jeudi 17 janvier 2013

தென் இந்திய சினிமாவில் கதாநாயகர்கள் வரிசையில் ஈழத்துக் கதாநாயகன் ஜே ஜே!! (அறிவித்தல்)


தென் இந்திய சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் ஈழத்துக் கலைஞர்கள் ஜே ஜே மற்றும் இந்திய பாடகர்களுடனான இசைப்பேளைகளுக்கு இசை அமைத்த K. திறேஸ்டன் இத்திரைப்படத்தின் மூலம் தென் இந்திய திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகின்றார் நமது கலைஞர்களை நாமே வளர்த்தெடுப்போம்” .1913 என்பது இந்திய சினிமா வரலாற்றின் ஆரம்பமாகும். அன்றைய நாட்களில் பேசும் திரைப்படங்கள் வெளிவரவில்லை, இந்தியாவில் வெளியான முதல் மௌனத் திரைப் படம் “ராஜா ஹரிச்சந்திரா”. அதே ஆண்டில் தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் “கீதகவசம்”. அதைதொடர்ந்து 1931 ஆம் ஆண்டு வெளிவந்த முதலாவது பேசும் தமிழ்த் திரைப்படம் “காளிதாஸ்” ஆகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன் , டி. பி ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரன் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இதன் மூலம் தமிழ் திரைப்படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.
இவ்வாறு பல இடங்களில் திரைக்கதையை மையமாக வைத்து திரை உலகப்பயணத்தில் வெற்றிகண்ட பல திரைப்படங்களில், ஊட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பல உள்ளன. நேற்றுவரை ஊட்டியில் படப்பிடிப்புக்கள் எடுக்கப்பட்டன, இன்றும் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கலாம், நாளை எடுக்கப்பட இருக்கும் திரைப்படம் “வனவிலங்கு”.இன்றுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களின் கதைக்கரு 15 வீதம் வரை ஊட்டியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுவதுமாக ஊட்டியை மையப்படுத்தி கதைக்கருவும், கதைக்களமும், கதாப்பாத்திரங்களும் ஜீவாம்சமாய் எடுக்கப்பட இருக்கும் திரைப்படம் “வனவிலங்கு”.காதலர்களை மட்டும் நேசிக்காது காதலை மட்டும் நேசித்து கதையின் நாயகன் அந்த காதலுக்கும், காதலர்களுக்கும் ஒரு தேர்வு வைக்கின்றான். எத்தனை காதலர்கள் அவனது தேர்வில் வெற்றி பெற்றார்கள்!.
இவன் ஏன் தேர்வு வைக்க வேண்டும்? காரணம் என்ன? காத்திருங்கள் மிக மிக விரைவில் உங்கள் கண்களிற்கும், செவிகளுக்கும் விருந்து படைக்க வருகின்றது “வனவிலங்கு”.இத் திரைப்படத்தில்,
சண்டைப் பயிற்சியாளர் (stunt master) : தளபதி தினேஷ், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய தளபதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஆடுகளம், சூரன், பவானி போன்ற வெற்றித் திரைப்படங்களில் பணிபுரிந்தவர்.கலை இயக்குனர்: மனோஜித்ரே, தங்கம், மாசி, பவானி, தீ, சூரன் போன்ற திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்தவர்.பாடல் ஆசிரியர்கள் : ராசுமதுரவன் இயக்கத்தில் வெளிவந்த கோரிப்பாளையம், தீபாவளி போன்ற பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய தமிழமுதன் மற்றும் விஜய் ஆண்டனி, G. V. கணேஷ் போன்ற இசையமைப்பாளர்களோடு பணிபுரிந்த பாடலாசிரியர்கள் இத் திரைப்படதிற்கு பாடல்களை எழுதுகிறார்கள்.நிழற்பட கலைஞன்: பாவை வின்சன்ட், படையப்பா திரைப்படம் முதல் பல வெற்றித் திரைப்படங்களுக்கு உதவி நிழற்பட கலைஞனாக பணிபுரிந்தவர்.மக்கள் தொடர்பாளர் : மௌனம் ரவி
இயக்குனர்: G. R. ஹேமஜெயந்தரன், பல வெற்றி இயக்குனர்களின் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பாவை விழிகள், தியாகய்யா, கோயமுத்தூர் மாப்பிள்ளை, காதலே சுவாசம், முதல் கனவு, தலை கீழ், விருதுநகர் சந்திப்பு, சூரன் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், 50 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் பணிபுரிந்தும், 15 இற்கு மேற்பட்ட தொடர் நாடகங்களிலும் பணிபுரிந்திருக்கின்றார். தாமரை மனாளன், வியட்நாம்வீடு சுந்தரம், இந்திர சௌந்தர்ராஜன், ஜெகன் மோகன், G.K. கோபிநாத், K பரத் போன்ற எழுத்தாளர்களோடு உதவி எழுத்தாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளாக பயணித்து இப்பொழுது “வனவிலங்கு” என்னும் இந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மூலம் அறிமுக இயக்குனராக அறிமுகமாகின்றார். கதாநாயகி: எழில் வளம் கொண்ட கேரளா மாநிலத்தில் இருந்தும், கனடாவில் இருந்தும் அறிமுகம் ஆகின்றார்கள் கதாநாயகிகள்.கதாநாயகன்: லண்டனில் பல பாடல்கள்,குறும்படங்கள், திரைப்படங்கள் என தன் திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஜேஜே இத் திரைப்படத்தில் புதுமுக நாயகனாக அறிமுகம் ஆகின்றார்.
மூன்று கதாநாயகர்கள் மற்றும் நான்கு கதாநாயகிகள் நடிக்கும் இத்திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க மனோதத்துவ ரீதியான கதையமைப்பைக் கொண்டது. இத்திரைப்படத்தை காண வரும் ரசிகர்கள் ஒரு காட்சியை தவறவிட்டால் கூட படம் முழுவதும் புரியாமல் போய்விடும் அளவிற்கு காட்சிகள் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் அமைய இருக்கின்றது. இத் திரைப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளடங்குகின்றன. அனைத்து பாடல்களும் ஜனரஞ்சகமாக இருக்கும். கலைத்துறையால் A ,B ,C என்று நிர்ணயிக்கப்பட்ட மூன்றுதரப்பு மக்களிற்கும் அனைத்துவிதமான எதிர்பார்ப்புக்களையும் பூர்த்திசெய்கின்ற படமாக இருக்கும். லண்டனில் பல விளம்பரங்கள், மற்றும் பல மேலைத்தேய, இந்திய பாடகர்களுடனான இசைப்பேளைகளுக்கு இசை அமைத்த K. திறேஸ்டன் இத்திரைப்படத்தின் மூலம் தென் இந்திய திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகின்றார். இந்த திரைப்படம் ஒரு ஆங்கில திரைப்படத்திற்கு நேர் நிகரான படப்பிடிப்பு சாதனங்களோடு ஒளிப்பதிவு செய்கின்றார் S. சாந்தன். லண்டனில் பல பாடல்கள், குறும்திரைப்படங்கள், மற்றும் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். இப்பொழுது இந்த திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றார்.மாசி மாதம் முதலாம் வாரம் ஊட்டியில் இந்த திரைப்படத்தின் குழுமம் படப்பிடிப்பிற்கு களமிறங்குகிறது. முற்றும் முழுவதுமாக ஊட்டியிலேயே திரைப்படம் படமாக்கப்படவுள்ளது. வர்த்தக ரீதியாக லண்டனில் நாயகனின் அறிமுகப்பாடல் ஒளிப்பதிவாக்கபட உள்ளது. உங்களுடைய எண்ணங்களிற்கும், எதிர்ப்பார்புக்களிற்கும் இத் திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமையும்.
(தமது இணையத்தளம் & ஊடகங்களில் வெளியிட முடிந்தவர்கள் இந்த பதிவை தயவு செய்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நமது கலைஞர்களை நாமே வளர்த்தெடுப்போம்–மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு! —-ஈழம்ரஞ்சன்)

Aucun commentaire:

Enregistrer un commentaire