மகளிருக்கு ஆலோசனை அளிக்கும் பயிற்சி பெற்றவர்களையும் உள்ளடக்கிய புதிய அமைப்பொன்றும் நிறுவப்படும்.
பாலியல் வன்முறை வழக்குகள், பெண்கள் இன்னல் தடுத்தல் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் சட்டம் 2012 குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அப் பயிற்சி வகுப்புகளில், பாலியல் வழக்குகளில் சரியான விசாரணை நடத்துவது பற்றி மட்டுமின்றி, இக்குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களை கனிவுடனும், கண்ணியத்துடனும் நடத்துவது குறித்தும் போதிக்கப்படும் என்று கூறும் முதல்வர் பெண்களிடம் அச்ச உணர்வு நிலவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் எனவும் உறுதியளித்திருக்கிறார்.
புதுடில்லி சம்பவம் குறித்து இப்போதுதான் முதல்முறையாக ஜெயலலிதா கருத்து தெரிவித்திருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

300 கோடிகளைத் தாண்டிய நிலையில் விஷவரூபம் பற்றி ஒரு குறும்படமும் வெளியாகியுள்ளது

விஸ்வரூபம் திருட்டு DVD

விஸ்வரூபத்தின் DTH முன்பதிவு 300 கோடிகளைத் தாண்டிய நிலையில் விஷவரூபம் பற்றி ஒரு குறும்படமும் வெளியாகியுள்ளது   

இராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

essayஇராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

* அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்தால் மோசடிக்கு இடம் ஏற்படும்

* மாகாணசபை முறையை இந்தியா திணிக்கவில்லை

*பண்டாரநாயக்க காலத்திலிருந்து விவாதிக்கப்பட்ட விடயம் அதிகாரப் பகிர்வு

* மாகாண சபையை ஒழிப்பதால் சிங்கள முஸ்லிம் இளைஞர்களுக்கும் தவறான  செய்தியாகிவிடும்

* மகிந்த சிந்தனையில் அளித்த வாக்குதியை நிறைவேற்றுகஇராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் மக்களின் இறைமையின் செயற்பாடானது பிரிக்கப்பட்டுவிட்டது. அது நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று ஜனாதிபதிக்குமிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

சட்டம் தயாரிக்கும் அமைச்சரவையை ஜனாதிபதி கட்டுப்படுத்துகிறார். அதற்கு தலைமை வகிக்கிறார். அது எண்ணிக்கை அதிகமான அமைச்சர் சபையானாலும் நாடாளுமன்றத்துக்கு அவர் பதிலளிப்பதில்லை.

அமைச்சுகளுக்கான செயலாளர்கள், பொதுச்சேவைகள் ஆணைக்குழு மற்றும் ஆணைக்குழுக்களின் செயலாளர்களையும் அவரே நியமிக்கிறார். அந்த வகையில் பொதுச் சேவைகள் முழுவதையும் அழுத்தமாகக் கட்டுப்படுத்துகிறார் ஜனாதிபதி.

ஜனாதிபதியே பிரதம நீதியரசரை நியமிக்கிறார். மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், நீதித்துறை சேவை ஆணைக்குழு ஆகியவற்றையும் நியமித்து அதன் வழியில் நீதித்துறையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.

ஆயுதப்படைகள் மீதும் ஜனாதிபதி கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார். நிதிகளின் மீது நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பாடு உண்டு. ஏனென்றால் வரவு செலவுத் திட்டத்தை அது நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் நிதியமைச்சர் என்ற முறையில் அதுவும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள அதிகாரிகளாலேயே தயாரிக்கப்படுகின்றது.

சகல அதிகாரங்களும் ஒரு தனிநபரிடம்


இவ்வாறாக 1978 ஆம் ஆண்டு அரசமைப்பின்படி பெரும்பாலும் சகல அதிகாரங்களும் நிறைவேற்று ஜனாதிபதி என்ற முறையில் தனிநபர் ஒருவரிடமே குவிக்கப்பட்டுள்ளன.
முக்கியமான சட்டவரைவுகளுக்கு மக்களின் ஒப்புதலை கருத்துக்கணிப்பின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விதிகள் இருந்தபோதிலும் அதுவும் கூட ஜே.ஆர்.ஜயவர்த்தனா காலத்தில் ஒரே ஒருமுறைதான் பயன்படுத்தப்பட்டது.

அதுவும் கூட அவருடைய அரசின் ஆயுளை தேர்தல் நடத்தாமலே நீடித்துக் கொள்வதற்காக. இவைகளுக்கு மாற்றீடாக நாடாளுமன்றம் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும். ஆக சகல அதிகாரங்களும் தனி ஒரு மனிதரிடம் மையப்படுத்தப்பட்டுள்ளன.

13 ஆவது திருத்தம் தந்த நன்மை

13 ஆவது திருத்தமானது மாகாண சபைகளை உருவாக்குவதன் மூலம் கொழும்பிலுள்ள அதிகாரங்களை அங்கிருந்து பகிர்ந்தளித்து மக்களை நெருங்கிச் செல்வதாகவும் 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பிலுள்ள ஜனநாயகத்துக்கு மாறான தன்மைகளை சமப்படுத்துவதாக அமைந்தது.

ஆனால் மாகாண சபைகளை 13 ஆவது திருத்தத்தை அழித்தும் அதன் மூலம் கிடைத்த நன்மையான பணிகளை குலைத்துவிடவும் ஜனநாயகத்துக்கு மாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது கவலையளிப்பதாகவுள்ளது. சமசமாஜக் கட்சியும் சோஷலிஸ கூட்டணியும் இந்த செயற்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இவ்வாறான ஜனநாயக விரோத செயல்களை நாடாளுமன்றத்திலுள்ள சுமார் 30 அரச உறுப்பினர்கள்  பல அமைச்சர்கள் தலைவர்களும் கூட இதில் எம்முடன் சேர்ந்து கொண்டிருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்தியாவின் திணிப்பா?

மாகாண சபைகள் முறையானது இந்தியாவால் திணிக்கப்பட்டது என்ற கருத்து முற்றிலும் தவறானது. 1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ ஆர்.டி.பண்டாரநாயக்க காலத்திலிருந்து சமஷ்டி அமைப்பில் பிராந்திய சபைகளை உருவாக்குவதை அவர் ஆதரித்திருந்தார். அதிகாரப் பரவலாக்கலுக்கான அலகுகளை உருவாக்குவது பற்றிய பிரச்சினை விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

சிலர் மாகாணங்களை ஓர் அலகாக ஏற்றுக் கொள்ளலாம் என்று கருதினார்கள். வேறு சிலர் மாவட்டங்களை விரும்பினார்கள். ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோதுமாகாண சபைகளை ஓர் அலகாக ஏற்றுக் கொள்வது என்ற வகையில் கருத்துக்கள் நகர்ந்தன.

இன்னும் மாகாண சபை முறையானது வெள்ளையானைக்கு ஒப்பானது, பொது நிதிகள் இதன் மூலம் வீணாக்கப்படுவதாகவும் குறை கூறப்படுகின்றது. ஆனால் உண்மை என்னவென்றால், அரசின் முழு செலவினத்தில் 7.5 வீதம்தான் மாகாண சபைகள் மூலம் பயன்படுத்தப்படுகின்றது.

அதன் பெருந்தொகையும் பாடசாலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கான சம்பளம் மற்றும் செலவுகளுக்காகவே போகின்றது. மாகாண சபைகள் இல்லாது போனாலும் இவை அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டியவைகளே. மேலும் இந்தப் பணத்தில் ஒரு வீதமளவிலான பணம் அரசியல்வாதிகளின் செலவினங்களுக்குப் போகின்றது.

இவைகளில் மக்கள் நன்மைக்கான முக்கிய அதிக செலவு பிடிக்கும் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிக்கான செலவுகளை மாகாண சபைகள் நேரடியாக தமக்கு வரும் பணத்திலிருந்தே செய்து கொள்கின்றன.

இதற்கு மாற்றீடாக மாவட்ட சபைகளை நிறுவுவது பற்றி ஆலோனை தெரிவிக்கப்படுகின்றது. இவை பொருளாதார ரீதியில் பயனளிக்கவல்லதல்ல என்பதுடன் 25 மாவட்ட சபைகள் இருக்குமென்பதால் செலவுகளையும் அதிகரிக்க செய்வனவாக இருக்கும்.

அதிகாரம் பகிர்வதை தடுப்பதற்கு

இதன் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் மாகாண சபைகள், பிறகு உள்ளூராட்சி சபைகள் கடைசியில் கிராம சபைகள் மூலமாக மக்களை அதிகாரமுள்ளவர்களாக ஆக்கும் வழிமுறைக்கு ஒரு முடிவு கட்டி எல்லாத் தீர்மானங்களையும் கொழும்பிலிருந்தே எடுத்துக் கொள்வதற்கு வழி செய்வதே.

மாகாண சபைகள் உள்ளூராட்சிச் சபைகள், கிராம சகைள் மூலமாகவே மக்களுக்கு அதிகாரங்களைப் பகிரமுடியும். அதன் மூலம் அவர்களே தமது அபிவிருத்திகளை செய்து, ஊழல்களை ஒழித்துக் கொள்வார்கள். அதன்மூலம் அவர்களை ஒரே நாட்டுக்குள் ஒருங்கிணைக்க முடியும். அவ்வாறாயின் அவர்கள் ஒருபோதும் பிரிவினையைக் கோரமாட்டார்கள்.

உண்மையில் 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவானதையடுத்து ஆயுதம் ஏந்திய எல்.ரி.ரி.யினரைத் தவிர ஏனைய எல்லா போராளிக் குழுக்களும் ஆயுதங்களை வைத்துவிட்டு ஜனநாயக நீரோடையில் இணைந்து கொண்டன.

மாகாண சபை முறையை ஒழிப்போமானால் நாம் ஒரு தவறான செய்தியை வழங்குபவர்களாக இருப்போம். அது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கும்  ஆனதாகவே இருக்கும். இங்கும் வெளிநாட்டிலும் செயற்படும் எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் மற்றும் ஜெனிவாவில் அமெரிக்காவின்  தலைமையில் நடைபெறும் சதித்திட்டத்துக்கு எம்மை தாக்குவதற்கான வெடி மருந்தை வழங்கியவர்களாவோம்.

ஒரு தனி மனிதரால் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது அவர் என்னதான் புத்திசாதுரியமானவராக இருந்தாலும் மோசமான தவறுகளை இழைத்துவிட முடியும். உதாரணத்துக்கு பிரதம நீதியரசர் நியமனம்.

ஒரு நபரிடம் அதிகாரங்கள் குவியும் போது அதிகாரத் துஷ்பிரயோகம் நிச்சயமாக இடம்பெறமுடியும். அதிகாரம் மோசடிக்கு இடம்கொடுக்கும். முழுமையான அதிகாரம்,  முழுமையான மோசடிக்கு வழிவகுக்கும் என்பது முதுமொழி.

இராணுவ சர்வாதிகாரம் தோன்றும்


அடுத்து வரும் ஜனாதிபதியாக இராணுவப் பின்னணியுள்ள பொன்சேகாவைப் போன்ற  ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் இராணுவ சர்வாதிகாரம் ஏற்படுவதற்கான அபாயம் இருக்கின்றது. இப்பொழுதும் கூட செயற்பட்டுக் கொண்டிருக்கும் அது பெரிதாக விஸ்தரிக்கப்பட்டு விடும்.

எனவே தான் எவ்வளவு விரைவாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து 1972 ஆம் ஆண்டு அரசமைப்பில் பொருத்தமான சீர்திருத்தங்களை செய்து ஒரு  கலப்பு முறையான தேர்தல் முறைக்கு வருகிறோமோ அது நாட்டுக்கும் நாட்டின் எதிர்காலச் சந்ததியினருக்கும் நன்மையாக இருக்கும்.

அடுத்த தேர்தலில் இதைச் செய்வதாக வாக்குறுதியளிப்பவர்கள் இந்த அபரிமிதமான அதிகாரங்கள் கிடைத்த பின் செய்வார்கள் என்று நம்ப முடியாது. நாம் இன்றைய ஜனாதிபதியை மஹிந்த சிந்தனையில் அவர் வாக்குறுதியளித்ததை செய்யும் படி கோரி நிற்கின்றோம்