dimanche 13 janvier 2013

சவூதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது ரிசானாவின் தலைவெட்டப்படும் கொடூரக் காட்சி


இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் சவூதி அரேபியாவில் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட கொடூர காட்சி அடங்கிய காணொளி சர்வதேச நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் பொது இடமொன்றில் வைத்து, ரிசானாவுக்கு சவூதி அரேபிய அதிகாரிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் சுற்றிவர நிற்க, தலைகுனிய முழங்காலில் நிறுத்தப்பட்ட ரிசானாவின் கழுத்தை, ஒருவர் வாளால் வெட்டித் துண்டாடும் அதிர்ச்சியளிக்கும் காட்சியை சவூதி அரேபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இதனை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அனைத்துலக அளவில் இந்தச் சம்பவம் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஆகியோரும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளட்ட பல நாடுகளும், அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளும், அனைத்துலகச் சட்டங்களை மீறும் இந்தப் படுகொலை வன்மையாக கண்டித்துள்ளன.தொலைக்காட்சி (காணொளி)

Aucun commentaire:

Enregistrer un commentaire