vendredi 18 janvier 2013

பெண்கள் புரட்சி மாநாடு-பெண்களை சமையல் அறைக் கருவியாக சம்பளம் இல்லாத வேலைக் காரியாக்கத் துடிக்கிறது.


21ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் நாட்டை மனுதர்ம உலகத்துக்கு இழுத்துச் செல்ல பிற்போக்கு சக்திகள் துடிக்கின்றன. சமதர்மத்தை, சமத்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கத் துடிக்கின்றன.
தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டு, திராவிடர் இயக்கம் பிரச்சாரம்  செய்து பெண்கள் படிக்கிறார்கள்  - பெரும் உத்தியோகங்களைப் பார்க்கிறார்கள்!
பி.ஜே.பி. ஆட்சியில் என்ன நடந்தது?
பெண் குழந்தைகள் பிறந்தால் கழுத்தை முறித்து வயலில் எறியும் ஒரு காலம் இருந்தது. கணவன் இறந்தால் மனைவியையும் அவனோடு சேர்த்து வைத்து எரித்து வந்த சமூகம் தானே இந்து
சமூகம் - மறுக்க முடியுமா?
வெகு தூரம் போக வேண்டாம். பிஜேபி ஆண்ட ராஜஸ்தானில் நம் காலத்திலேயே நடக்கவில்லையா ரூப்கன்வாருக்கு என்ன நேர்ந்தது? சதிமாதா கோயில் கட்டினார்களே
பெரியார் பிறந்ததால் தமிழ்நாட்டில் அதற்கு இடம் இல்லை.
இந்தியாவின் தலைநகரான டில்லியிலே ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கிளம்பியுள்ள கால கட்டத்தில் பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால் - இவர்கள் எத்தகையவர்கள் - இவர்கள் சார்ந்திருக்கும் இந்துத்துவா எவ்வளவுக் கொடியது என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.
காந்தியாரைக் கொன்ற கும்பல் எச்சரிக்கை!
காந்தியாரைப் படுகொலை செய்த கூட்டம் அது. பச்சைத் தமிழர் காமராசரை பட்டப் பகலில் படுகொலை செய்ய முயற்சி செய்த கும்பல் அது.
அந்தக் கும்பல்தான் இப்பொழுது பெண்களை சமையல் அறைக் கருவியாக சம்பளம் இல்லாத வேலைக் காரியாக்கத் துடிக்கிறது.
இன்றைக்குப் பெண்கள் காவல்துறையிலும், இராணு வத்திலும் பெரிய பெரிய அதிகாரிகளாக வந்துவிட்டனர். விமானங்களை ஒட்டுகின்றனர். என்றாலும் பெண்கள் என்றால் பலகீனமானவர்கள் என்ற மனப்பான்மை ஆண்களிடம் இருக்கிறது.
பெண்களும் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக வேண்டும். துப்பாக்கிச் சுடும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசுகள் அனுமதியளிக்க வேண்டும்.
தேவை காரத்தே பயிற்சி
தொடக்கப் பள்ளி முதல் கல்லூரி வரை பல்கலைக் கழகங்களிலும் கராத்தே பயிற்சி அளிக்க வேண்டும்.
நாங்கள் நடத்தும் பெரியார் கல்வி நிறுவனங்களில் மழலையர் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை கராத்தே பயிற்சி இருபாலருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்பு என்றால் அதில் நியாயமாக அதில் ஆண்களுக்கும் கடமை; பொறுப் புணர்ச்சி இருக்கிறது.
உங்கள் மகளை சகோதரியை நினைத்துப் பாரீர்!
நமது தாய், நமது மகள் சகோதரின் பெண்கள் என்ற எண்ணம் வர வேண்டும். அப்படி நினைத்தால் தான் பெண்களை மதிக்கும் எண்ணம், உணர்வு ஏற்படும்.
சமூகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் ஆண்களுக்கும் அது தொடர்பான பாதிப்புகள் வரத்தானே செய்யும்?
பெண்கள் புரட்சி மாநாடு
விரைவில் திராவிடர் கழகம் இதற்கான மாநாட்டை நடத்தும் - அது பெண்களின்  புரட்சி மாநாடாக இருக்கும் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire