இராணுவத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக தைப்பொங்கல் நிகழ்வுகள் ஆணையிறவு பகுதியில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி லெப.ஜெனரல் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதி மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது, கிளிநொச்சி சென். திரேசா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும், அம்பாறை மாவட்ட இசை கலைஞர்களின் 'முகமூடி தயாரிப்பு' எனும் தொனிப்பொருளிலான நாடகமும் இடம்பெற்றன.
இதேவேளை, ஆனையிறவு இராணுவ முகாமிற்கு அருகாமையில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பொங்கலை முன்னிட்டு இராணுவத்தினரால் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியின் இராணுவ பிரிகேட்டுக்களின் தளபதிகள் உள்ளிட்ட இராணுவ தளபதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இப்பகுதியானது போரின் போது விடுதலைப்புலிகளால் பின்வாங்கப்பட்ட பகுதியென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
.
Aucun commentaire:
Enregistrer un commentaire