மாளிகையை புறக்கணித்த ஜனாதிபதி
லத்தீன் அமெரிக்க நாடு களில் ஒன்றாக இருக்கும் உருகுவேயின் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா( 77 ) தனக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட ஆடம்பர மாளிகையை புறக்க ணித்து விட்டு, மனைவி யின் தோட்டத்துடன் கூடிய வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருகிறார். 1960 - 70 கால கட்டங் களில் உருகுவே கொரில்லா புரட்சி இயக்கத்தில் தன் னை இணைத்துக் கொண்டு பணியாற்றிவர். பல அடக்கு முறை சட்டங்களையும் எதிர்கொண்டவர். பல முறை தனிமை சிறையில் அடைக்கப்பட்டு சித்ர வதைக்கு உள்ளாக்கப்பட் டவர். 2009ம் ஆண்டு இவர் உருகுவேயின் ஜனாதிபதி யாக தேர்ந்தெடுக்கப்பட் டார். அப்போது அவ ருக்கு அரசு வழங்கிய ஆடம் பர மாளிகையை வேண் டாம் என கூறியதுடன், தான் எப்போதும் போலவே சாதாரண குடிமகனாக வாழ விரும்புகிறேன் என்று கூறி அது போல் வாழ்ந்து காட்டியும் வருகிறார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire