dimanche 13 janvier 2013

வேறொரு சம்பவம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆறு பேர் கைது


பேருந்தில் சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வேறொரு சம்பவம் தொடர்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஆண்கள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழாவது நபரைப் பொலிசார் தேடிவருகின்றனர்.
பேருந்தில் தனியொரு பயணியாக இந்தப் பெண் இருந்த சந்தர்ப்பத்தை அப்பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் பயன்படுத்திக்கொண்டு, அப்பெண்ணின் கிராமத்தில் வண்டியை நிறுத்தாமல் ஒதுக்குறமான வீடொன்றுக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று மேலும் ஐந்து பேரை அவ்விடத்துக்கு வரவழைத்து மாற்றி மாற்றி அப்பெண்ணை வன்புணர்ச்சி செய்துள்ளனர் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தில்லியில் சென்ற மாதம் இதேபோல இளம் மாணவி ஒருவர் பேருந்தில் வைத்து பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, பாலியல் வல்லுறவுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற குரல்களையும் ஒலிக்கச்செய்திருந்தது.

Aucun commentaire:

Enregistrer un commentaire