டெல்லியில் கடந்த மாதம் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில், டெல்லி அருகில் உள்ள பரிதாபாத் நகரில் மாணவி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
12ம் படித்து வந்த அந்த மாணவி நேற்று மாலை டியூசனுக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் வெகுநேரமாகயும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் அவரைத் தேட ஆரம்பித்தனர்.இந்நிலையில் அந்த மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப் பட்டிருந்தது. உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந் தன.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?, இல்லையா? என்பது பிரேத பரிசோதனைக்குப் பிறகே தெரிய வரும்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப் போது கடைசியாக அந்தப் பெண்ணை ஒரு வாலிபர் அழை த்துச் சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, கொலை செய்ததை ஒப்புக் கொண்டு ள்ளார்.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு தங்கள் மகள் கற்பழிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும் இச்சம்பவத்தைக் கண்டித்து அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்நிலையம் முன்பு சாலை மறியல் செய்தனர். குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கி, மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
Aucun commentaire:
Enregistrer un commentaire