பெர்லின்:ஜெர்மனியில், வங்கி பாதுகாப்பு அறை வரை, பூமிக்கடியில், நூறடி நீளமுள்ள சுரங்கம் அமைத்து கொள்ளையர்கள் பணத்தை சுருட்டி சென்றுள்ளனர்.ஜெர்மனி நாட்டின், பெர்லின் நகரில், வங்கி ஒன்றின் பாதுகாப்பு அறையில் இருந்து புகை வருவதை அறிந்த, வங்கி ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று, அறையை பரிசோதித்தபோது, அங்கு கொள்ளை நடந்திருப்பதும், அறைக்குள் கொள்ளையர்கள் நுழைவதற்காக, நூறடி தூரத்திற்கு சுரங்கம் அமைத்திருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து, போலீஸ் அதிகாரி, தாமஸ் நியூன்டார்ப் கூறியதாவது:கொள்ளையர்கள் பல நாட்களாக, ரகசியமாக சுரங்கத்தை அமைத்துள்ளனர் என்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு கொள்ளை அடிப்பதில், அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்பது புலனாகியுள்ளது. அவர்கள் வங்கி பாதுகாப்பு அறையில் இருந்து எவ்வளவு பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire