பாதுகாப்பு படையினரிடம் சரணடையாத மற்றும் கைதுசெய்யப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த இன்னும் 1200 பேர் இருக்கின்றனர். என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். புலி சந்தேகநபர்கள் 400 பேர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.வடக்கு பாதுகாப்பு பிரிவினரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளதாக பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷிய தெரிவித்துள்ளது. அந்த 1200 பேரிலும் 400 பேர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாகாணங்களில் வசிப்பதாகவும் ஏனையோர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்திருக்கின்ற அல்லது கைது செய்யப்படாமல் இருக்கின்ற புலி சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உரியப்பிரிவினர் எடுப்பது தொடர்பிலும் அந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire