தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடேல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் எனவும், பெண் புலிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடேல் பாலசிங்கம் 10வயது சிறுமிகளுக்கு பயிற்சிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவர் போராளிகளின் கழுத்தில் அடேல் பால சிங்கம் சயனைட் வில்லைகளை மாட்டிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிக்கினால் சயனைட் வில்லைகளை அருந்தி உயிரை மாய்த்துக் கொள்ளுமாறும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேல்நாட்டு பெண் மற்றும் தாதியயாருவர் இவ்வாறு கொடூரமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இளம் சிறுமிகள் உயிரிழக்க காரணமான யுத்தப் பயிற்சிகளை வழங்கிய அடேல் பாலசிங்கம் பிரித்தானியாவின் சர்ரே பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். மனிதாபிமானத்திற்கு எதிரான யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட பெண் ஒருவர் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றார். அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக பிரித்தானியா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள பிரித்தானியாவில் புலிகளின் சர்வதேச தலைமையச் செயலகம் அமைந்துள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் எவ்வாறு பகிரங்க ஆர்ப்பாட்டம் நடத்த முடியும்? அரசியல் தலைவர்களுக்கு எதிராக எவ்வாறு போராட்டம் நடத்த முடி யும் என பாதுகாப்பு அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளது.
பிரித்தானியாவில் தமிமீழ விடுதலைப் புலிகள் நிதி திரட்டுவ தாகவும் குற்றம் சுமத்தப்ப ட்டுள்ளது. 2002-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போது அடேல் பால சிங்கம் தமிழீழ விடு தலைப் புலிகளை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் என பாதுகாப்பு அமை ச்சு சுட்டிக்காட்டியுள் ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire