313 பேர் சமூகத்துடன் இணைப்பு முன்னாள் போராளிகள்
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு, இன்றையதினம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 313 சமூகத்துடன் இணைக்கப்;பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மரதனாமடம் மற்றும் பூந்தோட்டம் ஆகிய புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 313 பேரே இன்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் தென் மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையே வவுனியா நகரபை மைதானத்தில் கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது. இப்போட்டியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளே வெற்றிபெற்றுள்ளனர்.
இந்நிலையில், புனர்வாழ்வு அதிகார சபையால் நாளை திங்கட்கிழமை முல்லைத்தீவு பிரதேச சபை கேட்போர்கூடத்தில் கேப்பாப்பிலவு மக்களுக்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் முட்கம்பிகள் வழங்கப்படும். அதேவேளை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து தென்னங்கன்றுகளும் ஏனைய பயிர்க் கன்றுகளும் வழங்கப்படும். அத்துடன் 100 பேருக்கு நஷ்டஈட்டுக் கொடுப்பனவு மற்றும் கடன்தொகையும் வழங்கப்படும்.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் நூறு பேருக்கு நஷ்டஈடு மற்றும் கடன்தொகையும் அதிகார சபையினால் வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire