முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க ரீதியாக முரண்பாடுகளைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. அவற்றுக்கிடையில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களைத் திரட்டி வருகின்றனர். அவற்றைக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் இரகசிய பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் மிகவும் அவதானத்துடன் இருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் தொடருவதற்கு இடமளிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை ஆராய்வதற்கென பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றினை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்குளுக்கும் இடையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போதே இந்த உத்தரவினை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதி அதற்குப் பதிலளிக்கையில்,
இரு தரப்பிலிருந்தும் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. முஸ்லிம்கள் ஒரு மதமாக இருந்தாலும் இஸ்லாத்துக்குள் பல்வேறு குழுக்கள் செயற்பட்டு வருவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire