vendredi 25 janvier 2013

சீர்குலைக்கும் T.N.A தலைவர்கள்


“தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைகளின் சொந்த தொழில் என்ன தெரியுமா வாங்க பாக்கலாம்“

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தொடர்பில் சிலகாலமாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தமிழ் மக்களிடையே பலத்த சந்தேகங்களையும், ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் தமிழ் மக்களைத் தமது பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஏமாற்றி வாக்குகளை கொள்ளையிட்டு தாமே தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என உலகமெல்லாம் மார்தட்டிவரும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் தரக்குறைவான செயல்களால் வாக்கு கேட்ட மக்கள் முன்னால் தலைகுனியும்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமக்குச் சார்பான ஊடகங்கள் சிலவற்றில் அறிக்கைப் பிரசாரங்களை செய்துவரும் தலைவர்கள் பலர் தங்களுடைய திரைமறைவில் தமது தனிமனித வளர்ச்சிக்காக மேற்கொண்டுவரும் தொழில்கள் பல இப்போது அம்பலமாகிக்கொண்டு வருவதால் இவர்கள் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் நடமாட முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். 

தற்போது இவர்கள் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பொலிஸ் பாதுகாப்புடன் தான் தமது தொகுதிக்கு செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள், அரசாங்கத்திற்கு எதிரான துண்டுப் பிரசுர காகிதாதிகள் என்பனவற்றுடன் ஆபாச சீடிக்கள், ஆணுறைக் கவசங்கள் எனப் பல கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவரது செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஓர் அரசியல்வாதியின் அலுவலகத்தில் இருக்கக் கூடாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

ஏற்கனவே இப்பாராளுமன்ற உறுப்பினர் மீது சிறுமி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு நிலவும் நிலையில் தற்போது இவரது அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்கள் அந்தகுற்றச்சாட்டை நிரூபிப்பதாகவே உள்ளது.

ஆனால் இதனுடன் சம்மந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரோ தனக்கு இதில் சம்பந்தம் எதுவுமே இல்லாதது போன்று தனது செயலாளரைச் சம்பந்தப்படுத்தியுள்ளார். அது போதாதென்று அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி என்றும் அறிக்கை விட்டுள்ளார். நடந்த சம்பவத்தையே பிரசுரிக்க மறுத்த கூட்டமைப்பின் சார்பு ஊடகங்கள் அவரது அறிக்கையை மட்டும் வழமைபோன்று விபரமாகப் பிரசுரித்துள்ளன. உண்மையிலேயே அவரது செயலாளர்தான் இக்குற்றத்தைப் புரிந்திருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினரும் இதற்குப் பதில் கூறியே ஆக வேண்டும்.

இது மட்டுமல்லாது கிளிசொச்சி சம்பவம் தொடபில் புலம் பெயர் இணைய ஊடகங்கள் சில தமிழ் தேசியம் பேசுபவர்களின் சொல்லை கேட்டு அங்கு நடந்த சம்பவத்தை பற்றி பேசாது அங்கு நின்ற ஊடகங்கள் பற்றியும் ஊடகவியலாளர்களுள் பற்றியுமே பேசின.

ஒரு செய்தியை சேகரிப்பதற்கு அந்த ஊடகம் யாருடையது அல்லது அங்கு நிற்கும் ஊடகவியலாளர் யார் என்பது முக்கியமில்லை அங்கு நடைபெறும் சம்பவமே முக்கியம் ஆனால் புலம் பெயர்ந்த ஊடகங்கள் சில களத்தில் இருந்த ஊடகவியலாளர்களை பற்றி மட்டுமே பேசின.

இணைய ஊடகங்களில் பெரும் போராக நடைபெற்ற வாக்குவாதத்தின் இறுதியில் புலம்பெயர் ஊடகங்கள் அனைத்தும் இதில் இருந்து வெளியேறினாலும் சிறீதரனுடைய இரத்த உறவுடைய ஊடகம் மட்டும் இதில் இருந்து வெளியேற வில்லை இறுதியில் அண்ணனை பாதுகாக்க போய் ஊடகம் என்ற சொல்லை உறவுக்காக விற்றுவிட்டதுதான் இதன் பெருமை.

இறுதி யுத்தத்தின்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பட்ட துன்பங்களை எவருமே அனுபவித்திருக்க மாட்டார்கள். அவ்வாறு யுத்தக் கெடுபிடிக்குள் சிக்குண்டு மறுவாழ்வு பெற்றிருக்கும் அம்மக்கள் தாம் நம்பியிருந்த புலிகளே தம்மை நட்டாற்றில் விட்டுவிட்டுச் செல்ல அவர்களது வால்களைப் பிடித்துக்கொண்டிருந்த உங்களை நம்பிக் கொண்டிருக்கையில் நீங்கள் ஆபாச வீடியோக்களில் மோகங்கொண்டு அலுவலகத்தில் அராஜகம் புரிகிறீர்கள்.

உதவிகேட்டு வரும் மக்களை உதாசீனம் செய்வது மட்டுமல்லாது பெண்கள் குலத்தின் பாவத்திற்கும் ஆளாகுகிறீர்கள். புலம்பெயர் நாடுகளிலிருந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் பெருந் தொகைப் பணத்தின் பெரும் பகுதியைச் சூறையாடி வருவதுடன் அரசாங்கம் இம்மக்களுக்காகச் செய்துவரும் உதவிகளையும் உதறித்தள்ள முற்படுகிறீர்கள். சில தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் தமது பிள்ளைகளின் உயர் கல்விக்காகவும் அவர்களது வெளிநாட்டுப் புலமைப் பரிசிலுக்காகவும் மட்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இன்னும் சிலரோ வெளிநாட்டிலிருக்கும் தமது உறவினர்களுக்கு இரட்டைப் பிராஜாவுரிமை பெறுவதற்காக அரசுடன் இரகசியக் கூட்டு வைத்துச் செயற்படுகின்றனர். இன்னும் சிலர் விஸா வியாபாரம் செய்கின்றனர். இதனையே ஏனைய தமிழ் தலைவர்கள் செய்தால் துரோகிகள் என்கின்றனர். 

ஆனால் இந்தத் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு வாக்களித்த அப்பாவித் தமிழ் மக்களோ இத்தலைவர்கள் தமக்கு நிரந்தரத் தீர்வொன்றினைப் பெற்றுத்தருவார்கள் என நம்பியவர்களாக இன்றும் காணப்படுகின்றனர். மக்களில் பலருக்கு இத்தலைவர்கள் முன்னர் போன்றல்லாது தற்போது சுயநலமாகச் செயற்பட்டுத் தம்மை ஏமாற்றுகிறார்கள் எனும் உண்மை நிலை நன்கு புரிந்திருந்தாலும் தமது ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடக் கூடாது எனும் ஒரே காரணத்திற்காக பொறுமை காத்து வருகிறார்கள் என்பதே உண்மையாகும்.

அண்மைக் காலமாக தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் தொடர்பாக வெளியாகும் செய்திகள் மக்கள் மனங்களில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வேலியே பயிரை மேய்வது போல தமக்குப் பாதுகாப்பாக இருந்து குரல் கொடுக்க வேண்டிய தலைவர்களே இன்று தமக்குத் துரோகம் செய்பவர்களாக மாறியுள்ளதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். அரசியல் சொகுசு வாழ்வு, அதிகாரம், சுய தேவைகளுக்காக தம்முடன் கூடவே திரியும் உதவி அடியாட்கள் இந்த தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் நிலையை மாற்றியமைத்துவிட்டதை மக்கள் உணர்ந்துவிட்டனர்.

தாம் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தவர்கள் இன்று தமக்கு ஊடகங்களில் அதுவும் ஒரு சில தமிழ் ஊடகங்களில் மட்டுமே தாம் விடும் அறிக்கைகள் மூலமாகத் தீர்வினைப் பெற்றுத் தரப்பாடுபட்டுவருவது போலப் பாசாங்கு செய்வது அந்த வாக்களித்த மக்களுக்கு புரிந்துவிட்டது. உண்மையில் காத்திரமான அறிக்கை மூலமாகவும் வடக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்காக உண்மையாகக் குரல் கொடுப்பது போன்று மனோ கணேசனின் அரசியல் செயற்பாட்டை வடக்கு கிழக்கு மக்கள் விமர்சிக்கின்றனர் காரணம் தமிழர் என தனது தொகுதியில் கேட்டு தோற்றுப்போனவர் தற்போது தன்னுடைய அரசியலை வடக்குகிழக்கு பக்கமாக திருப்பியுள்ளார் என புலம்பெயர் தரப்பு கூறுகிறது.

ஆனால் யுத்தம் முடிவடைந்து பேச்சுவார்த்தை, சர்வதேச சமூகம், புலம்பெயர் சமூகம் என்று கடந்த நான்கு வருடங்களாக தமிழ்த் தேசியத்திற்காகப் பாடுபட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியத் தலைமைகள் தடம்மாறி பயணிக்க ஆரம்பித்துள்ளனர். பெருந்தலைவரால் அதன் சிறு தலைவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதுள்ளதால் இன்று பலரும் குறுந்தலைவர்களாகச் செயற்படும் நிலை தோன்றியுள்ளது.

இதன் காரணமாக இவர்கள் தமது மக்கள் சேவையை மறந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தாம் மக்களால் வாக்களித்து வந்தவர்கள் என்பதை மறந்து குறுநில மன்னர்களாக தம்மை எண்ணி வாக்களித்த மக்களையே வாயடக்கி ஆள முனைந்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல. வாக்களித்த மக்கள் கிளர்ந்தெழ ஆரம்பித்தால் அரசியல் அலுவலகங்களை மூடிவிட்டு முன்னர்போன்று கொழும்பில்தான் தஞ்சமடையயும் சூழல் ஏற்படும்.

எனவே உங்களை நம்பி உங்களது புளித்துப் போன தமிழ் தேசியக் கதைகளை நம்பி வாக்களித்த மக்களை புலிகளைப் போன்று நடுத்தெருவில் விட்டுவிட வேண்டாம். உங்களால் முடியாவிட்டால் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுங்கள் அல்லது வயசு போய்விட்டது தானே விட்டு விலகி இளம் தலைமுறைக்கு வளிவிடுங்கள்.

தற்போது மக்களில் பெருமளவிலான மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றும் தமிழ்த் தலைவர்களின் பின்னால் அணிதிரள ஆரம்பித்துவிட்டனர். ஒன்று மக்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யுங்கள் அல்லது செய்து கொண்டிருக்கும் அரசாங்கத்தைச் செய்யவிடுங்கள் என்பதே எமது வேண்டுகோளாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire