jeudi 17 janvier 2013

த.தே.கூஇன் போலிமுகம் !


யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன-11) இரவு 8.30 மணியளவில் முச்சக்கரவண்டியில் மறைத்துவைக்கப்பட்ட 11.1 கிலோகிராம் வெடிப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் யாழ் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இம் முச்சக்கரவண்டியின்(NP – YM-4074) பின்புறமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இவ் வெடிப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ‘சங்கர்’ என்று அழைக்கப்படும் பிரேமதாஸ் ராஜசேகரன் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த ‘வசந்தன்’ என்று அழைக்கப்படும் பிரேமராஜா வசந்தன் ஆகியவர்கள் ஆவார்கள்.
இவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணையின் போது, வன்னியில் இருந்து இவர்கள் வெடிப்பொருட்களை கொண்டுவந்துள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து இவர்கள் புறப்பட்டு கிளிநொச்சியை வந்தடைந்ததாகவும், மீனவர்களுக்கு இதனை விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். உண்மை நிலையை கண்டறியும் முகமாக மேலதிக விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
கைதுசெய்யப்பட்டவர்களின் ஒருவரான கிளிநொச்சியை சேர்ந்த பிரேமராஜா வசந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராவார். இவர் கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டாளரான அருணாச்சலம் வெள்ளைமணிகீதனின் நெருங்கிய உதவியாளராவார். மேலும் இச் சந்தேக நபர்கள் கூறியதாவது, தாம் கிளிநொச்சிக்கு சென்று அங்குள்ள த.தே.கூபின் அலுவலகத்திற்கு சென்று தமது உடைகளை மாற்றிவிட்டு த.தே.கூ.இன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் அரசியல் காரியாலத்தில் இருந்த த.தே.கூஇன் ஏற்பாட்டாளரை சந்தித்து பின்னர் யாழ்பாணம் சென்றதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரு சந்தேக நபர்களுடன் டிஐடி அதிகாரிகள் கிளிநொச்சி சென்று த.தே.கூஇன் அரசியல் காரியாலயத்திறக்கு சென்று சோதனை செய்துள்ளனர். இத் தேடுதல் நடவடிக்கையின் போது அவ் அலுவலகத்தில் இருந்து பல குற்றவியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்கு 400 கிராம் எடைகொண்ட வெடிப்பொருட்கள், அரசாங்கத்திற்கெதிரான பிரசுரங்கள், சமாதானத்தை சீர்குழைக்கும் ஆவணங்கள், ஆபாசங்களை உள்ளடக்கிய சிடிக்கள், இளம் தமிழ்ப் பெண்களின் புகைப்படங்கள், வழிகேட்டில் இட்டுச் செல்லும் பொருட்கள் உட்பட பலவிதமான ஆதாரங்கள் டிஐடி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து த.தே.கூஇன் கிளிநொச்சி ஏற்பாட்டாளர் அருணாச்சலம் வெள்ளைமணிகீதனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இவ் இரு சந்தேக நபர்களும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திற்கு வந்து சென்றதை உறுதிப்படுத்தினார்.
பின்னர் அருணாச்சலம் வெள்ளைமணிகீதன் மெலதிக விசாரணைகளுக்காக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அதேநேரம் ஸ்ரீதரனின் ஒருங்கிணைப்பு செயலாளர் பொண்ணம்பலம் லக்ஷ்மிகாந்தனும் கைதுசெய்யப்படவுள்ளார்.
வெடிப்பொருட்கள், ஆபாசப்பொருட்கள், தமிழ்ப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் த.தே.கூஇன் அலுவலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் மூலம் இவ் அரசியல் கட்சியின் உண்மையான தோற்றம் இப்பொழுது வெளியுலகிற்கு விளங்கியுள்ளது.
த.தே.கூஇன் தற்போதய நடவடிக்கைகளை பார்க்கும் போது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அதே பாணியில் தமது நகர்வை மேற்கொள்கின்றனர். இவர்கள் தமிழ் சமூகத்தை மீண்டும் ஓர் அழிவுப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிக்கின்றனர். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இப்பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறான முறைகேடான நடவடிக்கையில் ஈடுபடுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இவர்களை மக்கள் எவ்வாறு நம்புவது?
விடுதலைப்புலிகளின் அராஜகம் ஒழிக்கப்பட்டு மக்கள் அமைதியாக வாழும் இத் தருவாயில், மீண்டும் ஓர் போரை உண்டுபண்ணி இளைஞர்களையும் யுவதிகளை அழிவுப்பாதையில் இட்டுச் செல்ல இவர்கள் முயற்சிக்கின்றனர். இதன் மூலம் இவ் அரசியல்வாதிகள் சுகபோகம் அனுபவித்துக்கொடும் அப்பாவி தமிழ் மக்களது எதிர்கால சந்ததியினரை அழிவுப்பாதையில் இட்டுச்செல்கின்றனர்.
இவர் அடிக்கடி அரசாங்கத்தை நோக்கியும் பாதுகாப்புப் படையினரை நோக்கியும் பல குற்றச்சாட்டுக்கள், தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு உட்பட பற்பல குற்றச்சாட்டுக்களை முன்வைப்பர்களாவர். இவரது உண்மையான தம்மை இவ்வாறு இருக்கும் என்பது அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது
அண்மையில் இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ்ப்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர் என இவரே கருத்துக்களை வெளியிட்டு அப் பெண்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தினார். ஆனால் அவ்வாறாதொரு சம்பவம் எதும் தமதுக்கு இடம்பெறவில்லை எனவும் இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என அப் பெண்கள் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இது போன்ற பல காரியங்களை மேற்கொண்டுள்ளனர்.
இனிமேலும் தமிழ் மக்கள் இவர்களின் வலையில் சிக்குண்டாது சிந்தித்து செயல்பட வேண்டும்

Aucun commentaire:

Enregistrer un commentaire